(Reading time: 2 - 4 minutes)

சிறுகதை - யார் சரி இல்லை??? - சிவரஞ்சனி

parentsFight.

ணவனும் மனைவியும் காரசாரமாக சண்டையிட்டுக்கொண்டிருந்தனர்.

கோபத்தில் இதயங்களின் இடைவெளி அதிகமாவதால் சத்தமாக பேசும் அவசியம் எழுகிறது என்று கூறுவார்கள்.

அக்கூற்றினை மெய்யாக்கும் வகையில் கத்திக்கொண்டிருந்தனர் இருவரும்.

கணவன்: உன்னோட அம்மா அப்பாதான் சரி இல்ல.எல்லா பிரச்சனைக்கும் அவங்கதான் காரணம்.

மனைவி: ஓஹோ ! உங்க அம்மா அப்பா அப்டியே சரியானதை தவிர ஒன்ணுமேய்ய்ய் செய்ய மாட்டாங்க.பிரச்னையை இழுத்து விடறதே அவங்கதான்.

குழந்தை: அப்பா!

கணவன்: இருடா! என்னடி ரொம்ப ஓவரா பேசற.வாய கிளறாத.அப்பறம் நல்லா இருக்காது .

குழந்தை:அம்மா!

மனைவி:,இருடா! யாரு ஓவரா பேசுறது ? நீங்களா ? நானா ? நீங்கதான் தேவை இல்லாம என் வாயை கிளறுறீங்க .

குழந்தை: அச்சோ, ப்ளீஸ்,கொஞ்சம் நான் சொல்றதை கேளுங்களேன் .

இருவரும்: என்னடா???

குழந்தை: யாரோட அம்மா அப்பா சரி இல்லனு நான் சொல்றேன்.

திடுக்கிட்டு விழித்தனர் இருவரும்.

குழந்தை: என்னோட அம்மா அப்பாதான் சரி இல்ல.சத்தமா பேசி என்னை பயமுறுத்துறாங்க .

குழந்தையின் ஒற்றைச் சொல்லில் கட்டவிழ்ந்தது அவர்களின் அகமும் அறிவும் .

இத்தனை வருடங்களுக்குப் பிறகும் அவர்களை எண்ணி பெருமிதம் கொண்டு,அவர்களுக்காக சண்டை இடும் அளவிற்கு நம் மனதில் மரியாதையை விதைத்துள்ளனர் .

ஆனால் நாமோ முளைத்து மூன்று இலை விடாத குழந்தையும் மனம் கசந்து பேசுமாறு நடந்துகொள்கிறோம் என்று இருவரும் ஒரு சேர உணர்ந்தனர் !

அப்போது அழகானதொரு பார்வை பரிமாற்றம் நிகழ்ந்தது இருவருக்குள்ளும் .

இதயங்களின் இடைவெளி குறைந்ததால் பேசாத வார்த்தைகளும் உணர்ந்தன இதயங்கள்.இதயங்கள் வெல்லும் தருணங்களில் எல்லாம் ஏனோ மொழிக்கு வேலை குறைந்துவிடுகிறது .

கணவன் மனைவி என்ற இரண்டு பதமாய் பிரிந்து நின்றவர்கள் பெற்றோர் என்ற ஒற்றை பதமாய் இணைந்தனர் .

குழந்தையை சமாதானம் செய்து மகிழ்வித்து தாங்களும் சமாதானம் கண்டனர் .இனி அங்கு சத்தத்திற்கு வேலை இல்லை.இதயங்களின் சங்கீதம் இனிமை சேர்க்கும்.....

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.