Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
கவிதை - மணவாளனுக்கு மங்கையின் ஓலை..! - சந்யோகிதா - 5.0 out of 5 based on 2 votes
Pin It

கவிதை - மணவாளனுக்கு மங்கையின் ஓலை..! - சந்யோகிதா

Love

என் மன்னவனே..!

ஏழை மங்கையின் அன்புக்குரலை

சற்று செவிமடுத்துக்கேள்..!

வாழ்க்கைப் புத்தகத்தை புரட்டிக்கொண்டிருக்கிறேன்..

நம் மனம் இணையும் அத்தியாயத்தைத் தேடி..!

ஏனோ காணும் தாள்களனைத்தும்

வண்ணக்கவிதைகளின்றி வெறுமையாகவே..!

இருந்தும் முயற்சிக்கிறேன்..

எதிலேனும் உன் திருமுகம் காணக்கிடைக்காதா என்று…!

சமயங்களில் இதிகாச கதைகளை வாசிக்கையில்

நாயகனாக உனை எண்ணி காதல் வரைகிறேன்..!

சமயங்களில் எதிர்ப்படும் தம்பதிகளின் வீதிஉலா கண்டு

நம் வாழ்விற்கு கற்பனையில் உயிர் தருகிறேன்..!

சில சமயம் காணொளிகளின்

பசுமை சூழ்ந்த பரப்புகளிலும்

பனிக்கட்டி பரவிய சமதளங்களிலும்

மரங்கள் அடர்ந்த கானகங்களிலும்

நீயும் நானும் மட்டும்…!

அந்தரங்கப் பொழுதுகளிலும் அனுமதியின்றி

என் ஆழ்மனதில் உறைகிறாய்..!

உணவுன்கையில் எச்சுவை உனை மயக்கும்..?

உடையுடுத்துகையில் எவ்வண்ணம் உனை கவரும்..?

இசையில் வசமிழக்கையில் நான் களவு போன எந்தப்பாடல்

உனைக் கவரும்..?

நித்தமும் உன் நினைவில் என் நினைவிழந்து பைத்தியமாகிறேன்..!

பயணங்களில் முகத்தில் வருடிச்செல்லும் தென்றலை

முந்திக்கொண்டு மனதில் உன் முத்தங்கள் பதிக்கிறாய்..!

என் தனிமை இருளிலும் உன்

நினைவுகளினால் (கனவுகள்) ஒளி தந்து செல்கிறாய்..!

பெற்றோரும் உற்றோரும் உடனிருந்தும்

என் மனமோ மண்டியிடுகிறது..

உன் கனவுகள் சூழும் தனிமையைத் தேடி..!

எதிர்பார்ப்பில்லாத எதுவும் உலகில் இல்லையென்று

என் செவிகள் கேட்டதுண்டு..

ஆனால் அவை பொய்யென உன் கனவுகள் உறக்கச்

சொல்லிவிட்டுச் செல்கின்றன..!

எனைச் சூழ்ந்தோரின் மனவோட்டம் உணர்கையில்

என் உள்ளத்தில் ஆயிரமாயிரம் அக்கினிப்பிழம்புகள்..!

ஆர்ப்பரிக்கும் ஆழியாய் சிலர்..

அமைதியான ஆற்றுச்சுழலாய் சிலர்..

இப்படி இன்னும் பல..!

இவற்றுள் எதை இந்த பேதையின் விழிகள் நம்பும்..?

எவற்றை உண்மையென என் உள்ளம் கொள்ளும்..?

ஆதரவுதரும் கரங்களும்

அனைத்துக்கொள்ள முன்வரவில்லை..

அழுதிடவே வழிகாட்டுகிறது..!

தொலைவில் மிரட்டும் மிருகங்களும்

மிரளவைக்கும் காட்டாறுகளும்

பயமுறுத்தும் முட்புதர்களும்

ஓங்கி வளர்ந்து பாதை மறைக்கும் மரங்களும்

எந்தன் இருண்ட பாதையில் பின் தொடர்ந்தே வருகின்றன..!

புத்தகங்களே சிறந்த நண்பனாம்..!

ஆசான் ஒருவரின் கூற்று என் செவியில் பாய

பேசா மொழி அறிந்தும் பேச்சறியா

புத்தகத் தாள்களினுள் எனை மறைத்துக்கொள்கிறேன்..!

அங்கேயும் என் கண்ணை எட்டும் எழுத்துகள்

கருத்தினை எட்டும் முன் ஏணிப்படியேறி

என் மதிக்குள் நுழைகிறாய் நீ..!

விளைவாக..

உனையன்றி வேறெதையும் சிந்திக்க

என் சிந்தனை என்னிடம் சண்டையிடுகிறது..!

சில வேளைகளில் கோபம் கொண்டு உறக்கத்தில் ஆழ்கிறது

அதன்பயனாக…

பகற்பொழுதில் மீளா உறக்கத்தில் நான்..!

உலகம் உறங்கும் இரவுப்பொழுதினில்

இமைகள் உறங்காமல் நீ இடம் பிடித்துக்கொள்கிறாய்..!

காந்தப்புலம் கொண்ட உன்முகம் காணாமல்

காதல்பேசும் உன் மொழி கேளாமல்..

நேசம் நிறைந்த உன் நெஞ்சறியாமல்..

               அன்பர் சந்நதியாம் உன் முகவரியறியாமல்..

எப்படி என் மனம்

உன்னிடம் சரணடைந்ததோ நானறியேன்..!

இறைவன் படைத்த அதிசயம் பல உண்டு

அவற்றில் ஒன்றாய் என் மனமும் அதன் காதலும்..!

பொறுத்தார் பூமியாள்வாராம்..

இதுவும் சான்றோரின் வாக்கு

நானும் காத்திருக்கிறேன்..!

ஈராயிரம் வருடத்தின் முன்பு

நிழலண்டிக் கிடந்த கானகத்தினுள்

அல்லிப்பூக்களும் தாமரைப்பூக்களும்

மலர்ந்திருந்த நீர்த்தடாகத்தில்

எனைக் காதலால் களவுகொண்டு சென்ற

என் காதலன் உனக்காக..!

Pin It

About the Author

Sanyogita

On-going Stories
Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: கவிதை - மணவாளனுக்கு மங்கையின் ஓலை..! - சந்யோகிதாRanju 2019-06-08 09:45
மிகவும் அருமையான கவிதை😍😍... தங்களின் காதல் கணவன் உங்களின் காதலில் கரைவதற்கு மிகவும் குடுத்து வைத்தவர்😋😋... :dance: :GL:
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - மணவாளனுக்கு மங்கையின் ஓலை..! - சந்யோகிதாAdharv 2019-06-06 17:24
beautiful lines ma'am :clap: :clap: :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - மணவாளனுக்கு மங்கையின் ஓலை..! - சந்யோகிதாரவை.. 2019-06-06 08:58
அந்தக் காதலன் ரொம்ப கொடுத்து வைத்தவன்! இப்படி ஒரு காவியம் படைக்கிற தமிழச்சி! உணர்வுகளை சொற்களில் வடிக்கும் திறமைசாலி! ஆமாம், அதென்ன ஈராயிரம் வருடங்கள் முன்பு நடந்தது?
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - மணவாளனுக்கு மங்கையின் ஓலை..! - சந்யோகிதாசந்யோகிதா 2019-06-06 14:33
ஹா..ஹா.. நன்றி ரவை ஜி :-) :thnkx:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top