(Reading time: 7 - 14 minutes)
Muthu Sippi
Muthu Sippi

அருகில் உட்கார்ந்தாள் பவானி.

  

சிறிது நேரம் வரையில் இருவரும் ஒன்றுமே பேச வில்லை. பிறகு பவானியே பேச ஆரம்பித்தாள்.

  

சுவாமிநாதன் போன பிறகு உன்னை நான் பார்க்கவே இல்லை. பாவம். நல்ல மனுஷர்...." என்று அனுதாபம் தெரிவித்தாள்.

  

ராதா மள மளவென்று கண்ணீர் பெருக்கினாள்.

  

நல்ல மனிதர் என்பதை நான் அன்றே புரிந்து கொண்டு. அவர் சொன்னபடி கேட்டிருந்தால் என் நிலையே வேறாக இருக்கும். அவரை நான் சரியாகத் தெரிந்து கொள்ளவில்லை. நம்மை வளர்த்த பாசத்தினால் நம்மிடம் அளவுக்கு மீறிய சலுகை காண்பிக்கிறார், வேண்டாத விஷயங்களில் தலையிடுகிறார் என்று நினைத்து அவர் மீது எனக்கு வெறுப்பும் கோபமும் தான் அப்போது உண்டாயிற்று."

  

பவானி அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

  

"இனிமேல் எனக்கு என்ன கௌரவம் இருக்கிறது? படித்த படிப்பும், மற்றவைகளில் இருந்த சாமர்த்தியமும் வீணாகிப்போன மாதிரிதான். நான் வெளியிலேயே போகிறதில்லை. வெறுமனே வேதாந்த புத்தகங்களைப் படித்துக் கொண்டிருக்கிறேன்."

  

பவானி லேசாகச் சிரித்தாள்.

  

ராதா, எனக்கு விவரங்கள் யாவும் தெரியும். வெறுமனே வேதாந்தப் புத்தகங்களைப் படித்துவிட் டால் நீயும் நானும் ஞானிகள் ஆகிவிட முடியுமா? ஆசா பாசங்களை லவலேசமும் துறக்க முடியாத நிலையில் நாம் இருக்கிறோம். அன்று உன் கணவன் வைர வளை யல்களை விற்றதும் நீ வெகுண்டு அழுதாயாம், 'என்னுடைய பிறந்த வீட்டாரால் கொடுக்கப்பட்ட நகை ஆயிற்றே' என்றாயாம். உன்னுடையது என்கிற அகங்காரம் உன்னை விட்டு மறையாமல் இருக்கும்போது வேதாந்த புத்தகங்களைப் படித்துவிட்டால் மட்டும் மனத்திலே தெளிவு வந்து விடுமா? எல்லோரும் ஞானிகளாகவும், வேதாந்திகளாகவும் மாறிவிடுவது அவ்வளவு

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.