Comedy Stories - முதல் வேலை !!!
ஒரு இளைஞன் ஒரு அலுவலகத்தில் வேலைக்கு சேர்ந்தான்.
சில வாரங்களுக்குப் பிறகு ஹெச்.ஆர் டைரக்டர் அவனை அழைத்தார்.
“இதுக்கு என்ன அர்த்தம்? நீ வேலைக்கு அப்ளை செய்தப் போது உனக்கு அஞ்சு வருஷம் எக்ஸ்பீரியன்ஸ் இருக்குன்னு சொன்ன. ஆனால் இது தான் உன் முதல் வேலைன்னு நாங்க இப்போ கண்டுப்பிடிச்சுட்டோம்” என ஹெச்.ஆர் டைரக்டர் அவனிடம் கேட்டார்.
“சார், உங்க வேலை விளம்பரத்துல கற்பனை திறமை இருக்குற ஆள் வேணும்னு சொல்லி இருந்தீங்க, அது என் கிட்ட இருக்குன்னு ப்ரூவ் செய்யலாம்னு நினைச்சேன்” என்றான் இளைஞன்.
😄 😄 😄 😄 😄
😀😀😀😀😀