(Reading time: 2 - 4 minutes)

சிறுகதை - இலவசம் இளிக்குது - பூவேந்தன்

sweets

புகழ் பெற்ற ஸ்வீட் கடையின் புதிய கிளை திறப்பு விழா..

சிறப்பு சலுகையாக ஒரு கிலோ இனிப்பு வாங்கினால் நாலு கிலோ சக்கரை இலவசம் என்று ஆபிஸ் போகும் வழியெங்கும் அறிவிப்பு வேறு 

எப்டியாச்சும் வாங்கி வீட்ல கொடுத்து பொண்டாட்டிகிட்ட நல்ல பேரு வாங்கனும்னு... 

ஆபிஸ்ல ஒரு பொய்ய சொல்லி ஒரு மணி நேரம் பர்மிஷன் வாங்கி கியுல நின்னு ஸ்வீட்ட வாங்கி அடிச்சு புடிச்சு ஆபிஸ் வரதுக்குள்ள ரெண்டு மணி நேரமாய்டுச்சு..

வந்த கொஞ்ச நேரத்துல லன்ச் டைம் வேற..சரி சாப்ட்டு வந்து வேலைய பாக்கலாம்னு போனா அது ஒரு மணி நேரமாய்டுச்சு

சாப்ட்டு வந்ததும் ஒரு க்ளையண்ட் கால் அவன் ஒரு மணி நேரம் ஆத்து ஆத்துன்னு ஆத்தினான்.. 

அப்புறம் Tea break போய்ட்டு வந்து கொஞ்ச நேரம் வேலைய பாத்துட்டு..

6மணிக்கு ஆபிஸ் CAB புடிச்சு வீட்டுக்கு வந்து..

மனைவிகிட்ட ஸ்வீட்ட கொடுத்து விவரத்த சொன்னேன்.. பெருமையா..

இந்தாம்மா ஸ்வீட் 1கிலோ அதுக்கு 4கிலோ சக்கரை இலவசம்

அப்டியே ஒரு லுக்கு வுட்டு

ஸ்வீட் எவ்ளோக்கு வாங்கினிங்க?

கிலோ ரூ640ம்மா..

இதே கடை ஸ்வீட் ஆன்லைன்ல எவ்ளோ?

ம்ம்..ரூ.520

சக்கரை கிலோ30ரூபா, 4*30 அது ஒரு 120..இது ஒரு 520 ஆக ரூ640 சரியா போச்சே இதுல இலவசம் எங்கங்க?

அது.. அது.. வந்தும்மா இலவசம்ன்னு போட்டுருந்தாங்க அதான்..

சக்கரை வெல கூட தெர்ல உங்கள என்ன   பண்றது..

ஒரு மாதிரி பாத்துட்டு போய்ட்டா

று நாள் ஆபிஸ்ல 

அரை நாள் லீவ் போட்டாங்க என் பேர்ல 

என்னடான்னா நேத்து ரெண்டு மணி நேரம் லேட்டுல்ல அதுக்காம்

ஆக அரை நாள் சம்பளமும் போச்சா..

கடவுளே அது தெரிஞ்சா இன்னும் திட்டுவாளே..

சரி நம்ம தலை எழுத்து ஓவர் டைம் செய்ய வேண்டியதுதான்..

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.