(Reading time: 1 - 2 minutes)

கவிதை - மற(றை)ந்த முகம் - ஜெப மலர்

வாழ்க்கை என்னும் நாடகமேடையில்

ஏற்றிருக்கும் கதாபாத்திரங்கள் பலபல...

தோழியாய் தாயாய் மகளாய்

சகோதரியாய் ஆசிரியையாய்

உறவுகாரியாய் வீட்டுக்காரியாய் இன்னும் பல...

ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஏற்ப

செதுக்கப்பட்ட குணங்களோடு

அமைக்கப்பட்ட வடிவங்களோடு

பொருத்தப்பட்ட பல முகங்களுக்கு நடுவே

மறந்து விடுகிறோம் நம் நிஜ முகத்தை...

நினைவுகளில் மீண்டும் நிறுத்த

மறந்துபோன முகத்தை

தேடி தேடி தொலைகிறோம் ஒவ்வொருநாளும்...

கண்டுபிடிப்போமா எனத் தெரியாமலே...

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.