(Reading time: 3 - 6 minutes)

கவிதை சிறுகதை - அவனும் அவளும் இசையும் - நர்மதா சுப்ரமணியம்

Love Music

ளம் தம்பதியர் அவனும் அவளும்..

கச்சேரி குழுமத்தின் இளங்குயில்களாய் உலாவிய
அந்த ஜோடிக்குரலின் 
ஸ்பரிசத்தில் மயங்கி
ரசிகர்களாய்
ரசனைவாதிகளாய் மாறி
இசையால் இணைந்தவர்களை
வாழ்க்கையில் இணைத்தார்கள்
அவர்களின் பெற்றோர்கள்....

இன்னிசை நாதமாய் ஒலித்தது
அவர்களது இல்வாழ்க்கை...

இனி நான் உன்னுடன் பாடேன்..
ஜோடிக்குரல் 
இனித் தனிக்குரலாய் 
ஒலிக்குமென அவளுரைத்ததில்
சிறு மனத்தாங்கல்
சிறு பெரும் வாக்குவாதம் 
அவர்களுக்கிடையில் முதன்முதலாய்...

அச்சிறு மன விரிசலுடனே சென்றனர்
மறுவீட்டு விருந்திற்காய்
அவளின் மாமன் வீட்டிற்கு.....

அவள் பார்வை படும் 
இடத்திலும் நிற்காது
ஓடி ஒளிந்தான் அவளவனும்
தன் கோபத்தை அவளுக்கு
உணர்த்தும் விதமாய்.....

செல்லமாய் முறைத்து
சின்னதாய் சீண்டி
வம்பிழுத்தால் அவளவனுடன்
அக்காரிகையும் அவ்விருந்தில்
அவனின் சிறு ஒதுக்கமும்
காணச் சகிக்காது.....

ஜோடிக்குரலை ஜோடியாய்
பாடச்சொல்லி வற்புறுத்தினர்
அவளின் மாமன் மக்கள்...

தன் நெஞ்சின் காதலை
மனதின் எண்ணங்களை
கவிதையாய் பாடத் தொடங்கினர்
இருவரும்...

அவன் - உன் விழியில் என் இதயம் சிக்கித்தவிக்கிறதடி

அவள் - உன் குரலில்  என் உயிர் உருகி வழியுதடா

அவன் - உன் மனதின் ஓசை என் இசையாய் மாறிப்போனதடி

அவள் - அது என் மனதில் மல்லிகை வாசமாய்  மணக்குதடா

அவன் - உன் வாசம் என் வசமிழக்க
செய்யுதடி

அவள் - உன் இசை  என் ஜீவனை உன் வசம்  இழக்கச்  செய்யுதடா

அவன் - அதன் நேசத்தில் என் ஜீவனும் கரைந்து போகுதடி

அவள் - உன் இசையால்  என் உயிரின் ஆழத்திற்கு  செல்வது  நீ!  மூழ்குவதேன்னவோ  நான்

அவன் - உன் குரலின் உணர்வால் என்னை உயிர்பிப்பவள் நீ!
என் மீதான உன் ரசனையை 
ரசிக்கும் ரசிகன் நான்

அவள் - என் தகர  உயிரை  தங்கமாகும்  ரசவாதம்  உன் குரல்

அவன் - நீ ரசிக்கும் பாவத்தில் பாவமாய் பயணித்து ஈர்க்கிறது உன்னை என் குரலோசை

அவன் - நான் பாடும்  பொழுது தோன்றும்  என் நயனங்களின்  இனிய இசை நயமாய்  ஈர்க்கும்  
உன் நயங்களை

அவன் - உன் நயங்களின் ஈர்ப்பில்
என்னை மீறி துடிக்கிறதடி என் நெஞ்சம்

அவள் - உன் பாடல்  லயத்தில்  லேசாகிப்  பறக்குதடா  என் இதயம்

அவன் - தாளலயத்தில் பறக்கும் உன் இதயம் என்னுள் அடங்கிட கண்டேனடி

அவள் - இதை நான் எப்போதோ  கண்டுவிட்டேனடா

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.