Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Chillzee KiMo TEN (Tamil - English - Novel) Contest 2019


1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
கவிதை - விடை அறியா வினா - ஜெப மலர் - 5.0 out of 5 based on 2 votes
Pin It

கவிதை - விடை அறியா வினா - ஜெப மலர்

அணிகிற ஆடையும் உன்

அன்பை அடையாளம் காட்டுகிறதே...

படிக்கிற இடம்முதல் அமர்ந்து

பேசிய இடம் வரை அனைத்தும்

பாசத்தை மீட்டு தருகிறதே...

சந்தித்த இடங்களை காணும்போது

சப்தமில்லாமல் இதயம் துடிக்கிறதே...

பேச முடியாத பிரிவானாலும்

பார்க்க முடியாத தொலைவானாலும்

நெஞ்சோடு நிறைந்திருக்கும் நினைவுகள்

நேசத்தை அள்ளி தருகிறதே...

விழிகளுக்குள் நிறைந்திருக்கும் உன் முகம்

வழிந்தோடும் கண்ணீரை அறிந்திடுமா???

உள்ளத்தில் பதிந்திருக்கும் வார்த்தைகள்

உன்னோடு சம்பாஷித்திடுமா???

எண்ணங்களை ஆக்கிரமித்திருக்கும் உன் நினைவு

என் ஏக்கம் தீர்த்திடுமா???

என் மேல் நீ கொண்ட பாசம்

என்றென்றும் எனக்கு கிடைத்திடுமா???

அன்பு காட்டிய உன் இதயம்

ஆயுளுக்கும் இடம் தந்திடுமா???

வினாக்கள் ஆயிரம் எழுகிறது

விடையோ எதற்கும் கிடைக்கவில்லை....

Pin It

Add comment

Comments  
# RE: கவிதை - விடை அறியா வினா - ஜெப மலர்sasi 2019-11-25 11:26
நம்பிக்கைதான் வாழ்க்கை நம்பிக்கையிருந்தா தேவையில்லாத கேள்விகள் மனதில உருவாகாது வினாவும் எழாது விடையும் தேட வேண்டிய அவசியம் இருக்காது ஒரு ஆத்மார்த்தமான காதலனுக்கு உருவான இந்த பயம் கலந்த கவிதை அழகாதான் உள்ளது சூப்பர்
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - விடை அறியா வினா - ஜெப மலர்AdharvJo 2019-11-23 12:19
wow cute one ma'am 👏 👏 :thnkx:

What happen to Rk and reenu :Q:
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - விடை அறியா வினா - ஜெப மலர்madhumathi9 2019-11-23 10:17
:clap: (y) Arumai :clap: :GL:
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - விடை அறியா வினா - ஜெப மலர்ரவை 2019-11-23 08:17
Wav! காதல் ரசத்தை பிழிந்து பருகும் பானமாக தந்துவிட்டீர்கள்! ஒவ்வொரு சொல்லும் பல கதைகள் சொல்கின்றன! பலே!
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top