(Reading time: 10 - 20 minutes)
Vata malli
Vata malli

  

பெரியண்ணன்.”

  

அய்யய்யோ. வயசானவரோ...”

  

வரத்தானே போறான்... நீங்களே பார்த்துச் சொல்லுங்க. ஒங்க வயசப் பார்த்தால், ஒங்க அக்காவுக்கும் வயசாயிருக்கும் போலத் தெரியுதே. எப்பா, அண்ணனைக் கூட்டிட்டு வாங்களேன்...”

  

மணப்பெண் போல் நாணப்பட்ட தாய்க்காரியிடமிருந்து, மகள்காரி மோர் டம்ளரை வாங்கி, சுயம்புவிடம் நீட்டினாள். அவன், அதைக் குடித்துக் கொண்டிருக்கும் போதே அப்பாக்காரர் வெளியே புறப்பட்டார். தம்பிக்காரனும் கூடவே போனான். பிள்ளைத்தாய்ச்சி புருஷன் காதில் கிசுகிசுக்க, அவன் இட்லி தோசை வகையறாக்களை வாங்கிவர எழுந்தான். அவனும் போனபிறகு, பிள்ளைத் தாய்ச்சிக்குச் சுயம்பு பக்கத்தில் நிற்க கூச்சமாக இருந்தது. உள்ளே போய்விட்டாள்.

  

சுயம்புவுக்கு, அப்பவே மாப்பிள்ளையைப் பார்க்கும் ஆவல். தம்பிக்காரனுக்கு வயசாவது தேறும். அண்ணன்காரனுக்கு அதுகூடத் தேறாதே என்பதுபோல் குறுக்கும் நெடுக்குமாக லாந்தினான். வாசலில் போய் நின்றான். ‘யாரு அது. இந்தப் பக்கமா வாராள். பஸ்ல... சும்மா பக்கத்துல இருந்ததுக்கு பவுசு பண்ணினாளே, அவளா, அவள்தான். அதே ரெட்டைப் பின்னல்... அதே அழுமூஞ்சி. அவனைப் பார்த்தபடியே வீட்டுக்குள் நுழையப் போன அந்தப் பெண்ணை, தப்பிக்க முடியாதபடி கையைக் குறுக்காக நீட்டிக்கொண்டு, சுயம்பு ஒரு கேள்வி கேட்கப் போனான். அவள், கோபப்படுவதற்குப் பதிலாக சப்த நாடிகளும் அடங்கி, சகல நாடிகளும் ஒடுங்கி, அவனைப் பயத்தோடு பார்த்தாள்.

  

ஓங்களுக்கு இந்த வீடா...”

  

ஆமா... இங்கே எப்படி...”

  

எங்க அக்காவைத்தான், ஒங்க வீட்டு வாத்தியார் மலைச்சாமி பாண்டியனுக்கு முடிவு

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.