(Reading time: 16 - 31 minutes)
Vata malli
Vata malli

தேடுறதே இல்ல!”

  

என்ன நீங்க பொம்புள மாதிரிப் புலம்பறிய!”

  

இதுக்குப் பேரு புலம்பலா... பொம்பளன்னாலும் ஆம்பளன்னாலும் மனசு ஒண்ணுதானம்மா...”

  

அம்மா. அம்மா.. எப்பப் பார்த்தாலும் நான் ஒங்களுக்கு அம்மாதான்!”

  

தாய்க்குப் பிறகு தாரம்னு சும்மாவா சொன்னான். அதோட பொம்பளய மதிக்கத் தெரியணும்... அவளுவள அடிக்கிறவன் புருஷன் இல்ல. தாலியை லைசென்ஸா வைத்திருக்கிற வேட்டைக்காரன்... எங்கப்பா கூட, எங்கம்மாவத் திட்டுவாரு... அம்மா திருப்பிக் கொடுக்கிறதையும் வாங்கிக்குவாரு. ஆனால், எனக்குத் தெரிஞ்சு ஒரு நாள் கூட எங்கம்மாவை அவரு அடிச்சது கிடையாது...”

  

அவரும் சுயம்புவோட அப்பாதானே!”

  

இன்னிக்கு என்ன... ஒன். பேச்சு ஒரு மாதிரி போகுதும்மா... பேசாமல் தூங்கு!”

  

ஒங்ககிட்ட இந்த மாதிரி வார்த்தையத்தான் எதிர் பார்க்க முடியும். தள்ளிப் படுங்க...”

  

ஒன்னத் தள்ளச் சொல்றியா. இன்னிக்கு நெனைச்சாலும் அது முடியாது!”

  

என்னைக்குத்தான் அது முடிஞ்சுதாம்.”

  

நான் உன்னச் சொன்னால் நீ எதையோ சொல்றே! சரி... நீயே சொல்லு... தம்பிய நாளைக்கே சேர்த்திடலாமா. இல்ல தங்கச்சி கலியாணம் முடியுறதுவரை இழுத்துப் பிடிப்போமா..?”

  

எந்த நோய்க்கும் மருந்துண்டு. ஆனா பரம்பரை நோய்க்குக் கிடையாதாமே!”

  

ஆறுமுகப்பாண்டி, அவள் தோளில் முகம் போட்டு அவளைத் தன் பக்கம் திருப்பப் பார்த்தான். தீர்வு காண முடியாத வலிக்கு, பெயின் கில்லர் போடுவது போல், வீட்டை உலுக்கும் அந்தப்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.