(Reading time: 9 - 17 minutes)

சிறுகதை - மாறியது நெஞ்சம் - K.சௌந்தர்

heart

மீனாட்சிக்கு கண்களைத் திறக்க முடியவில்லை. இரவு முழுவதும் உறக்கமே பிடிக்காவிட்டால் எப்படி இருக்கும்? மகன் அறையில் காலை ஐந்து மணி அலாரம் அடித்து ஓய்ந்தது.

ஆச்சு இன்னும் கொஞ்ச நேரத்தில் மருமக மகாராணி எழுந்து  வந்துவிடுவாள். அப்புறம் சமையல் அறையில் அவள் ஆதிக்கம்தான். காலையில் காபி போட்டு கணவனுக்கு

கொடுத்துவிட்டு தானும் குடிப்பாளே தவிர மாமியார் என்று ஒரு ஜீவன் அந்த வீட்டில் இருப்பதே அவள் கண்ணுக்கு தெரியாது.

முதல்நாள் அவள் மீனாட்சிக்கும் சேர்த்துதான் காபி போட்டாள். மீனாட்சிதான் மாமியார் அதிகாரத்தை காட்டுவதாக எண்ணி முகத்தை சுளித்து ".இதோ பாராம்மா உங்க வீட்டுல    

வேணும்னா இப்படி வெந்நீர் மாதிரி காபி குடிப்பாங்களா இருக்கும் எனக்கு இந்த மாதிரி குடிக்கப் பிடிக்காது. நீ காபி போடலைன்னு யார் அழுததது, போடத் தெரிஞ்சா போடு இல்லைன்னா நானே போட்டுக்கறேன்" என்று அந்த பெண்ணை அவள் ஏழ்மையை சுட்டிக்காட்டி மட்டம் தட்டினாள்.

அன்று முழுவதும் சுமிதா அழுதுக்கொண்டே இருந்தாள். இதை கவனித்த ஆகாஷ் “அழாதே சுமி, உண்மையிலேயே நீ போட்ட காபி நல்லாவே இருந்தது, அம்மா அந்தகாலத்து மனுஷியில்லையா, அதான்  அவுங்களுக்கு அது பிடிக்கலை. இனிமே நீ எனக்கும் சேர்த்து காபி போட்டுடு," என்று சொன்ன பிறகுதான் அவள் தனக்கும் கணவனுக்கும் மட்டும் போட்டுக் கொள்வது.  

ஆனால் ‘ஏதோ கோவத்துல சொன்னது, அதெல்லாமா பெரிதா எடுத்துக்கறது...இதுதான் சாக்குன்னு ஒதுங்கிகிட்டா, ஒரு வார்த்தை  சொன்னதும் அழுது மாய்மாலம் பண்ணி புருஷனை தன் பக்கம் திருப்பிக்கிட்டா, இந்தப்பையனும் ஏன்தான் இப்படி பெண்டாட்டி தாசனாக இருக்கிறானோ?’ ..என்றுதான் முரண்டியது மீனாட்சியின் மனம்.

தானே போய் காபி கலந்து குடிப்பது ஒன்றும் மீனாட்சிக்கு சிரமம் இல்லை, ஆனால் மகனுக்கு தன் கையால் காபி கொடுக்க முடியவில்லையே என்ற ஆதங்கம்தான் அவளுக்கு.   

மகனுக்கு டிஃபன், சாப்பாடு, வெந்நீர் எடுத்து வைத்தல் எல்லாமே மருமகள் கைங்கர்யம்தான். என்ன செய்வது, கல்யாணமான புதிது தானே என்று விட்டுக் கொடுத்தால் இந்த இரண்டு மாதத்தில் நிலமை மோசமானதே தவிர சரியாகவில்லை.

இன்று விடக்கூடாது, எப்படியிம் காபி போட்டு மகனுக்கு தன் கையாலேயே கொடுத்துவிடுவது என்று தீர்மானித்தாள். ஆனால் இந்த தீர்மானம் அவள் வரையில் நிறைவேற்ற முடியாமல் மகனின் குரல் தடுத்தது. “சுமி, சீக்கிரம் எழுந்து காபி போடும்மா  ..தலை வலிக்கிறது” , என்று மனைவியை எழுப்பிக்கொண்டிருந்தான் மகன் ஆகாஷ்.  

“ஏண்டாப்பா அவளை தொல்லை பண்ணுறே, தலையை வலிக்குதுன்னா எங்கிட்ட சொல்ல வேண்டியது தானே? நா காபி போட்டு குடுக்க மாட்டேனா...” என்று குரல் கொடுத்தாள் மீனாட்சி.  

தாயின் குரலை  கதவின் அருகில் கேட்டு திகைத்த ஆகாஷ்," என்னம்மா இது , நாங்க பேசுறது எல்லாம் ஓட்டு கேப்பீங்களா... இது கொஞ்சமும் நல்லாயில்லை " என்றான்.

" நீங்க கொஞ்சம் பேசாம இருங்க” , என்று கணவனை அடக்கிவிட்டு " அத்தை , வயசான காலத்துல உங்களுக்கு ஏன்  சிரமம்? நானே காபி போட்டுக்கறேன்” , என்றபடி வெளியே சென்றாள் மருமகள் சுமிதா.

உண்மையிலேயே மாமியார் மனம் கோணாமல் நடக்கவேண்டும் என்றுதான் சுமிதாவுக்கு ஆசை. ஆனால் எதை செய்தாலும் குறை சொல்பவர்களிடம் எப்படி நடந்து கொள்வது என்று தெரியாமல் முடிந்தவரை ஒதுங்கி செல்லத் தொடங்கினாள். மீனாட்சியைப் பொறுத்தவரை அதுவும் குற்றமானது .

எரிச்சலுடன் முகத்தை தோள்பட்டையில் இடித்துக்கொண்டாள் மீனாட்சி. ‘உக்கூம் இதுல ஒன்னும் கொறைச்சலில்லை. என்ன சொக்குப்பொடி போட்டு என் பிள்ளையை மயக்கினாளோ, அவள் என்ன சொன்னாலும் தட்ட மாட்டேங்கறானே”’, என்று அங்கலாய்த்தவாறு குளியல் அறை நோக்கி நடந்தாள் மீனாட்சி.  

மருமகளை  எப்படியும் பழிவாங்க வேண்டும், அதையும் மகனுக்குத் தெரியாமல் செய்ய வேண்டும். எப்படி செய்வது.... அவள் மனத்தில் ஒரு திட்டம் உருவானது.

மருமகளும் வேலைக்கு செல்பவள் , எனவே அவளுக்கும் கணவனுக்கும் வேண்டியதை செய்து எடுத்துக்கொண்டு அவனுடனேயே கிளம்பிவிடுவாள். திரும்பி வரும்போது மட்டும் அவள் முன்னாலேயே வந்துவிடுவாள். அப்போதுதான் அந்த திட்டத்தை நிறைவேற்றவேண்டும்.   ஒன்றுமே தெரியாதது போல கோயிலுக்கு சென்றுவிட வேண்டும், விஷயத்தை கேள்விப்பட்ட பிறகுதான் வீட்டுக்கு திரும்ப வேண்டும் .

மறுநாள் மாலை ஐந்து மணி, இன்னும் அரை மணி நேரத்தில் சுமிதா வந்துவிடுவாள். சுமிதாவிடம் ஒரு தனி சாவி உண்டு. அவள் கதவை திறந்து உள்ளே காலை வைத்ததும் வழுக்கி விழும்படி வாயிற்படியோரம் விளக்கெண்ணெய் ஊற்றிவைத்தாள் மீனாட்சி. இதில் அவள் மீது யாரும் சந்தேகப்பட முடியாது. சில நாட்களாக வாசற்படியோரம் மொட்டைமாடியிலிருந்து தண்ணீர் கசிந்து கொண்டிருந்தது. அது சில சமயம் தரையில் விழுந்து வழுக்குவதும் உண்டு. அதனால்தான் தன் மீது சந்தேகம் வராதவாறு விளக்கெண்ணெயை தண்ணீரோடு கலந்து ஊற்றிவிட்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.