பாலுவின் கரங்கள் அவளை வலுவாகப் பற்றிக் கொண்டிருந்தன. மங்கிய விளக்கொளியில் அவள் தேவதையாகத் திகழ்ந்தாள். சினிமாவில் தொட்டுப் பார்த்த அவன், பஸ்ஸில் நெருங்கி உட்கார்ந்த அவன், இப்போது வெகு சுவாதீனமாக அவளை நெருங்கிக் கொண்டிருந்தான்.
அப்போது பட்டப்பா உள்ளே மனைவியைத் தேடிக் கொண்டு வந்தான்.
இருவருக்கும் நெருப்பில் சுட்டுக் கொண்ட மாதிரி இருந்தது.
"நீ இங்கயா இருக்கே?"
"அக்கா போளி குடுத்துட்டு வரச் சொன்னா"
அவள் பயந்தாள். நாக்கு உலர்ந்து விட்டது.
"ஒண்ணுமில்லை பட்டப்பா! பூரணி கிட்டேருந்து கடுதாசி வந்திருக்கு. அதைத் தேடிண்டு இருந்தோம்."
நர்மதா போய்விட்டாள். இரவு கங்கம்மா, "சுவாமி பாலை எடுத்துண்டு போ... குருவாயூரப்பனுக்கு தொட்டில் வாங்கி வைக்கறேன்னு வேண்டிருக்கேன்" என்றாள்.
பகவானின் நைதேத்யமான பாலை எடுக்க அவள் கூசினாள்.
"அப்பனே! நீயும் சேர்ந்து தானே என்னை ஏமாத்தி இருக்கே"
உள்ளே பட்டப்பாவின் முகம் வாடிக்கிடந்தது.
"இந்தாங்க பால் சாப்பிடுங்கோ"
'நீ'