(Reading time: 3 - 6 minutes)

கவிதை சிறுகதை - மலர்கள் செய்த மாயம் - நர்மதா சுப்ரமணியம்

loveRose

வெண்பனிப் புகையில்
வெள்ளை மனிதர்கள் உலாவரும்
மேற்கத்திய தேசம் அது....

விடியற்காலை பொழுதில்
அமைதியின் திருவுருவாய்
நுழைந்தாள் அவள்
மனிதர்களின் மூளை
இயந்திரமாய் உழைக்கும்
மென்பொருள் நிறுவனத்திற்குள்...

தன் மேஜையின் கணிணியை
ஒளிரவிட்டு திரும்பியநொடி
கண்டாள் ஓர் பூங்கொத்து
தன் இருக்கையில்...

"சிரிப்பை மறந்த சித்திரமே
மனம் விட்டு சிரிப்பாயா எனக்காக,
இப்படிக்கு, N "
என்றிருந்தது அக்குறிப்பேட்டில்...

ஒளிர்ந்தது அவள் கண்கள்
N என்றதும்...
மென்நகை புரிந்தாள் மாயவளும்...

தொடர்ந்த நாட்களில்
பூங்கொத்தின் குறிப்பேட்டில்

"உன் மென் சிரிப்பு 
பெருச்சிரிப்பாய் மாறிட
வரம் வேண்டும் எனக்கு
தருவாயா இன்று" என்றிருக்க
இதழ் விரிய சிரித்தால் அன்று...

"இதழ் சிரிப்பால்
உன் விழி நீர் சிந்த
ஆசைக் கொண்டேன் நான்
தருவாயா அச்சிரிப்பை எனக்கு"
என்றிருக்க

வரவிருக்கும் பிறந்தநாளிற்காய்
ஆச்சரியப் பரிசனுப்புவிக்கும்
தன் தோழியின் நினைவில்
விழி வழிய சிரித்தால் அவள்...

ராம் லட்சுமணனின் 
பெண் பாலாய்
சகோதரியாய் உருமாறி
தன் இன்பத்தை 
மட்டுமே எண்ணும்
தோழியின் நினைவில்
உருகித்தான் போனது
அவளின் மனம்...

பணிக்கான வேலை
அத்தேசத்தில் முடிவடைய..
பயணிக்க தீர்மானித்தால்
அவள் நாட்டிற்கு...

மேகத்தினூடே பறவையாய்
பறந்த விமானம்
தரை இறங்கிய நேரம்
அவளின் பிறந்தநாளின்
துவக்க மணித்துளிகள்
அவள் நாட்டு நேரப்படி..

வானிலைய பணியாளர்கள்
ஒவ்வோர் பூங்கொத்தாய்
அளித்து வரவேற்றனர் அவளை..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.