(Reading time: 2 - 3 minutes)

கவிதை - என் தேவதைப் பெண் - கார்த்திக் கவிஸ்ரீரீ

கார்மேகத்தில் இருந்து விழும் மழை துளிகள் அழகு என்றால்,
அவள் ஈரமான கூந்தலில் இருந்து விழும் தண்ணீர்  துளிகள் அழகு என்பேன்,

வானில் தோன்றும் மின்னல் கீற்றுகள் அழகு என்றால்,
அவள் நெற்றியில் உள்ள விபூதி அழகு என்பேன்,

வேட்டைக்காரன் கையில் வில்அம்பு அழகு என்றால்,
அவள் வில்போன்ற புருவம் அழகு என்பேன்,

மீன்களின் கண்கள் அழகு என்றால்,
என்னை கலங்க வைக்கின்ற அவள் கண்களும் அழகு என்பேன்,

ரோஜா இதழ்கள் அழகு என்றால்,
வெக்கத்தில் சிரிக்கும் அவள் உதடுகள் அழகு என்பேன்,

தேரோடு ஆடிவரும் தோரணம் அழகு என்றால்,
அவள் காதுகளில் ஆடிவரும் தோடுகள் அழகு என்பேன்,

பட்டில் செய்த துணி அழகு என்றால்,
தீண்டத்தூண்டும் அவள் மேனி அழகு என்பேன்,

போருக்கு பலம் சேர்க்கும் வீரர்களின் படை அழகு என்றால்,
பெண்மைக்குறிய அவள் இடை அழகு என்பேன்,

துள்ளிக்குதிக்கும் மான்கள் அழகு என்றால்,
மெல்ல நடக்கும் அவள் கால்கள் அழகு என்பேன்,

சிற்பி வடித்த சிலை அழகு என்றால்,
எண் கண்ணில் பட்ட இப்பெண்ணும் அழகு தான்,

தேவதை என்பதன் பொருள் அழகான பெண் என்றால்,
அழகான பெண் இவளையே என் தேவதை என்பேன்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.