போனப்ப சாப்பாடு போட்டிருக்கிறா அப்ப அவ கையைக் கூடப் பிடிச்சுப் பார்த்தேன். விஷயம் ரொம்ப சுவாரஸ்யமாக இருந்தது."
ஊர்க்காரன் ஆயிற்றே என்று சாயிராமிற்கு இரண்டு வேளைகள் சாப்பாடு போட்டாள். பட்டப்பா வெளியில் போயிருந்த சமயங்களில் கொல்லையில் மரம் செடி கொடிகளுடன் உட்கார்ந்திருந்தாள்.
"என்ன இப்படி வெளியே உக்காந்துண்டு? ஆனந்தமா ஊஞ்சல்லே உக்காந்து ஆடமாட்டியோ"
"வாண்டாம்... அதெல்லாம் எனக்குப் பிடிக்கிறதில்லே"
"ஏன்னு கேக்கிறேன்? ஊர் உலகத்துலே நாத்தனார் செத்துப்போறதில்லையா? இப்படி அதுக்காக விரக்தியா இருந்துட முடியும்?"
நர்மதாவுக்கு எரிச்சலாக இருந்தது. தன் அம்மாவின் மீது கோபமாக வந்தது.
"வாயை வச்சுண்டு பேசாம இருக்கமாட்டா..."
பட்டப்பா வெளியே இருந்து வந்ததும், "என்ன சார்! நர்மதா இளைச்சிருக்கா?" என்று கேட்டான்.
"அதான் தெரியலை. ஊருக்கு வேணா போயிட்டு வான்னு சொல்றேன். கேக்கலை"
"என்னோட அனுப்புங்கோ"
"பேஷா...எல்லாத்துக்கும் அவளுக்குப் பூரண சுதந்திரம் கொடுத்தாச்சு. அவதான் இப்படி இருக்கா.
"எனக்கு ஊர்லே என்ன வச்சிருக்கு? நீங்க கிளம்பிப் போங்க. எப்ப வரணும்னு அவசியம் ஏற்படறதோ அப்ப வரேன்."
சாயிராம் கிளம்பிப் போய்விட்டான்.