(Reading time: 13 - 26 minutes)

அவள் கை கழுவி விட்டு வந்ததும் "சரி வா இன்னைக்கு நானே உன்னை ஹாஸ்பிட்டல விட்டுடறேன்" என்றவன் பதிலுக்காக அவள் முகம் நோக்க... அதற்கு மட்டும் பதறியபடியே "இல்லை வேண்டாம்" என வாயை திறந்தாள்.  ஏன் என்ற கேள்வியை முன்வைத்தான் நந்தன். 

 

"நீங்க உங்க வேலையை பாருங்க எனக்காக ஒன்னும்  நீங்க வரவேண்டாம் நான் பஸ் பிடிச்சு போய்க்கிறேன்" என்று அவள் கூறிய விதத்தில் நேற்று அவன் பேசியதும் நினைவு வர "உன்னை இந்த நிலைல என்னால தனியா விட முடியாது இன்னைக்கு என்னோட வேலைகளை நான்சி பார்த்துப்பாங்க நீ வா" என்று கண்களில் தீவிரத்தோடு சொன்னவன் அவளது பதிலையும் எதிர்பார்க்காமல் முன்னே நடந்தான். சிறிது நேரம் அங்கே நின்றுகொண்டிருந்தாள் தலையை சிலுப்பிக்கொண்டு அவனை தொடர்ந்தாள்.

 

இரவு வெகு நேரம் கழித்து உறங்கியதாலோ என்னவோ எப்பொழுதும் அதிகாலையே விழிக்கும் அகல்யா நேரம் கழித்தே எழுந்தார். குளித்து சாமியறையில் பூஜையை முடித்து காலை உணவு தயாரிக்க என காலை நேர பரபரப்பு அவரை தொற்றிக்கொண்டது. சமையல் செய்யவென தனியாய் ஆட்கள் இருப்பினும் தன் வீட்டில் உள்ளவர்களுக்கு எப்பொழுதும் அகல்யாவே சமைப்பார். 

 

முத்தமிழும் அவருக்கு சிறு சிறு உதவிகளை செய்து கொண்டிருப்பார். இன்று தனக்கு முன்பே தன் மருமகள் சமயலறையில் இருப்பதை கண்டு பெருமை கொண்டார். "என்ன மருமகளே இன்னைக்கு என்ன சமைக்கலாம்?" என்று சிரித்தபடியே கேட்டார் அகல்யா. "மாமாக்கும், அவருக்கும் பொங்கல், தாத்தா, நந்து, பாப்பா மூணு பேருக்கும் இட்லி உங்களுக்கும், எனக்கும் புட்டு என்று சொல்லி கண்ணடித்தவள். "இந்தாங்க உங்களுக்கும், மாமாக்கும் காபி... நீங்க போய் மெதுவா குடிச்சுட்டு வாங்க இன்னைக்காவது நானே சமைச்சு முடிக்கிறேன்" என்று சொல்லிவிட்டு தன் வேளையில் கவனமானாள். 

 

"இனி குட்டி எழுந்துட்டாளா?" என்று கேட்ட அகல்யாவிடம் "இல்ல அத்த இன்னும் முழிக்கல அதுக்குள்ள வேலையை முடிச்சுடலாம்னு இருக்கேன்" என்று பதிலளித்தாள் அந்த வீட்டின் மூத்த மருமகள். அவளை நெட்டி முறித்தவர் அருகில் வைத்திருந்த காபி கோப்பைகளை எடுத்துக்கொண்டு தங்களது அறை நோக்கி சென்றார். 

 

(யாழ் எங்கனு நீங்க யோசிக்கிறது எனக்கு புரியுதுங்க. நம்ம யாழ் இப்போ டெல்லி ல அவங்க ஃபேஷன் டெக்னாலஜி ல pg படிச்சுட்டு இருக்காங்க கூடிய சீக்கிரம் உங்க எல்லாரையும் பார்க்க வந்துடுவாங்க.)  

 

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.