(Reading time: 1 - 2 minutes)
humanity

கவிதை - இட்டலி - ரம்யா

ஆவியில நீ வெந்து ஆகுறியே இட்டலி

உன் சரி ஜோடி தேங்கா சட்டினி

 

இந்தோனேசியா அரசு குடும்பம் உனை தந்ததப்போ

ஏழைபாழை வயிறு நிறைக்கும் எளிய உணவு இப்போ

 

அரிசி உளுந்து கலவை புளிச்சி ஆகுது உன் மாவு

மெத்துன்னு நீமாற ஆனியே மல்லிக பூவு

 

பல்லில்லா புள்ளக்கூட உன்ன தள்ளும் உள்ள

நோகாம சீரணிக்கும் நீதான் நல்லப்பயப்புள்ள

 

எரிசக்தி புரதம் நாரு என உன்னுடைய மதிப்பு

எதுவந்து சேர்ந்தாலும் ஏறாது உன் கொழுப்பு

 

காலை உணவு அவசரத்தில் உன்ன நாங்க சமைக்க

எழுநாறு வருஷமாத்தான் எங்க மண்ணில் இருக்க

 

உலகமே உன்ன உத்து பார்த்தது முப்பது மார்ச்சு

அது உனக்கான ஒரு தினமா ,இட்டிலி தினமா ஆச்சு

 

பலநூறு இரகமரகமா உணவு வந்தது சந்தை

ஆனாலும் அழியாமல் அசத்தும் நீதான் ஒரு விந்தை

 

உன்னோடு ஒரு துணையா சீனிநெய்யே போதும்

தினம் உணவா நீயிருந்தா தேவேயில்ல ஏதும்

 

இட்டிலி! நீ பல ஆண்டு வாழவேண்டும் இங்க

அடசூடு ஆறப்போகுதுங்க  தின்ன உடனே போங்க

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.