கவிதை - அம்மா! என நினைத்தவுடன் - ரவை

அம்மா! என நினைத்தவுடன்
அங்கமெலாம் சிலிர்க்குதம்மா!
அம்மா, என ஆயிரம் முறை
அழைத்திடவே ஆசையம்மா!
சும்மாவா சொன்னார்கள்,
சுமந்தவள்தான் சொர்க்கமென!
விம்மி அழும்போதும் அம்மாவை
வாயழைக்கா சேயுண்டா?
வேண்டித் தவமிருந்து சேயை
வயிற்றில் பலமாதம் சுமந்து
ஆண்டவன் அருளாலே பெற்று
அனுதினமும் கொஞ்சிமகிழ்ந்து
கண்ணுக்குள் வைத்து வளர்த்து
கனியமுதாய் தாலாட்டுப் பாடி
எண்ணமெலாம் எந்நாளும் அதனை
இதயத்தில் வைத்தன்றோ வளர்த்தாய்!
எத்தனையோ அம்மாக்களிடையே
என் அம்மா ஈடில்லா தெய்வம்!
பத்துமாதம் சுமந்து சுமந்து
பன்னிரண்டையன்றோ பெற்றாய்!
பெற்றதில் மூன்றை பறிகொடுத்து
பத்திரமாய் ஒன்பதனை வளர்த்தாய்!
கற்பித்தாய் அத்தனைக்கும் அன்பை,
கடலளவு நல்லொழுக்கச் சிறப்பை!
அடுப்பு எரியும் உன்வீட்டில் எப்போதும்,
அனைவர்க்கும்உணவுண்டு தப்பாமல்!
அடுக்கடுக்காய் நெருக்கடி வந்தாலும்
அத்தனையும் எப்படியோ சந்திப்பாய்!
உடுக்கை இழந்தவன்கைபோலே
இடுக்கண் களைய உதவிடுவாய்!
கடுகளவும் உன்முகத்தில் ஒருநாளும்
கோபத்தை எவருண்டு கண்டவர்கள்?
சாதிமதம் பாராமல் சமுதாயத்தில்
சகலவித நல்லெண்ணம் நல்கிடுவாய்!
ஆதிபராசக்தியுன் இஷ்டதெய்வம்!
அனுதினமும் அவளுக்கு பூசையுண்டு!
வீதியில் வளர்கின்ற நாய்களையும்
வாய்குளிர பைரவரென்றழைத்திட்டு
நிதமும் தவறாமல் உணவளிப்பாய்!
நிறைவான அன்போடு நேசிப்பாய்!
உறவினர்கள் உன்வீட்டை தன்வீடாய்
உணர்ந்தங்கே பலநாளும் தங்கிடுவார்!
சிறப்பாக உபசரித்து மகிழ்விப்பாய்!
களங்கமிலா அன்புடனே நேசிப்பாய்!
தருமங்கள் செய்திடுவாய் கணக்கின்றி!
துன்பத்தை துடைத்திடுவாய் ஓய்வின்றி!
கருவில்வளர் சிசுகூட உன்பெயரை
கேட்டவுடன் மகிழ்ச்சியிலே கூத்தாடும்!
எப்படித்தான் எங்களைநீ குறையின்றி
ஏற்றமுடன் வளர்த்தாயோ, யாரறிவார்?
செப்பிடுவித்தையெனில், தவறில்லை!
சிந்தித்தும் அதன்மர்மம் புரியவில்லை!
ஒப்புரைக்கமுடியாத அன்னைநீ!
உயர்வெமக்கு அளவின்றி தந்தவள்நீ!
ஒப்பில்லா தாயினத்தின் தலைமகள்நீ!
அம்மா என்றழைப்பதெங்கள் பெருநிதி!
{kunena_discuss:779}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.