Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
கவிதை - தாலாட்டு - ரம்யா - 5.0 out of 5 based on 2 votes
Pin It

கவிதை - தாலாட்டு  - ரம்யா

lullaby

தாலேலோ தாலேலோ கண்மணியே தாலேலோ

தாலாட்ட அன்னை மடி தவம்கிடக்குதடி தாலேலோ

 

அலரியோனும் அவன் அன்னைமடி ஒடுங்கிவிட்டான்

அம்புலியோனும் இன்று அவசரமாய் எழுந்துவிட்டான்

அமுத மொழி பேசும் அம்புஜமே நீ மட்டும் உன்

அல்லி விழி மூட அடமும் பிடிப்பதேனோ?

 

அத்தை பாட்டி தாத்தா மாமா என்று கூட்டமும் இல்லையடி

ஆளுக்கொரு வாய் ஊட்டி சீராட்ட முடியாதடி

அமைஞ்சதெல்லாம் அட்டைபெட்டி கூடு தானடி

அன்னமே கலங்காதே அன்னை மடி இறங்காதே

 

ஓயாமல் உனக்கும் விளையாட ஆசை தான்

ஒவ்வொரு நாளும் வீட்டுக்குள் திருவிழா தான்

ஓடை நீர்போல அழகாய்தான் ஓடிவந்து

ஒய்யாரமா என் மடியில் ஓய்வெடு என் ஓரழகே

 

மாடிவீட்டு மாமனோ அடுத்தவீட்டு அண்ணணோ

விளையாட உனை அழைச்சா என் நெஞ்சும் பதறுதடி

நீ அறியாத விஷயமெல்லாம் புரியவைக்க முடியாம

பத்திரமா போய்வான்னு சொல்லகூட கூசுதடி

 

மடியில் சாயும்  நித்திலமே கண் மயங்கும் கார்முகிலே

பல வழி நீ கற்க பரந்த பூமியில் வழி இருக்கு

பெற்றவள் பேச்சும் காதில் சில போட்டு வை

அப்படியே மனசுக்குள்ளும் கொஞ்சம் பதிய வை

 

பெண்ணாகி வளர்ந்ததும் பணம்பின்னாடி போகாதே

ஆணாக நீ மாறி ஆதிக்கம் பண்ணாதே

நாணம் என்பது இழிவல்ல  நன்குணர்

தீரமும் வேண்டும் பண்பு அதையும் நன்கு வளர்

 

புனிதம் என்பது புலனடக்கம் புரிந்துகொள்

பண்பாடு பழயதல்ல பழமை பற்று கொள்

புல்லுருவி பெண்ணாணாலும் புரிந்து பிரித்து வை

பாரதியாய் நீ மாறி பாவிகளையும் பணியவை

 

ஆணும் பெண்ணும் இயற்கையின் இரட்டை

அதில் ஈர்ப்பு என்பது இயக்குநீரின் சேட்டை

ஆபத்து வலைகள் பல விரிந்திருக்கும் தளராதே

அறிவாற்றல் பயன்படுத்து உனை எதுவும் வீழ்த்தாதே 

 

தாலேலோ தாலேலோ கண்மணியே தாலேலோ

தவமாய் வந்தவளே

 தரணி தழைக்க வந்தவளே

 தாலேலோ தாலேலோ  தங்கமணி தாலேலோ

Pin It

About the Author

Ramya

Completed Stories
Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: கவிதை - தாலாட்டு - ரம்யாதங்கமணி சுவாமினாதன். 2019-06-12 17:11
மிக அருமையான ... அர்த்தமுள்ள தாலாட்டுக்
கவிதை..வெகு சிறப்பு..பாராட்டுக்கள் ரம்யா :hatsoff:
:clap: :clap:
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - தாலாட்டு - ரம்யாhari k 2019-06-12 12:45
Very superbb..... (y) (y) unmaiyai alagaga eduthu solirukiga
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - தாலாட்டு - ரம்யாAdharvJo 2019-06-11 19:39
:clap: :clap: rombha azhaga 😍😍 and azhuthama solli irukinga. Superb 👌 :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - தாலாட்டு - ரம்யாRamya..karna 2019-06-12 10:43
Thanks a lot :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - தாலாட்டு - ரம்யாரவை.. 2019-06-11 18:12
ரம்யா! ரொம்ப ரொம்ப பிரமாதமான, கருத்துள்ள, காலத்துக்கேற்ற அருமையான கவிதை! நெஞ்சார்ந்த பாராட்டும் வாழ்த்தும்! நிறைய எழுதுங்கள்! தேவையான கருத்துக்களை பரப்புங்கள்!
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - தாலாட்டு - ரம்யாRamya..karna 2019-06-12 10:43
நன்றி ஐயா.தங்கள் வாழ்த்துக்கள் பெரிய உத்வேகம்
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top