Comedy Stories - முக்கியமான பேப்பர்!!!
ஒரு கம்பெனியில் புதிதாக வேலைக்கு சேர்ந்திருக்கும் ஃபிரெஷர், ஒரு நாள் மாலை தாமதமாக அலுவலகத்தை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தபோது, CEO தன் கையில் ஒரு பேப்பருடன், ஷ்ரேட்டர் (பேப்பரை துண்டாக்கும் மெஷின்) முன் நிற்பதைக் கண்டான்.
அவனை பார்த்து விட்ட CEO, “இது ரொம்ப சென்சிடிவ் ஆன முக்கியமான டாகுமென்ட். என் செக்ரட்டரி கிளம்பி போயிட்டா. இதை எப்படி வேலை செய்ய வைக்குறதுன்னு உனக்கு தெரியுமா?” என்றுக் கேட்டார்.
"எனக்குத் தெரியும்," என ஆர்வத்துடன் பேப்பரை வாங்கினான் பிரெஷர்.
மெஷினை ஆன் செய்து பேப்பரை செருகி ஸ்டார்ட் பட்டனை அழுத்தினான்.
காகிதம் இயந்திரத்திற்குள் சென்று மறைந்ததும், “வெரி குட்” என்றார் CEO. அப்படியே, தொடர்ந்து,
"எனக்கு ஒரே ஒரு காப்பி மட்டும் போதும்." என்றார்!!!
ஊப்ஸ்!!!!!
😬 😏 🙃 😩
😀😀😀😀😀