(Reading time: 12 - 23 minutes)
காகித மாளிகை
காகித மாளிகை

பொறுத்துக் கொண்டிருப்பதற்கு--சீட்டாடும் மனிதனைச் சகித்துக் கொண்டிருப்பதற்கு. பானு மிகவும் வெறுக்கும் விஷயங்களில் சீட்டாட்டம் ஒன்று. "ஆண் சூதாடி ஆனால் அதைச் சகித்துக்கொள்ளும் பொறுமை பெண்ணுக்கு இருக்கக் கூடாது" என்றாள் ஒருமுறை.

 

  "பானு! அவ்வளவு உறுதியாக முடிவு செஞ்சிடாதே. இந்தக் காலத்லே சீட்டாட்டம் சாப்பாட்டெவிட மிக முக்கியமாக மாறிட்டது. அந்த மாதிரி விஷயங்கள்ளெ

 

  அவ்வளவு வெறுப்பு வளத்துக்கறது நல்லதில்லே" என்ற பொழுது, ஒருமாதிரியாகப் பார்த்துக் கொண்டே--"அண்ணா! நீ நிஜமாத்தான் சொல்றியா?" என்றாள். "இப்பொ உங்க வீட்டுக்காரர்க்குச் சீட்டாட்டம் ரொம்ப இஷ்டம்னு வெச்சிக்கொ--நீ என்ன பண்ணப்போறே?" என்றேன்.

 

  "என்ன செய்றேனா? நிறுத்த வெக்கறேன்." எவ்வளவு அழுத்தம்.

 

  "அவர் கேக்கலேன்னா?"

 

  "என்ன நீ இப்படிப் பேசறே? புருஷன் மனெவி ஒர்த்தர் சொல்றதெ இன்னொர்த்தர் கேக்காத நாள் அந்த உறவே அர்த்தமில்லாத துன்னு நினெக்கறேன்."

 

  எனக்கு ஏதோ சொல்லவேண்டும்போல் தோன்றியது. ஆனால் அதைவிட எப்படிச் சொல்வது என்பது புரியவில்லை. அதே பானு... இன்று! கட்டில் மீது படுத்துக் கொண்டு விக்கி விக்கி அழுதுகொண்டிருக்கிறாள். என் உடலில் நடுக்கம் கண்டது. அந்தக் குடும்ப வாழ்க்கை முழுவதும் எனக்குப் புரிந்துவிட்டதுபோல் தோன்றியது. பானுவின் அழுகை நான் என்றும் பார்க்காதது--பார்த்தாலும் பொறுத்துக்கொள்ள முடியாதது--மெதுவாக அவள் அருகில் உட்கார்ந்துகொண்டு கூந்தல் மீது கையை வைத்தேன்.

 

  "ஏன் பானூ அழறே?" என்றேன்.

 

  சிறிது நேரத்தில் கண்ணைத் துடைத்துக் கொண்டாள். "இதுதான் எனக்கு மிஞ்சி இருக்கறது. அழுதா கொஞ்சம் திருப்தியா இருக்கும்."

 

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.