(Reading time: 6 - 11 minutes)

                   என்றும் என் நினைவில் நீயடி - 8

                                   - Nila ram

என்ன தான் தன தாய் மற்றும் தந்தையுடன் சண்டையிட்டு வந்தாலும் அவர்களின் நினைவுகள் அவளை தவிக்க வைத்தது என்னமோ உண்மை தான். இந்த பிரபஞ்சத்தில் தாய்மை என்பது ஒரு வரம் ஒரு உயிரை தனக்குள்ளே வைத்து அதை பாதுகாத்து அந்த உயிரை பூமியில் பிறக்கவைத்து  அணைத்து வழிமுறைகளையும் வாழ்க்கை நெறிகளையும் கற்று கொடுத்து பூமியின் ஒரு ஒழுக்கமான உயிராக வளர்த்தல் என்பது நூறு phd படிப்பதற்கு சமம் . அப்படி ஒவ்வொரு உயிரையும் உருவாக்கிய தாய்மார்களுக்கு என் அன்னையர் தின வாழ்த்துக்கள் . இப்படிக்கு உங்கள் rj  நிலா என்ற தன் கருத்தை தனது முகநூல் பக்கத்தில் ஒளிர விட்டு கல்லூரிக்கு செல்ல தயாரானாள் . குளித்து தன்னை ஒரு முறை கண்ணாடியில் பார்த்த நிலவிற்கு தன்னையே பிடிக்கவில்லை . எப்பொழுதும் துரு துருவென இருக்கும் அவளது கண்கள் வெறித்த படியும் எப்பொழுதும் முகத்தில் பூத்திருக்கும் அவளது ட்ரடே  மார்க் சிரிப்பு இப்போ மிஸ்ஸிங் . சோர்ந்த முகத்துடனே கிளம்புவாள் . இன்றும் அப்படி கிளம்பியவளின்  உள்ளத்தில் ஏதோ ஒரு இனம் புரிய இதம் , தனக்கு பிடித்த ஒன்று ஏதோ நடக்க போகிறது என்று . அந்த உள்ளுரான்வின் நம்பிக்கை உடனே கல்லூரிக்கு சென்றாள் . ஏனோ ஒரு வித துள்ளல் இயற்கையாகவே அவள் நடையில் ஒட்டிக்கொண்டது . என்றும் ஓரு வித சோகத்துவனே வளைய வருபவள் இன்று ஏனோ சின்ன துள்ளலுடன் வருவதை கண்ட கல்லூரி ரோமியோக்கள் சின்ன சீண்டலுடன் அவளை வரவேற்றனர் .

''என்ன மா சோக  குயின் இன்னைக்கு என்ன உன்னோட பிறந்த நாளா , இவ்வளோ ஹாப்பியா இருக்க , எங்க உன்னக்கு பின்னாடி சோக கீதம் வாசிக்கற ஏன்ஜெல்ஸ்  காணோம்'' என்றான் அவளின் சீனியர் மாணவன் மதன் .

எப்பொழுதும் தன்னை கண்டால் அமைதியாக இருபவர்கள் இன்று தன்னை சீண்டவும் பழைய நிலா திரும்பவும் எட்டி பார்த்தால் ,

கொஞ்சம் சிரிப்புடன், ''அதுவா சகோ , இன்னைக்கு உங்கள மாறி ஒரு நல்ல அண்ணன் கிடைப்பானு ஒரு பட்சி சொல்லுச்சி அதான் சந்தோசமா இருக்கேன் . அப்பறம் எனக்கு லஞ்சுக்கு சாப்பாடு வாங்கி வெச்சிட்டு எனக்கு சொல்லு அண்ணா நா வந்துடறேன்'' . என்றவள் தன் வகுப்பிற்க்கு சென்றாள் .

மதனின் நிலையோ நம்ம என்ன கேட்டோம் இது என்ன சொல்லிட்டு போகுது என்று தன் தலையை சொரிந்து கொண்டே மற்ற நண்பர்களிடம் ''மச்சான் நன் கரெக்ட்தானா பேசுனேன்'' என்றான். அவர்களும் சிரித்து கொண்டே ''மச்சான் நீ கரெக்டா தான் கேட்ட ஆனா அவ தா மச்சி உனக்கு பல்பு குடுத்த்துட்டு போய்ட்டா'' என்றனர் . உடனே அருகில் இருந்தவன் அவனிடம்'' மச்சான் கிளிக்கு ரெக்கை முழைச்சிடுச்சி பறந்து போயிடுச்சி'' என்றான் . இதை கேட்ட மதன் அவனை அடிக்க வர அவன் ஓட அங்கே மாணவர்களுக்கே உரிய சந்தோசம் அரங்கேறியது .

தன் வகுபிரிக்குள் நுழைந்தவள் அங்கு தனது தோழியை பார்த்தவுடன் சிரித்துக்கொண்டே அருகில் அமர்ந்தாள் . தன் வீட்டை விட்டு வந்து சில மாதங்கள் ஆகியும் அவளால் எதையும் சரியாக முடிவெடுக்க இயலா நிலையில் தன்னுடைய படிப்பிலும் சரியாக கவனம் செலுத்த இயலா நிலை . யாரிடமும் எந்த ஒரு ஓட்டுதல் இல்லாமல் இருந்தாள். அப்பொழுது அறிமுகம் ஆனவள் தான் சுபி எனும் சுபத்ரா . இயல்பிலே நித்திலாவை போன்ற துரு துரு குணம் கொண்டவள் . வீட்டிற்கு ஒரே மகள் , தந்தை ஜெயக்குமார் , தனது மருத்துவ துறையில் சிறந்தவர் என்று பெயர் பெற்றவர் , தாய் வள்ளி மனநல ஆலோசகராக இருக்கிறார் . சிறியது முதலே சுபத்ராவிற்கு அவளுக்கான சுதந்திரத்தையும் அதே சமயம் அவள் சுதந்திரத்தின் எல்லையும் காண்பித்தவர்கள் . சிம்பிளா சொல்லனும்னா சுட்டி பெண் நல்ல குணம் .(அப்படியே என்ன மாறி ...ஹி ஹி ஹி ).

அவளுக்கு நித்திலாவை பார்த்த உடனே பிடித்து போனது எனினும் அவளின் அந்த வருத்தம் அவளை அவளிடம் நெருங்க விடாமல் எட்ட நிறுத்தியது . நித்தில கல்லூரிக்கு வந்த சில நாட்களில் அவளுக்கு அல்சர் எட்டி பார்த்தது எப்பொழுதும் தன் தாயின் அன்பில் புசித்தவலுவுக்கு அவர்கள் இல்லாமல் உணவு உன்ன தோணவில்லை .தன் உணவை ஒரு நாளுக்கு ஒரு வேலையாக மாற்றி கொண்டால் .அந்த நிலையில் தான் ஒரு நாள் லேப் பயிற்சி அன்று மயங்கி சரிந்தாள் . யாருக்கும் அவளை பற்றி தெரியாத நிலையில் சுபத்ரா தன் தன் தந்தையிடம் கூட்டி சென்றாள்.

சுபவள்ளி மருத்துவமனை

      என்ன தான் அவர்களின் சொந்த மருத்துவமனையாக இருந்தாலும் அவளுக்கு எந்த சலுகையும் இல்லை எனவே அவள் தந்தையிடம் நித்திலாவின் நிலையை சொல்லி அட்மிட் செய்தாள். நிலாவை தரவாக சோதனை செய்த ஜெயராம் தன் மகளை அழைத்தார்

''சுபி மா யார் இந்த பொண்ணு''

''அப்பா நான் சொல்லிருக்கேன் நித்திலானு அவ தா பா இவ. ஒன்னும் பிரச்னை இல்லையே , நல்ல தான இருக்க , ஈஸ் எனிதிங் சீரியஸ்''

''சில் சுபி நத்திங் சீரியஸ் அவ சரியாய் சாப்பிடறது இல்ல போல அதான் இந்த மயக்கம் . ஆமா அவளுக்கு இப்போவே அல்சர் வர அளவுக்கு விட்ருக்காங்க அவளோட ப்ரேண்ட்ஸ் . என்ன தான் புள்ளைய பத்துக்கறாங்களோ''

''அப்பா அவ அவளோட ப்ரெண்ட்ஸோட இல்ல ஹாஸ்டல்ல இருக்க , வீட்டுல ஏதோ ப்ரோப்ளேம் போல எப்பவும் ரொம்ப டல்லா தா பா இருக்கா''

''சரி ஓகே டா அவளை ஒழுங்கா சாப்பிட சொல்லு அப்புறம் வீக் எண்டு நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வா நம்ம வள்ளி கிட்ட சொல்லி கவுன்செல்லிங் குடுக்க சொல்லுவோம் ''.

''ஓகே பா நா கூட்டிட்டு வரேன் பை பா''

தன் தந்தையுடன் பேசியவள் நித்திலாவை பார்க்க வந்தாள் . சுபி தான் தன்னை கூட்டிக்கொண்டு வந்தாள் என்பதை தெரிந்தவள் தேங்க்ஸ் சுபி என்றாள்.

''ஹே உனக்கு என்னோட பேரு கூட தெரியுமா என்றாள்  அதிசயமாய் . சின்ன சிரிப்புடன் தெரியும் சுபி உங்க கூட்டணி எனக்கு பிடிக்கும் பார்த்து நிறைய வாட்டி சிரிச்சிருக்கேன்'' .

''தோடா இது எனக்கு தெரியாம போச்சு , சரி என்கிட்டே வந்து பேசிருக்கலாமே என்றாள்'' ,

''கொஞ்சம் மௌனத்திற்கு பின்பு இல்ல சுபி எனக்கு கொஞ்சம் மைண்ட் சரியில்ல அதான்'' .

அவள் திரும்பவவும் சோகமாவதை கண்ட ''சுபி ஓகே ஓகே விடு இப்போ நம்ம பிரண்ட்ஸ் ஆகிடலாம். பிரண்ட்ஸ் ? என்று தன் கையை நீட்டினாள் ஆவலும் பிரிஎண்ட்ஸ் ''என்று குலுக்கினாள் .

அப்பொழுது அவர்களின் அறைக்குள் வந்த ஜெயராம் ''என்னமா நிலா அதுக்குள்ள இவ கூட பிரன்ட் ஆகிட்டியா பாத்து மா உன்கிட்ட பேசறேன்னு காதுல ரத்தம் வர வெச்சிட்டு போறா'' ,

''அப்பா இது உங்களுக்கு நல்லதுக்கு இல்லை சொல்லிட்டேன்'' என்றால் சின்ன முறைப்புடன் .

''ஓ இது உங்க ஹாஸ்ப்பிடலா சுபி'' என்றாள்

''ஆமா நிலா எங்க அப்பாவோடது தான்''

''ஓகே நிலா ஒழுங்கா சாப்பிடு இதுல டபெல்ட் இருக்கு ஒழுங்கா சாப்பிடு மா இப்போவே அல்சர் வரது கொஞ்சம் கஷ்டமானது சோ ஒழுங்கா சாப்பிடணும் என்றார்'' . அவரின் பேச்சில் தன் தந்தையின் நினைவு வந்தது அவளுக்கு , கண்ணில் பொங்கிய கண்ணீரை உள்ளிழுத்தவாறு ஓகே அங்கிள் என்றாள்.

''சரி நிலா  நீங்க பேசிட்டு இருங்க நான் ஒரு கேஸ் இருக்கு பாத்துட்டு வரேன் . அப்பறம் நிலா இந்த வீக் எண்டு வீட்டுக்கு வாங்க'' என்றார் .

சிறிது தயக்கத்துடன் தன் தலையை ஆட்டினாள் நிலா.

(நினைவுகள் தொடரும்)

 

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.