(Reading time: 7 - 13 minutes)
Muthu Sippi
Muthu Sippi

இருந்த பீடித் துண்டைப் பற்ற வைத்துப் புகைவிட ஆரம்பித்தான் அவன்.

  

அப்பொழுது நடுப்பகல் வேளை. தெருக்கள் எல்லாம் நிசப்தமாக இருந்தன. சில வீடுகளிலிருந்து வானொலியில் மத்தியான இசை கேட்டுக் கொண்டிருந் சூது. பெண்கள் சிலர் வீட்டு வராந்தாவில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். தெருவில் சில பையன்கள் ஐஸ் விற்றுக் கொண்டிருந்தார்கள்.

  

மூர்த்தி தெருவிலே வேடிக்கை பார்த்துக் கொண்டு நடந்தான். ஒரு வீட்டு வாசலில் 'அறை வாடகைக் விடப்படும்' என்ற விளம்பரம் காணப்பட்டது . கதவை தட்டிக் கூப்பிட்டு விசாரித்தான். ஐம்பது வயசு மதிக்கும்படியான ஒரு பெண்மணி கதவைத் திறந்து கொண்ட வெளியே வந்தாள். ”என்ன வேண்டும்?" என விசாரித்தாள்.

  

மூர்த்தி தனக்கு ஓர் அறை தேவையாக இருப்பதாகக் கூறினான். அறையைத் திறந்து காண்பித்தாள் அந்த அம்மாள். அறை விசாலமாகவும் காற்றோட்டத்துடனும் இருந்தது. மாதம் பதினைந்து ரூபாய் வாடகையென்றும் லைட்டுக்காக இரண்டு ரூபாய் தனியாகக் கொடுத்து விட வேண்டும் என்றும் அறிவித்தாள் அவள். ஒரு மாதத்திய வாடகையை முன் பணமாகக் கொடுத்து விட்டு மூர்த்தி அங்கிருந்து கிளம்பினான்.

  

நேராக அதே தெரு வழியாகச் சென்று தெருக் கோடியை அடைந்தான் அவன். அங்கே பெரிய பங்களா ஒன்று காணப்பட்டது. வாசலில் டாக்டர் ஸ்ரீதரன் என்று ஒரு புறமும், மறுபக்கத்தில் ஜெயஸ்ரீ என்று வீட்டின் பெயரும் எழுதப்பட்டிருந்தது. பங்களாவின் வாசலில் இருந்து உள்ளே கவனித்தான் மூர்த்தி. வீட்டிலே சந்தடி ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. வீட்டிலிருந்து யாராவது வெளியே வருகிறார்களா என்று கவனித்தான் மூர்த்தி. இப்படியும் அப்படியும் ஏதோ ஒரு வீடு தேடுகிற மாதிரி மதில் சுவர் ஓரமாக நடந்தவாறு கவனித்துக் கொண்டிருந்தான். அரைமணி நேரம் ஆகியும் ஒருவரும் வெளியே வரவில்லை . அலுத்துப் போய்ச் சோர்ந்த உள்ளத்துடன் அவன் திரும்புகிற போது, மாடியிலிருந்து ஒரு குரல் தெளிவாகக் கேட்டது.

  

"ராமையா ! வெட்டி வேர் தட்டிகளுக்குத் தண்ணீர் ஊற்றவில்லையா?" என்று கூறியவாறு ராதா 'பால்கனி' பக்கமாக வந்து தோட்டத்தில் மாமரத்தின் கீழ் சிமிட்டிபெஞ்சியில் படுத்திருந்த தோட்டக்காரனைக் கூப்பிட்டாள். வெள்ளைப் புடவை உடுத்தி, ஸ்நானம் செய்த கூந்தலைப்

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.