(Reading time: 1 - 2 minutes)

கவிதை - சொந்தம் ஒரு பந்தம்! - ரவை

இது எனது, என்னுமோர்
கொடுமையை தவிர்ப்போம்!
இது எனது சொல் அல்ல,
இனியதமிழ் கவிஞனுரை!
எதையும் சொந்தமென
இறுமாப்பு கொள்ளாதே!
சிதையில் இடும்போது
சொந்தம் உடன் வருமா?

பிறப்பினிலே எது உனது?
பணமா, பாசமா, பொருளா?
உறுப்புக்கள்கூட உனதல்ல,
உயிரொன்றே உனதுண்மை!
வெறும்கையுடன் வந்தவனே!
வாழும்போது வந்தவையாவும்
இறக்கும்போதுஉடன்வருமா?
இதை எண்ணி அறிவுபெறு!

இறைவன் தந்தவை யாவும்
இரந்து பெற்றவன் நீ!
உறைவிடம் உணவு உடை
உனதல்ல, இவையெதுவும்!
இரந்து கேட்டு எவர்வரினும்
இல்லையெனச் சொல்லாதே!
மறைவில் ஒளித்து வைக்காது
மனமுவந்து அள்ளிக் கொடு!

அன்னியரில்லை, இங்குளோர்
அனைவருமுந்தன் சோதரனே
சென்னிகுனிந்து அடங்கியிரு!
சொல்வதை சற்று சிந்திப்பாய்
மன்னும்இமயம் எவர் சொத்து
விரிகடல்,வானம் தந்ததெவர்
சொன்னவை ஏதும் எனதல்ல
கவிஞர்கூட்டம் கூறியவை!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.