Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Friends, Chillzee KiMo is all set to be released 👏👏! Please visit Chillzee KiMo website - www.kimo.chillzee.in to learn about the subscription plans and other details.

Friends, Chillzee KiMo is all set to be released 👏👏! Please visit Chillzee KiMo website - www.kimo.chillzee.in to learn about the subscription plans and other details.

 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
கவிதை - என்னவரே - ரம்யா - 5.0 out of 5 based on 2 votes
Pin It

கவிதை - என்னவரே - ரம்யா

kolam

காலையில வாசலில கோலம் போடகுனிஞ்சிருந்தேன்

உங்க ஏரு மாடு சத்தத்தில ஏரெடுத்து பார்த்துபுட்டேன்

பாவாடை பொண்ணு இப்போ தாவணி போட்டதே ன்னு

என்னை பார்த்து சிரிச்சி போனீரு மனச தான் திரிச்சி போனீரு

 

உம்ம சிரிப்புதான் என் வெக்கம் எழுப்பிடுச்சு

புரியாத எண்ணமெல்லாம் புல்லரிக்க வச்சிடுச்சு

சாமக்கோடாங்கி சொன்னதெல்லாம் நிசம்தானோ

இந்த அல்லி ராணி அடக்க வந்த அர்ச்சுனரு நீர் தானோ

 

உம்ம பார்க்கத்தான் இராப்பகலா தவமிருந்தேன்

என் அப்பனுக்கு கஞ்சிகளையம் சுமக்கவும் சம்மதிச்சேன்

முண்டாசு கட்டகிட்டு ஏருமாடு விரட்டிகிட்டு நிலத்ததான் உழுதீரோ

இல்ல என் மனச தான் உழுதீரோ

 

என் அப்பனோட கஞ்சிய பங்கு போட வந்தீரு

வாசந்தான் ஆளை தூக்குதுன்னு சொன்னீரு

கொண்டுவந்த கஞ்சிய கேட்டுவாங்கி குடிச்சிபுட்டு கண்ணடிச்சி போனீரு

உழுத எம்மனசுல தான் காதல் விதையப் போட்டீரு

 

விதைச்ச நிலத்த நல்லாத்தான் பார்த்தீரு

அப்ப்போ கண்ணால தண்ணி ஊத்தி போனீரு

விதை இப்போ மரமாத்தான் உசந்து வளர்ந்துடுச்சு

நீர் பறிக்க பழமும் நிறைய காய்ச்சிடுச்சு

 

பழுத்த பழமெல்லாம் பாரமாய் தான் ஆனது

மூச்சுகாத்தும் இப்போ  வெக்கையாய் போனது

பஞ்சு மெத்தையும் முள்ளாய் தான் குத்துது

உம்ம நெஞ்சு மெத்தை ஏற மனசும் தவிக்குது

 

உங்க பேரு கேட்டாலே நெஞ்சு துடிக்குது

உம்ம கண்ணு பார்த்தாலே மனசு கிறங்குது

உம்ம கை ப்பட்டாலே வயசும் பூக்குது

உம்ம புள்ள நான் சுமக்க என் மடியும் ஏங்குது

 

மல்லுவேட்டி கட்ட மாட்டீர் நீர் மைனர் செயின் போடமாட்டீர்

சோத்துல பலர்கைவைக்க சேத்துல நீர் கால் வைப்பீர்

உம்ம வியர்வைநீர் துடைக்க ஒரு சீலை மட்டும் கொண்டுவாரேன்

சம்மதம் சொல்லும் ராசா உம்ம கூடவே நானும் வரேன்

Pin It

About the Author

Ramya

Completed Stories
Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: கவிதை - என்னவரே - ரம்யாmahinagaraj 2019-02-11 17:16
வார்த்தைகளில் மட்டும் வர்ணிக்கமுடியவில்லை தோழி.. :hatsoff: :clap: :lol: :clap:
மனதிற்கு இதமாகவும், ஏக்கமாகவும் உள்ளது தோழி.. அற்புதம்.. ;-) :GL:
:thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - என்னவரே - ரம்யாkarna 2019-02-11 18:41
நன்றி
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - என்னவரே - ரம்யாAdharvJo 2019-02-11 17:01
aha aha aha sema lines ma'am :clap: :clap: feel good poem. THank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - என்னவரே - ரம்யாkarna 2019-02-11 18:40
Thank u
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - என்னவரே - ரம்யாRaVai 2019-02-11 06:32
Super, Ramya!
அந்தக் கிராமத்து மொழிக்குத்தான் எத்தனை வசீகரம்!
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - என்னவரே - ரம்யாkarna 2019-02-11 10:02
நன்றி ஐயா
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top