(Reading time: 2 - 3 minutes)
Comedy Stories
Comedy Stories

Comedy Stories - ஐன்ஸ்டீன் லெவல்!

  

ரு கிளாஸ்ல கெஸ்ட் லெக்சரர் ரொம்ப மும்முரமா கிளாஸ் எடுத்துட்டு இருந்தார்.

  

அவர் அந்த க்ளாஸ்க்கு வாரம் ஒரு முறை வருவார்.

  

கிளாஸ் முடிஞ்சதுக்கு அறிகுறியா பெல் அடிக்குற வரைக்கும் சின்சியரா கிளாஸ் எடுத்தார்.

  

அவர் முடிச்சதும் பசங்க எல்லோரும் ஒவ்வொருத்தரா கிளாசை விட்டு வெளியே போனாங்க.

  

லெக்ச்சரரும் கிளம்ப ரெடி ஆனார்.

  

அப்போ ஒரே ஒரு ஸ்டூடன்ட் மட்டும் அவர் கிட்ட வந்து, "கிளாஸ் நல்லா எடுக்குறீங்க சார். நீங்க ஐன்ஸ்டீனை விட புத்திசாலியா இருக்குறீங்க”ன்னு சொன்னான்.

  

லெக்சரர்க்கு பெருமை தாங்கலை.

  

ஸ்டூடன்ட்க்கு நன்றி சொல்லிட்டு கிளம்பினார்.

  

ஒரு வாரம் ஓடிப் போச்சு.

  

லெக்சரர் அப்பப்போ அந்த ஸ்டூடன்ட் பாராட்டைப் பத்தி யோசித்தார்.

  

யோசிக்க யோசிக்க எதுக்கு அவன் அப்படி புகழ்ந்தான்னு தெரிஞ்சுக்குற ஆர்வம் அவருக்கு அதிகமாச்சு.

  

அடுத்த கிளாஸ்ல அவன் கிட்டேயே கேட்க முடிவு செய்தார்

  

அடுத்த கிளாஸ் முடிஞ்சதும் அந்த ஸ்டூடன்ட்டை கூப்பிட்டார்.

  

“போன கிளாஸ் முடிவுல நீ சொன்னது நினைவுல இருக்கா”ன்னு கேட்டார்.

  

ஸ்டூடன்ன்ட்டும் ஞாபகம் இருக்குன்னு சொன்னான்.

  

“நான் ஐன்ஸ்டீனை விட புத்திசாலின்னு எதனால சொன்னேன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?”ன்னு லெக்சரர் கேட்டார்.

  

ஸ்டூடன்ட் சொன்னான், “ஐன்ஸ்டீன் ரொம்ப புத்திசாலின்னு எல்லோரும் சொல்றாங்க சார். அவர் எவ்வளவு புத்திசாலின்னா, அவர் பேசினா உலகத்துல மொத்தமா பத்து பேருக்கு தான் புரியுமாம். ஆனால் நீங்க பேசினா ஒரே ஒருத்தருக்கு கூட புரிய மாட்டேங்குது சார். அப்போ நீங்க ஐன்ஸ்டீன் விட புத்திசாலி தானே???”

😆😆 😆😆 😆😆

  

😀😀😀😀😀

   

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.