கவிதை - காதல் ஆட்டம் - ஜெப மலர்
காதல் ஒரு கண்ணாமூச்சி ஆட்டம்...
தேடி போனால் ஒளிந்து கொள்ளும்
ஒளிந்து கொண்டால் தேடி வரும்..
கண்டு பிடித்து விட்டால்
ஜெயிக்கவும் செய்யலாம்
தோற்கவும் செய்யலாம்...
ஜெயித்தால் கொண்டாடவும்
தோற்றால் தட்டி விட்டு செல்லவும்
கற்றுக் கொண்டால் அவனே ஆள பிறந்தவன்...