(Reading time: 7 - 13 minutes)

உயிரிலே கலந்து விடு என் உயிரே..... -தனுசஜ்ஜீ

images 8 1

 

 

 

 

 
அத்தியாயம் - 1
 
சஷ்டியை நோக்கச் சரவண பவனார்
சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்
பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாடக் கிண்கிணி யாட (2)
மையல் நடனஞ்செய்யும் மயில்வா கனனார்
கையில் வேலால் எனைக் காக்கவென்றுவந்து
வரவர வேலா யுதனார் வருக
வருக வருக மயிலோன் வருக
இந்திரன் முதலா எண்டிசை போற்ற
மந்திர வடிவேல் வருக வருக!
வாசவன் மருகா வருக வருக
நேசக் குறமகள் நினைவோன் வருக
ஆறுமுகம் படைத்த ஐயா வருக
நீறிடும் வேலவன் நித்தம் வருக
சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக!
சரவண பவனார் சடுதியில் வருக
ரவண பவச ர ர ர ர ர ர ர
ரிவண பவச ரி ரி ரி ரி ரி ரி ரி
விநபவ சரவண வீரா நமோநம
நிபவ சரவண நிறநிற நிறென
 
முருகனின் கவசத்தை கேட்டுக் கொண்டே அந்த கோவிலில் அனைவரும் பரபரப்புடன் வேலை செய்து கொண்டிருந்தனர்.
    டேய்..... குமரா..... சம்பந்தி வீட்டுக்காரங்க முக்கு தெருகிட்ட வந்துட்டாங்களாம் போய் கூட்டி வாடா....
     அட கத்திக்கிட்டே இருக்காதீங்க மாமா... நான் பசங்களா அப்பவே அனுப்பி விட்டேன். இந்நேரம் நம்ம தெருக்கிட்டயே வந்திருப்பாங்க....
    சரி சரி நீ போயி மேளக்காரவங்கள கூட்டிட்டு போயி மண்டபத்த காட்டு அவர்களுக்கு தேவையானதை செய்து கொடு குமரா....
  சரி மாமா....
லட்சுமி..... லட்சுமி.... என்ன பண்ணிட்டு இருக்க இங்க....
    என்ன ஆச்சுங்க பூஜைக்கு தேவையான தட்ட தானே எடுத்து வச்சுட்டு இருக்கேன்.
    நல்லா வச்ச போ ..... அங்க பாரு பூசாரியை காணோம். சம்மந்தி வீட்டுக்காரவுங்க வேற வந்துட்டாங்களாம் பூசாரி இல்லாமல் எப்படி பூஜை பண்றது.
    கொஞ்சம் கத்தாம மெல்லமா பேசுங்க..... என்கிட்ட சொல்லிட்டு தான் பூசாரி போனாரு. கிணத்துல தண்ணீர் எடுத்திட்டு வரேன்னு சொல்லி....... இதோ வந்துட்டாரு பாருங்க.
     சரி... சரி...மச..... மசன்னு நிக்காம போய் வேலய பாரு.
என்ன மதினி அண்ணே இந்த குதி குதிக்கிறாரு.
பின்ன நடக்கப்போறது ஒத்த கல்யாணமா தேனு.
அதுசரி சம்மந்தி அண்ணாவோட ஸ்நேகிதன் தானே பின்ன ஏன் இப்படி பரக்குறாரு.
ஸ்நேகிதனா இருந்தாலும் அவங்க எம்புட்டு பணக்காரவுக .....  நம்ம வீட்டுல சம்பந்தம் பேசுகிறார்களே அதுவே பெருசு தான் புள்ள.
என்னவோ போங்க மதனி. என்ன பெரிய இடத்து சம்பந்தமோ இன்னும் நான் மாப்பிள்ளைய கூட பாக்கல....
    ஏன் இந்த இழுவ இழுக்குறவ இதோ பத்து நிமிஷத்துல வந்து புடுவாக பாரு.....  
    ம்ம்....சரி அதெல்லாம் கிடக்கட்டும் எங்க நம்ம கீர்த்தி பிள்ளைய காணல... உங்க ரெண்டு பிள்ளைகளுக்கு மட்டும் பெரிய இடத்து சம்பந்தம் பேசிபுட்டிங்க.... இந்த கீர்த்தி புள்ள  என்ன பாவம் பண்ணுச்சு. அவுங்க அம்மாவை இந்த உலகத்தை விட்டு அனுப்புன மாதிரி இந்தப் பிள்ளையையும் அனுப்ப போறீங்களா....    
    உங்க வாய கொஞ்சம் மூடுறிங்களா..... பெரிய மனுஷி தானே நீங்க.... நல்ல காரியம் நடக்குறப்ப இப்படித்தான் அபசகுனமா பேசுவீங்களா..... நான் பெத்த பிள்ளையை விட கீர்த்தி தான் என்னோட செல்ல புள்ள.... அதை முதல தெரிஞ்சுக்கோ.... உங்க அண்ண பண்ண தப்புக்காக வேற வழி இல்லாம ஒன்று நான் கீர்த்தியை பார்த்துகள. ரெண்டு வயசுலயே என் உசுர காப்பாத்துன குலசாமி கீர்த்தி.... அந்த தங்கத்த என் உசுரு இருக்கிற வரை நட்டாத்தல வுடமாட்டே....... உங்க அண்ணே தான் வீம்பு புடிச்சிகிட்டு திரியுறாக ......
  சரி.....சரி..... கோபப்படாதீங்க மதினி. நான் ஏதோ அங்கலாப்புள  கேட்டுப்புட்டே சரி கீர்த்தி புள்ள வந்துருச்சா இல்லையா.....
     என்ன அவளுக்கு  சூடு சொரணைலாம் இருக்காதா......உங்க அண்ணன் அந்த புள்ளய எப்ப பார்த்தாலும் கரிச்சிகொட்டிக்கிட்டே  இருந்தா அதுவும் என்னத்த தான் பண்னும். அவங்க அம்மா சேர்த்து வச்ச நகை பணமே போதும்னு  ஒத்த பைசா என்கிட்ட வாங்குறதில்ல.... வூட்டுக்கு எப்பயாவது தான் வரும் அப்போ ஒரு வாய் சோறு ஆசையாக குடுக்குறதோட  சரி. கல்யாணத்துக்கு கூப்பிட்டே ..... முடிஞ்சா வரேன் தா  சொல்லுச்சு.
   சரி வுடுங்க மதினி  கவலைப்படாதீங்க. கீர்த்தி புள்ளக்கி அக்கா....அண்ணண்ணா உசுரு கண்டிப்பா வந்துபுடு நீ வேணா பாரேன்.
   லட்சுமி அங்க என்ன  வாயாடிக்கிட்டு இருக்க..... சம்பந்தி வீட்டுக்காரவுங்க வந்துட்டாங்க பாரு.    
     இதோ வந்துட்டேங்க....  
    அவுடி கார் இரண்டு சரசரவென்று வந்து நிற்க.... அதிலிருந்து இரு பெரியவர்கள் இறங்கினர்.
    வாங்க சம்பந்தி வாங்க..... வாங்க இடத்தை கண்டு பிடிக்க சிரமம் ஆயிடுச்சிங்களா.   
     அட என்ன வேலுச்சாமி..... சம்பந்தி அது இதுன்னு பேசிகிட்டு எங்களுக்கு எந்த சிரமமும் இல்ல.
     வேலுச்சாமி வாயெல்லாம் பல்லாக....சரி.... சரி ராமசாமி சம்மந்தியம்மா வாங்க.... மாப்பிள்ளை, பொண்ணு எங்க இராமசாமி.
    டேய் என்னடா வண்டி நின்னு எவ்ளோ நேரமாச்சு அண்ணனும், தங்கச்சியும் என்ன ரகசியம் பேசிக்கிட்டு இருக்கீங்க...
   பின்னாடி இருந்த காரின்  வலது பக்கத்தில் 6 அடி உயரத்தில் அம்சமான அழகுடன் மாநிறத்தில் கம்பீர தோற்றத்துடன் அந்த ஆடவன் இறங்கினான்.
   இடது பக்கத்தில் அந்த ஆடவனின் தங்கை மகாலட்சுமி போன்ற தோற்றத்தில் தேவதைபோல் இறங்கினாள்.
    இருவரையும் வேலுச்சாமி, லட்சுமி தம்பதியினர் ஆர்ப்பாட்டம் உடன் வரவேற்க....
  அவனுடைய மயக்கும் சிரிப்புடன் அவர்களை நலம் விசாரித்தான். மணமகளுக்கே உரிய நாணத்துடன் மங்கையவள் தலை குனிந்து நிற்க...... தன் வீட்டிற்கு மருமகளாகப் போகும் ஸ்வாதியின் கைபிடித்து லக்ஷ்மி கோவிலுக்கு அழைத்து சென்றாள்.
  கூட்டத்தில் இருந்த ஒருவன் டேய் மாரி. இது யாருன்னு தெரியுதா....
தெரியலையே மாப்பிள ...
பத்து வருஷத்துக்கு முன்னாடி நம்ம விராலிப்பட்டி ல இருந்தவுக டேய்.... இந்த ராமசாமி துணிகடை வச்சு குடும்பத்தை நடத்திட்டு இருந்தாக... நம்மள மாதிரி இருந்தவுக தான் இந்த மாப்பிள்ளை பையன் படிச்சு இந்த குடும்பத்தை இப்புடி உசத்திருக்கு  மாரி.
   பரவாயில்லையே நம்மூரு காரவுகதானா...
   ஆமா பின்ன எல்லா ஊர்லயும் ஒரு கம்பெனி ஆரம்பிச்சு வச்சிருக்காகலாம்.வி.வி. இன்டஸ்ட்ரீஸ் -னா எல்லாருக்குமே தெரியுமே மாரி உனக்கு தெரியாதா.... அதுவும் இல்லாம இந்த வருஷம் இவுக கம்பெனி தான் மொத இடத்துல இருக்குதாமா...
   அவ்வளவு பெரிய ஆளுங்களா மாப்பிள .... 
பின்ன எதுக்கு இந்த குடும்பத்தில சம்பந்தம் பண்ணி இருக்காக....
    அதுதான் சிநேகிதம்ன்றது  மாரி இந்த ஊருல இருக்கப்ப ரெண்டு பேரும் ஒண்ணுமொன்னா இருந்தவுக தான். அந்த சிநேகிதம் விட்டு போக கூடாதுன்னு சம்பந்தம் பண்ணிக்கிட்டாக ...
   ம்ம்.... இருந்தாலும் இந்த வேலுச்சாமி குணத்துக்கு இந்த மாதிரி சிநேகிதமெல்லாம்  கிடைச்சிருக்கே....
   அதுதான் எனக்கு ஆச்சரியம் மாரி.... பொண்டாட்டி இருக்கப்பவே இன்னொன்னு கூட்டிகிட்டு புள்ளயும் குடுத்துபுட்டு என்ன தெனாவட்டா ஊருக்குள்ள சுத்திட்டு இருக்கான். இவனுக்கெல்லாம் இப்படி ஒரு சம்பந்தம்.
   யாராருக்கு என்னென்ன அமையனுமோ அது தான் அமையும் போல இருக்கு. வுடு வா மாரி நாம சோலிய பார்ப்போம்.
   கோயிலின் உள்ளே நுழைந்த அனைவரும் செய்ய வேண்டிய சில சடங்கு முறைகளை செய்துவிட்டு மண்டபத்தை நோக்கி பயணமாகினர்.
   மண்டபத்தில் நிச்சயதார்த்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் தடபுடலாக நடந்து கொண்டிருந்தது.
   ஆம் நிச்சயத்தை கல்யாணத்திற்கு முன்தினம் வைத்துக்கொள்ள வேண்டும் என்று அனைவரும் பேசி முடிவெடுத்து ஒன்று.
   நிச்சயத்திற்காக அனைவரும் கூடி அமர்ந்திருக்க.....இரு மணப்பெண்கள் இருமண மகன்கள் என்பதால் அந்த நிச்சயம் கலைகட்டிக் கொண்டிருந்தது.
வெற்றி மணமகனுக்கே உரிய கம்பீரத்துடன் அமர்ந்து அனைவரிடமும் புன்சிரிப்பை உதிர்த்துக் கொண்டிருந்தான். மணமகள் ரம்யா ஒருவித பதட்டத்துடன் அமர்ந்திருந்தாள்.
   காதல் ஜோடியான அஸ்வின் மற்றும் ஸ்வேதா தங்கள் காதல் கைக்கூடி நிச்சயம் வரை வந்து விட்டதை எண்ணி வெட்கப் புன்னகை பூக்க.... இருவரும் விழிகளால் விழிகளை களவாடிக் கொண்டிருந்தனர்.
   வாசலில் இருந்த  வானரப் படைகள் குடுகுடுவென்று ஓடி வந்து கீர்த்திக்கா வந்துட்டாங்க..... ஏய் எல்லாரும் வாங்க நம்ம கீர்த்திக்கா வந்திட்டாங்க....என்று குஷியுடன் வரவேற்றனர்.
  கலவரத்தில் இருந்த இரு உள்ளங்களுக்கு இந்த செய்தி தேனாய் வந்து பாய்ந்தது. 
அந்த இரு உள்ளங்கள் யாரு???
- தொடரும்
 
   

8 comments

  • Good evening, dear Dhanu! Is it you? நடையை பார்த்தவுடனேயே, எழுதியவரின் கைவண்ணம்.புரிந்தது. நீங்கள் ஏன் பெயர் போடவில்லை என்று தெரிந்துவிட்டதால், இனி கூடுதல் ஆர்வத்துடன் படித்து ரசிப்பேன்! Dear Dhanu! You are not only great, you are sweet too! உன்னைப் பாராட்ட நானல்லவா பேறு பெற்றுள்ளனர், தங்களுக்கு இப்போதே, சாகித்திய அகாதமி அவார்ட் கிடைக்க வாழ்த்துகிறேன்.
  • Thank u so much saranya dr 😊🙏🏻. Ithuvum ungal danusajju voda padaiputhan. Ungal aadharavitku mikka nandri saranya dr.🤗
  • Thank u so much ravai sir. Apudiya theriuthu sir😜😜. Na danu tha sir. Ithu flexi submit sir. name and image epdi add pandrathunu therila sir. Atha ipdi. Paravala kadhai nala iruntha manasara valthuruinga athuve perusu sir. Ur a great man. Again thank you so much sir.😊🙏🏻
  • அனுபவமிக்க, எழுத்தாளர்னு கைவண்ணம், பளிச்சென்று தெரிகிறது. ஆமாம், ஏன் படைப்பாளரின்பெயரைக் காணோம்?

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.