(Reading time: 10 - 20 minutes)
Vata malli
Vata malli

செய்திருக்கு... ஆனாலும் நான் ஓ.கே. சொன்னாத்தான் கல்யாணம் நடக்கும். ஒங்களுக்கு அவரு என்ன வேணும்?”

  

கூடப்பிறந்த அண்ணன்...”

  

என்னப் பஸ்ல போட்டு பாடாப்படுத்துனாரே... அவரா... அப்படி என்னமா நான் பெரிய தப்புப் பண்ணிட்டேன்... என்னையே இப்படிப் போட்டு அடிச்சவரு, எங்க அக்காவை எப்படிப் போட்டு அடிப்பாரோ... ஒங்க வாடையே வேண்டாம்மா... நேருக்கு நேரா சொல்லிட்டே போயிடப் போறேன்...”

  

அவள், கண்களைத் தாழ்த்தினாள். பின்னாலும் முன்னாலும் பார்த்தாள். மெள்ள விசும்பினாள். ரகசியம் பேசுவதுபோல் சொன்னாள்.

  

அவரு என் அண்ணன் இல்ல. என்னோட ‘உட்பி’”

  

அப்படின்னா...”

  

இப்போ காதலிச்சுட்டு அப்புறமா கட்டிக்கப் போறவரு.”

  

அடிப்பாவி கெடுத்தியேடி... ஒங் கழுத்துல, அவன் கை போடு முன்னால உதட்டுல வாய் படலாமா. ஆமா, அந்தப் பாவிப் பய அப்படி ரகளை பண்ணுனானே. நீயும் ‘எண்ணா. எண்ணா’ன்னு வேசம் போட்டியே. பஸ்ல ஒங்க ஊருக்காரங்க யாராவது பார்த்திருந்தால்...”

  

பஸ்ல யாரும் இல்லன்னு உறுதி செய்த பிறகுதான் நான் கத்துனேன். அவரும் ஹீரோவானாரு...”

  

நல்ல மனுஷி நீ. கட்டிக்கப் போறவனை, கூசாம தங்கச்சின்னு சொல்றவன் ஒரு நாளைக்கு உன்னைத் தங்கச்சியா நெனச்சேன்னு சொல்லிடப் போறாண்டி. இனிமேலாவது அந்தக் கழுதைப் பயல ‘கஸின்-சிஸ்டர்’னு சொல்லச் சொல்லு. ஸிஸ்டர் என்கிற வார்த்தை ரொம்பப் புனிதமான வார்த்தை... எங்க அம்மாவ எனக்குப் பிடிக்கிறதுக்கே காரணம், அவள் எங்க அக்காவை பெத்தாள் என்கிறதுக்காக்த்தான்...”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.