(Reading time: 1 - 2 minutes)

கவிதை - ஓய்ந்து விடுங்கள் - தானு

takeRest

பாறை நடுவே சிக்கிக் கிடக்கும் சோக
உணர்வுகளப் பிரித்து எடுத்து 
ஓய்வு கொடுத்தேன் நானாக

உரித்த உடமைகள்
உரிமையற்று வெறுமையாக
உதிர்ந்து கிடக்கிறது
ஓய்ந்து விடுங்கள்


வடித்த கண்ணீர் பலனற்று
வரையறைகளற்று 
வரம்பு மீறியது
ஓய்ந்து விடுங்கள்


சரிந்த உடலில் சலனமில்லை
சகித்துக் கொள்ள
சமயம் இல்லை
ஓய்ந்து விடுங்கள்


போரில் சிதைந்த உயிர்
போகும் இடம் அறியாது 
பாடையிலே கிடக்கின்றன
ஓய்ந்து விடுங்கள்


வீரத்தை வீசி எறிந்து
வீராப்பாய் வீறு கொண்டீர்
வீடிழந்து வீணாய்
வீதி வழி அலையத்தானோ
ஓய்ந்து விடுங்கள்


இரத்தக் குழல்களிடையே
துப்பாக்கி குண்டு
இன்னும் ஏன் இந்த போராட்டம்
ஓய்ந்து விடுங்கள்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.