(Reading time: 3 - 5 minutes)

கருத்துக் கதைகள் – 22. நம்பிக்கை - Chillzee Team

man in a island

ரு ஊரில் நல்லவன் ஒருவன் இருந்தான். எப்பொழுதும் தன்னால் இயன்ற வரை மற்றவர்களுக்கு உதவுவது அவனின் தன்மை.

ஒரு நாள் சுற்றுலா சென்ற போது அவன் ஒருவன் மட்டும் சென்ற சிறு படகு கவிழ்ந்து விட்டது. கடல் நீரினால் அடித்து செல்ல பட்ட அவன் யாருமே இல்லாத தீவு ஒன்றில் கரை ஒதுங்கினான்.

திகைத்து போனாலும், தன்னை காப்பாற்ற யாரேனும் வருவார்கள் என்ற நம்பிக்கையோடு காத்திருந்தான். அந்த பக்கமாக செல்லும் பெரிய கப்பல்களுக்கு சமிக்ஞை செய்ய தன்னிடம் இருந்த கைக்குட்டையை கொடியாக கட்டி வைத்தான்.

ஆனால் இரண்டு மாதங்கள் சென்ற பின்பும் அவனை காப்பாற்ற ஒருவரும் வரவில்லை.

அவனின் நம்பிக்கை குறைந்தாலும் அந்த தீவில் வாழ தன்னால் இயன்ற அளவில் முயன்றான்.

அங்கே இருக்கும் வன விலங்குகளிடம் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள சிறு குடிசை ஒன்றை கட்டிக் கொண்டான்.... அங்கே கிடைத்த சிறு சிறு உணவு பொருட்களை தேடி கண்டு பிடித்து எடுத்து உண்டு பசியாறினான்.

ருநாள் அதே போல் அவன் உணவு தேடி விட்டு  திரும்பிய போது அவன் மிகவும் கஷ்டப் பட்டு கட்டி இருந்த அந்த குடிசை மொத்தமாக எரிந்து சாம்பலாகி இருப்பதை பார்த்து திகைத்து போனான். குடிசை இருந்த இடத்தில புகை மட்டுமே வந்துக் கொண்டிருந்தது...

அவ்வளவு தான் அவனுக்கு கோபம் பொங்கியது! விரக்தி மேலோங்கியது...

கோபத்துடன் கத்தினான்...! நல்லது செய்த அவனுக்கு எல்லாமே தீங்காகவே நடப்பதாக அழுது புலம்பினான்...!

அப்போது ஒரு பெரிய கப்பல் ஒன்று அவன் இருந்த தீவின் திசையில் வருவதை கண்டான். கைகளை வேகமாக அசைத்து அவன் கத்த, அந்த கப்பல் மெல்ல அந்த தீவின் அருகே இருந்த கரையோரம் வந்து நின்றது.

அவனால் நம்பவே முடியவில்லை!

கப்பலில் இருந்து இறங்கி வந்த மாலுமியிடம் எப்படி அந்த தீவிற்கு வந்தார்கள் என ஆவலுடன் கேட்டான்.

“எங்கள் கப்பல் தலைவன் எங்கிருந்தோ புகை வருவதை கவனித்து என்ன என்று தன்னுடைய தொலைநோக்கியில் பார்த்த போது நீங்கள் நட்டிருந்த உதவி கேட்கும் கொடி அவர் கண்ணில் பட்டது. யாரோ உதவி கேட்கிறார்கள் என்பதை புரிந்துக் கொண்டு இந்த பக்கம் கப்பலை திருப்பி வந்தோம்.” என்றான் அந்த மாலுமி!

 

வாழ்வில் நாம் சவால்கள், பிரச்சனைகள் என எத்தனை எத்தனையோ எதிர் கொள்ள வேண்டி இருக்கலாம். சில சமயம் நாம் நம் வாழ்வின் மோசமான நேரம் என்று நினைப்பது கூட blessing in disguise ஆக இருக்கலாம்.

எல்லாவற்றையும் இழந்து நிற்கும் நிலைமையிலும் நம்பிக்கையோடு இருந்தால் கட்டாயம் ஏதேனும் பாதை தெரியும்.

இரவு நீண்டாலும் விடியல் தோன்ற தான் செய்யும்!

நம்பிக்கை தான் வாழ்க்கை smile

Story # 21 - Vazhkkai payanam

Story # 23 - Eli pori

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.