(Reading time: 2 - 4 minutes)

கவிதை - வாழ்ந்து பார் - ரம்யா

liveLife

தினம் தினம் பணத்தின் பின்னால் ஓடும் மனிதா !நில் !

எப்போது வாழப் போகிறாய் ?

 

அறுபதை கடந்த பிறகா ?

அல்லது

நரை கூடி நாடி தளர்ந்த வாழ்க்கையின்

இறுதி நாட்களிலா?

 

ஒவ்வொரு நாளும் கலையில் இன்று

 எவ்வளவு இலாபம் பார்க்கலாம் என்று நினைகிறாயே

என்றாவது காலையில் கானம் பாடும் குயிலின் இசை கேட்டதுண்டா ?

 

சிறு குழந்தையாய் இருந்த  போது இயற்கையை நேசித்த நீ

இன்று செயற்கை புன்னகையிலும் அவசர வாழ்வியலிலும்

அதை தொலைத்து விட்டாயே

 

விண்மீன் பார்க்க மின்வெட்டு கேட்ட  நீ

இன்று மின்வெட்டு வந்தால் தொலைக்காட்சி அலறல்கள் போய்விடுமோ என்று அஞ்சுகிறாய். 

 

இப்படி சின்ன சின்ன சந்தோஷங்களை புதைத்து விட்டு

அதன்மேல் தங்க கட்டிலும்,பன்னீர் தெளித்த படுக்கையும் போட்டு

தூங்க நினைக்கிறாய் ,தூக்கம் எப்படி வரும் ?

 

இன்றும் குயில்கள் பாடுகின்றன

வானம் பல வண்ண ஆடை அணிகிறது

மேகம் பன்னீர் சொரிகின்றது

 மரங்கள் தலை அசைத்து சிரிகின்றன

பார் கண் விழித்து பார்

கேள் செவிமடுத்து கேள்

 

அவசர வாழ்விலிருந்து ஓய்வு பெறு ,

செல்போன்  மற,

தொலைக்காட்சி தொலை ,

கடற்கரை செல் ,

அலைகளோடு பேசு.

விளையாட்டு மைதானம் செல்,

சிறுவர்களோடு  விளையாடி பார் .

 

கதிரவன் சாயும்காலம்  பறவைகள் தங்கள் கூடு நோக்கி பறப்பதை பார் ,

அழகான திரையில் வானம் வைக்கும் புள்ளிகளை பார் ,

மரங்களோடு புன்னைகைத்துப்  பார்,

முடிந்தால் வீட்டில் ஒன்றை வளர்த்துப்  பார் ,

வான மழை ரசிக்க தொடங்கு .

 

அடுத்த கடைகுக் கூட வாகனத்தில் செல்லாமல் காலாற நடத்து பார் ,

கணிணி மட்டுமே அறிந்த கண்களுக்கு புத்தகம் என்னும் அற்புதம் காட்டு ,

இரவு நேரத்தில் காதுகளுக்கு  இதமான இசை அமுதம் ஊட்டு ,

 

களைத்துப் போன கைகளுக்கு பேனா கொடு ,

பணம்  சிந்திக்க மட்டுமே பழக்கப்பட்ட  மனதுக்கு வாழ்வியலும் சிந்திக்க பழக்கு .

குறையோ ,நிறையோ ,சோகமோ ,சந்தோஷமோ  எழுதி பார்

 

இப்படியும் மறு முறை வாழ்ந்து பார் !

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.