(Reading time: 2 - 3 minutes)

கவிதை - இனி எங்கள் காலம்! - ரவை

படிச்சியா, மச்சான்!
பிரியசகி பாட்டை!
அடிச்ச அடி போதுமா?
இன்னும் கொஞ்சம் வேணுமா?

முடிஞ்சுது உங்களாட்டம்!
விடிஞ்சுது எங்க காலம்!
தடியெடுத்து தப்புசொன்ன
தர்பாரும் கலைஞ்சிடுத்து!

இனிபாரு, சில்சீலே
கிழிகிழின்னு கிழிப்பாங்க!
தனித்தனியா கட்டிவைச்சு
தோலுரிக்கப் போறாங்க!

பிரியசகி தலமையிலே
பெரும்படை எழுந்தாச்சு!
கூரிய சொற்போரும்
தொடுக்கப் போறாங்க!

இதுஉனக்கு அச்சாரம்!
இடிமுழக்கம் வந்தாச்சு!
புதுப்பிறவி எடுத்தாச்சு!
பெண்களும் விழிச்சாச்சு!

அப்பப்பா! உன்கொடுமை
அடுக்கடுக்கா சொன்னாளே!
தப்பாமல் உன்காதில்
குண்டுகளாய் வெடிச்சாளே!

ஓராண்டா, ஈராண்டா!
ஒருகோடி நூற்றாண்டு!
போராடி நசுக்குண்டு
பதராகி மாய்ந்தோமே!

எங்களுக்கும் காலம்வரும்
என்றிருந்தோம் பலகாலம்!
சங்கொலி கேட்டாச்சு!
சந்திக்கு இழுத்தாச்சு!

நடுத்தெருவில் நிக்கவச்சு
நாலுபேரை சிரிக்கவச்சு
அடுத்தடுத்து ஆணினத்தை
அழவைச்சு அடக்கிடுவோம்!

ஜெபமலரும் மதுமதியும்
ரம்யாவும் ரேகாவும்
உபரியா பலபேரும்
உன்தோலை உரிப்பாங்க!

உப்புடனே மிளகாயை
ஒண்ணா கலந்தரைச்சு
கொப்புளங்கள் மேலேநீ
தடவித் தவிப்பாயே!

அம்மாஅம்மா என்றலறல்
அத்தனைபேர் காதினிலே
தெம்மாங்காய் இனித்திடுமே!
பெண்ணினமே மகிழ்ந்திடுமே!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.