(Reading time: 16 - 31 minutes)
Vata malli
Vata malli

ஆனா முடியலையே’ என்றான்.

  

அடுத்த பத்தி அறையில் ஆறுமுகப் பாண்டியின் மனைவி கோமளம் தேக்குக் கட்டிலில் ஒருச்சாய்த்துப் படுத்திருந்தாள். ஒருபக்கம் இருவயது மகள். மறுபக்கம் ஆறுமுகப் பாண்டி. சின்னப்பயல் சித்தப்பா பக்கம் போய் விட்டான். ஆறுமுகப் பாண்டியாவது கண்களை மூடிக் கொண்டு தூங்காமல் கிடந்தான். கோமளமோ, கண்களை மூடாமலே கிடந்தாள். அடுத்த ஆண்டு மைத்துனன் கல்லூரிக்குப் போக முடியும் என்று கனவு கண்டவள் இன்று அந்தக் கனவு சிதறியதைக் கண்கூடாகப் பார்த்து விட்டாள். இனிமேல் தனது தங்கைக்கு அவன் கணவனாக முடியாது என்பதைக் கண்டறிந்ததும், அவள் மனம் அந்தக் குடும்பத்துடன் கட்டப்பட்ட பந்தத்தை அறுக்க முயற்சி செய்யவில்லையானாலும், அவிழ்க்க முயற்சி செய்தது. அவள் மனம் அந்த முயற்சியில் சில உண்மைகளை, அல்லது உண்மைகள் போன்றவற்றைத் தேடிக் கண்டு பிடிக்கப் புறப்பட்டன. அப்படிக் காணக்கான, பெற்றவர்கள் தன்னைப் ‘பாழும் கிணற்றில்’ தள்ளி விட்டார்களோ என்ற எரிச்சல், புகுந்த ஊரிலும், பிறந்த ஊரிலும் தலை நிமிர்ந்து நடக்க முடியாதே என்ற வேதனை. ஆபீஸராய் இருக்கும் அண்ணனைக் கட்டியவளிடம், ‘என் மைத்துனனும் என்ஜினியராக்கும்’ என்று மார்தட்ட முடியாமல் போன மனக்கவலை. இந்த சுயம்புவால் தனது பிள்ளைகளின் எதிர்காலமும், பாதிக்கப்படலாம் என்ற தொலைநோக்குக் கவலை. ஐயாயிரம் ரூபாய் அழ வேண்டியதிருக்கே என்ற உடனடிக் கவலை. எல்லாவற்றிற்கும் மேலாக...

  

மைத்துனனுக்கு வந்தது, மணவாளனிடமும் இருக்குமோ என்ற சந்தேகம். இல்லற வாழ்க்கையில் ஏக்கங்கள் இல்லையானாலும், அழுத்தமான தாம்பத்திய உறவு கிடைக்காமல் போயிருக்குமோ என்ற கேள்வி. முதலிரவில்கூட, இந்த ஆறுமுகப்பாண்டி சினிமாக் கதாநாயகன்போல் தன்னைக் கைகளில் ஏந்திக் கொள்ளாமல், துண்டைக் கடித்துக்கொண்டு நின்றது கூட, ஒரளவு பொட்டைச் செயலோ என்ற விரசமான சிந்தனை. ஒருதடவை, சைக்கிளில் பின்னால் இருந்த தான், முன்னால் உட்காரச் சிணுங்கியபோது, அவன் ரோடு மறைக்கும் என்று சொன்னது இப்போது, மனதை மறைத்தது. சிற்சில சிக்கலான சமயங்களில் - குறிப்பாக, மருமகள் - மாமியார் மகாப்போரின்போது எல்லாக் கணவன்மாரும் செய்வது போல், இவன், தன்னை அடிப்பது கிடக்கட்டும், அடிப்பதற்குக்கூட கையை ஓங்காதது கூட, ஒரு ஆண்மையற்றதனமோ என்ற எண்ணம். ஆக மொத்தத்தில் அவள் பிரச்னை பரீட்சித்துப் பார்த்துக் கண்டறிய முடியாத விவகாரம். தம்பிக்கு வந்தது அவனைப் போலவே முகஜாடை கொண்ட அண்ணனிடமும் ஓரளவு இருக்கும் என்ற மனோவிகாரம். இன்றைய சண்டையில்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.