Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

Chillzee KiMo

Chillzee KiMo Tamil - English Novel ContestChillzee KiMo Only Books

***   Please read this forum post for an announcement from our Team - 10th April 2020                                                               ***   Please read this forum post for an announcement from our Team - 10th April 2020
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
கவிதை - இனி எங்கள் காலம்! - ரவை - 5.0 out of 5 based on 2 votes
Pin It

கவிதை - இனி எங்கள் காலம்! - ரவை

படிச்சியா, மச்சான்!
பிரியசகி பாட்டை!
அடிச்ச அடி போதுமா?
இன்னும் கொஞ்சம் வேணுமா?

முடிஞ்சுது உங்களாட்டம்!
விடிஞ்சுது எங்க காலம்!
தடியெடுத்து தப்புசொன்ன
தர்பாரும் கலைஞ்சிடுத்து!

இனிபாரு, சில்சீலே
கிழிகிழின்னு கிழிப்பாங்க!
தனித்தனியா கட்டிவைச்சு
தோலுரிக்கப் போறாங்க!

பிரியசகி தலமையிலே
பெரும்படை எழுந்தாச்சு!
கூரிய சொற்போரும்
தொடுக்கப் போறாங்க!

இதுஉனக்கு அச்சாரம்!
இடிமுழக்கம் வந்தாச்சு!
புதுப்பிறவி எடுத்தாச்சு!
பெண்களும் விழிச்சாச்சு!

அப்பப்பா! உன்கொடுமை
அடுக்கடுக்கா சொன்னாளே!
தப்பாமல் உன்காதில்
குண்டுகளாய் வெடிச்சாளே!

ஓராண்டா, ஈராண்டா!
ஒருகோடி நூற்றாண்டு!
போராடி நசுக்குண்டு
பதராகி மாய்ந்தோமே!

எங்களுக்கும் காலம்வரும்
என்றிருந்தோம் பலகாலம்!
சங்கொலி கேட்டாச்சு!
சந்திக்கு இழுத்தாச்சு!

நடுத்தெருவில் நிக்கவச்சு
நாலுபேரை சிரிக்கவச்சு
அடுத்தடுத்து ஆணினத்தை
அழவைச்சு அடக்கிடுவோம்!

ஜெபமலரும் மதுமதியும்
ரம்யாவும் ரேகாவும்
உபரியா பலபேரும்
உன்தோலை உரிப்பாங்க!

உப்புடனே மிளகாயை
ஒண்ணா கலந்தரைச்சு
கொப்புளங்கள் மேலேநீ
தடவித் தவிப்பாயே!

அம்மாஅம்மா என்றலறல்
அத்தனைபேர் காதினிலே
தெம்மாங்காய் இனித்திடுமே!
பெண்ணினமே மகிழ்ந்திடுமே!

Pin It

About the Author

RaVai

RaVai's Popular stories in Chillzee KiMo

  • Avan kaathil vizhumAvan kaathil vizhum
  • Nee en amma illaiyaaNee en amma illaiyaa
  • Anbin aazhamAnbin aazham
  • AzhaguAzhagu
  • Gangai oru MangaiGangai oru Mangai
  • Nee orumuraithaan vazhgiraaiNee orumuraithaan vazhgiraai
  • Naan oru thavarum seiyyalaNaan oru thavarum seiyyala
  • VithiyasamaanavanVithiyasamaanavan

Completed Stories

-NA-

On-going Stories
Add comment

Comments  
# கவிதை - இனி எங்கள் காலம்! - ரவைVinoudayan 2020-03-24 16:50
Super :clap:
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - இனி எங்கள் காலம்! - ரவைரவை oஉ 2020-03-24 17:18
Thanks, dear Vinoudayan!
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - இனி எங்கள் காலம்! - ரவைJebamalar.. 2020-03-24 11:39
அருமையான கவிதை. பெண்களுக்கு துணையாய் தங்களைப் போல ஆண்களும் வருவார். பெண்களை போதைபொருளாய் பார்க்கும் ஆண்களை துவம்சம் செய்ய கிளம்பி விட்டது பெண்கள் படை... சூப்பரோ சூப்பர் சார் :hatsoff: :hatsoff: (y)
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - இனி எங்கள் காலம்! - ரவைAdharvJo 2020-03-24 13:15
Quoting Jebamalar..:
அருமையான கவிதை. பெண்களுக்கு துணையாய் தங்களைப் போல ஆண்களும் வருவார். பெண்களை போதைபொருளாய் பார்க்கும் ஆண்களை துவம்சம் செய்ய கிளம்பி விட்டது பெண்கள் படை... சூப்பரோ சூப்பர் சார் :hatsoff: :hatsoff: (y)
I second you @jema ma'am.
Sema podu uncle 👏👏👏👏👏

Thank you.
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - இனி எங்கள் காலம்! - ரவைரவை oஉ 2020-03-24 13:18
Thanks, Adharva!
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - இனி எங்கள் காலம்! - ரவைரவை oஉ 2020-03-24 13:23
Dear Jeba! இந்தப் பாட்டை தெருமுழக்கமா எல்லாரும் பாடணும்! கொரானா கொடுமையிலேகூட, ஐந்து வயசு, ஏழு வயசு, பெண் குழந்தைங்களை கெடுத்துட்டு, கொலை செய்கிற பொறுக்கிகளை சுட்டுப் பொசுக்கணும்! அச்சாரமா, சில்சீ வாசகர் அத்தனை பேரும் இந்தக் கவிதைக்கு விமரிசனம் எழுதணும், செய்வாங்களா?
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top