(Reading time: 1 - 2 minutes)

கவிதை - நீரற்ற குடமும் நிழலற்ற தடமும் - ரவை

handsProtest

நீரற்ற குடமும், நிழலற்ற தடமும்,
 
 நீரிலாநெற்றியும்நாணமிலாபெண்ணும்,
 
 சீரற்ற கவியும், சாரமிலாசொல்லும்
 
 வீரமிலாஅரசும்மெய்இலா பண்ணும்
 
 கூர்மையிலாவாளும்சுத்தமிலாநீரும்
 
 பார்வையிலாகண்ணும்பயிரிடாவயலும்
 
 நாற்றமிலாமலரும்நன்மைதராசெயலும்
 
 ஓர்பயனும்இல்லாஉமிழ்கின்ற எச்சில்!
 
 
 
 பயன்தரா செல்வமும் பண்பிலாஆணும்
 
 நயமிலாகவிதையும்நரம்பிலாவீணையும்
 
 செயற்படா வீரமும் சுவையிலா கனியும்
 
 வயலற்ற பயிரும் மழையற்ற நிலமும்
 
 உயர்விலாபதவியும் உரமிலா மரமும்
 
 முயலாத ஆசையும் வளமிலா நிலமும்
 
 வியக்காதவித்தையும்மடையிலாஆறும்
 
 துயரத்தின் ஊற்று! அதற்கேதுமாற்று!
 
 ஊரறிய உண்மைகளை உரக்கச் சொல்வோம்!
 சீருயரும்தமிழ்மக்கள் செழிக்கச் செய்வோம்!
 மாறுதலைவளர்ச்சிக்கு வித்தாய் ஏற்போம்,
போராடி பொய்மைதனை கொன்றழிப்போம்!

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.