(Reading time: 1 minute)

கவிதை - அப்பாவின் பாசம் - விஜயலக்ஷ்மி

dadKids

குழந்தைப் பருவத்தில்

அப்பாவின் கையை

பற்றி நடக்கவும் 

பதின் பருவத்தில்

அப்பாவின் கைகளுக்குள்

பாதுகாப்பாகவும்

திருமணத்தில் 

அப்பாவின் கை

அரவணைப்பிலும்

குழந்தை பேறு கையில்

அப்பாவின் தலை கோதலும்

என் மகளின் திருமணத்தில்

அவரின் பார்வையில்

நான் இன்னும் குழந்தையாக தெரிவது 

என் பாக்கியமே

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.