Page 6 of 7
நர்மதா வழக்கம்போல பால் டம்ளருடன் உள்ளே வரவில்லை. அந்த நாடகமெல்லாம் ஓய்ந்து போய் மூன்று மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது.
படுக்கையை எடுத்துத் தரையில் போட்டுக்கொண்டாள்.
"நர்மதா!"
"உம்...
"உங்கிட்டே ஒண்ணு சொல்லணும். உனக்கு சுதந்திரம் கொடுத்திருக்கேன். நீ இஷ்டபடி இருக்கலாம். இப்ப அக்காவுக்கும் வாயடைச்சுப்போச்சு"
"என்ன சொல்றேள்?"
கொஞ்ச நாளைக்கு உன் அம்மாவோட ஊருக்குப் போயிட்டுவாயேன் "
“எதுக்கு”
ஒரு மாறுதலுக்கு"
"இங்கே அக்காவை யார் பாத்துப்பா?
"ஒரு ஆளைப் போட்டு நான் கவனிச்சுக்கறேன்"
“நான் போகலை"
"'ஏன்?""
'பிடிக்கலை... அக்காவை விட்டுட்டுப்போறது பாவம்."