(Reading time: 4 - 7 minutes)
Aval Vizittiruntal  - Caroja Ramamurti
Aval Vizittiruntal - Caroja Ramamurti

Flexi Classics தொடர்கதை - அவள் விழித்திருந்தாள் - 12 - சரோஜா ராமமூர்த்தி

  

ங்கம்மாவின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாகியது. பனி கொட்டும் காலைப்பொழுதில் அவள் இறந்து விட்டாள். கடைசியில் எதுவும் பேசாமல், மனசில் எண்ணக் குமுறல்கள் பொங்கி வழிய அவள் ஆத்மா பிரிந்துவிட்டது.

  

பட்டப்பா துடிதுடித்துப் போனான். தாயை விடப் பரிந்து வளர்த்தவள். இவனிடமிருந்து ஒரு குழந்தையை, எதிர்ப் பார்த்து, அது நிறைவேறாமல், நிறைவேறாது என்று உறுதியாகத் தெரிந்து கொண்டு அதிர்ந்து போய், பேசும் சக்தியை இழந்து அவள் நாலைந்து மாதங்கள் உணர்வுகளுடன் போராடினாள். பிறகு, ஓய்ந்தும் போனாள்,

  

பெரிய வீடு. கங்கம்மா அதில் ஒரு பட்டத்தரசி போல் சாவிகள் குலுங்க வளைய வருவாள். பூரணிக்கு, எதிர் வீட்டுக்கு என்று பக்ஷணங்கள் செய்வாள். பூ தொடுத்துக் காடுப்பாள். பாலுவுக்கு வரும் போதெல்லாம் ஏதாவது கொடுத்து உபசரிப்பாள். இப்படி, அவள் கார்வார்த்தனம் அவளோடு அடங்கிப்போயிற்று.

  

நர்மதா ஆழாக்கு அரிசி சமைத்தாள். இஷ்டமிருந்தால் சுவாமிக்கு விளக்கேற்றினாள். முடிந்தால் பக்கத்து வீட்டுப் பூரணியோடு பேசினாள். பட்டப்பாவோடு பேசுவதையும் குறைத்துக் கொண்டாள். தன்னைத் தானே தண்டித்துக் கொண்டு பாதி உடம்பாக மெலிந்து போனாள் நர்மதா.

  

வெங்குலட்சுமி மூலமாக எல்லா விஷயங்களையும் கேள்விப் பட்ட சாயிராம் ஒரு தடவை நர்மதாவின் வீட்டுக்கு வந்தான்.

  

வீட்டையும் வாசலையும் நோட்டம் விட்டான். ஒரு லட்சத்துக்குக் குறையாது என்று மதிப்புப் போட்டான். நில புலன் வேறே இருக்கிறதையும் தெரிந்து வைத்துக் கொண்டிருந்தான். எல்லாவற்றுக்கும் மேலே பக்கத்து வீட்டு பாலு அந்த பரம ரகசியமான விஷயத்தை இவனிடம் தெரிவித்தான்.

  

"அப்படியா?" என்று வியந்து போனான் சாயிராம்.

  

"பின்னே ... அவ எங்கூட சினிமாவுக்கு வந்திருக்கிறா. எம் பொண்டாட்டி பிரசவத்துக்குப்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.