(Reading time: 5 - 9 minutes)

கதவை தட்டும் சத்தம் கேட்டு பயந்த ப்ரியா "யாருனு சொல்லுங்க" என்று கோபமாய் கேட்டாள். "யாருனு சொன்னா தான் கதவை திறப்பீங்க அப்படி தான" என்ற பெண் குரலை கேட்டதும் சற்று ஆசுவாசமான பிரியா சென்று கதவை திறந்தாள். 

 

காவியாவையும், சந்தியாவையும் அந்நேரத்தில் எதிர்பார்க்காத பிரியா இருவரையும் கழுத்தோடு அணைத்துக்கொண்டாள். 

 

"எதுக்கு டி ரெண்டு பேரும் இந்த நேரத்துல வந்தீங்க? எப்படி வந்தீங்க? வீட்டுல என்ன சொல்லிட்டு வந்தீங்க? இந்த நேரத்துல வந்த்தது யாரா இருக்கும்னு யோசிச்சு நான் பயந்தே போய்ட்டேன்... சொல்லிட்டாவது வரலாம்ல..." என்று வரிசையாய் கேள்வி கேட்டவளை “ஏய் ஏய் கொஞ்சம் பொறு டி… ஒண்ணு ஒண்ணா கேளு ஆனா அது எதுவும் இப்போ இல்ல முதல்ல நீ கிளம்பு நாம ஒரு இடத்துக்கு போகனும்" என்று விரட்டினாள் சந்தியா. 

 

பின் இருவருமாய் சேர்ந்து ப்ரியாவின் கண்ணை கட்டி ஸ்கூட்டி யில் அமரவைத்து அழைத்துச்சென்றனர். "எங்க னு சொல்லுங்க டி" என கெஞ்சியவளை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை இருவரும். 

 

"டேய் நந்து என்ன டா அதுக்குள்ள வந்துட்ட? நீ கிளம்பியே ஒன் ஹார் தான் ஆகுது… ப்ரியா கிட்ட பேசுனியா இல்லையா?" என போர்டிகோவில் நின்றபடியே கேள்விக்கு மேல் கேள்வியாக கேட்டுக்கொண்டிருந்தாள் யாழ். 

 

"ஹையோ இந்த குட்டி சாத்தான் வேற இன்னும் தூங்காம என்ன பண்ணுது. இப்போ இவ கிட்ட நான் என்னனு சொல்லுவேன்… அடியே க்ரிஷ்ணா (அது வேற யாரும் இல்லங்க நம்ம க்ரிஷ்ணப்ரியாவை தான் சார் அப்படி செல்லமா கூப்டுவாரு) உன்னை லவ் பண்ணிட்டு நான் தான் இப்படி எக்கு தப்பா மாட்டிக்குறேன்" என்று தன் மனதினுள்ளே அவனவளுக்கு அர்ச்சனை செய்து கொண்டிருந்தான் நந்தன். 

 

தான் கேட்ட கேள்விக்கு எந்த பதிலையும் கூறாமல் யோசனையிலே இருந்தவனின் தலையில் ஒரு கொட்டு வைத்தாள் யாழ். அதிலே சுயநினைவு பெற்றவன் "ஆஆஆ வலிக்குது டி குட்டி சாத்தான்" என தன் தலையை தேய்த்துக்கொண்டான். 

 

அதை கவனிக்காதவாறு யாழோ “என்ன டா நான் பாட்டுக்கு கேட்டுட்டே இருக்கேன் நீ எதையோ திருடி தின்ன மன்கி மாதிரி முழிச்சுட்டு இருக்க”  என கேட்க "இவ விட மாட்டா போலையே" என்று நினைத்தவன் "அவ வீட்டுல இல்ல யாழ்" என்ற உண்மையை  போட்டுடைத்தான். 

 

4 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.