(Reading time: 9 - 18 minutes)

சிறுகதை - ஒரே ஒரு நாள் - சிவரஞ்சனி

Husband

ஜய், அஜிதா தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள். மூத்த குழந்தை அனன்யா ஐந்தாம் வகுப்பு படிக்கிறாள். இளைய குழந்தை அகிலேஷ் ஒன்றாம் வகுப்பு படிக்கிறான்.

ஒருநாள் பேச்சுவாக்கில், அஜிதாவைப் பார்த்து நக்கலாக , "உனக்கெல்லாம் என்னடி,ராணி போல வாழ்க்கை. காலைலயே நாங்கல்லாம் கிளம்பிடறோம் . அதுக்கப்பறம் ஒரே ஜாலிதான் . டிவி பார்க்கலாம்,பேஸ் புக் பார்க்கலாம்,தூங்கலாம்.எனக்கெல்லாம் நாய்ப்பொழப்பு டி"

அவள் கோபமாக,

" ஹலோ ,எங்களுக்கும் அதே போல தான்."

நக்கலாய் சிரித்தவாறே,

" சும்மா காமெடி பண்ணாதடி "

கொந்தளித்தவள் ,முதல்வன் ரகுவரன் போன்று,

" ஒரு நாள்,ஒரே ஒரு நாள் நீங்க ஹவுஸ் வைப் வேலைய செஞ்சு பாருங்க, அதுக்கப்பறம் உலகத்துல இதைத் தவிர வேற எந்த வேலையும் கஷ்டம்னு தோணாது "

அவன் விழுந்து விழுந்து சிரித்தவாறே,

" இந்த காமெடிக்காகவே நான் இருக்கேன்டி.நாளைக்கே இருக்கேன்.இது சப்பை மேட்டர்னு ப்ரூவ் செய்றேன் பாரு "

" நாளைக்கு லீவா உங்களுக்கு?"

" ஒர்க் ப்ரம் ஹோம் வாங்கிக்குறேன் "

" வேண்டாங்க இந்த விஷப்பரீட்ச்சை ,உங்களால ஒரு வேலையும் செய்ய முடியாது "

" அதெல்லாம் தாராளமா முடியும் "

" விதி யாரை விட்டுச்சு " 

" போடி போடி "

றுநாள் காலை 5.30

தூங்காதே தம்பி தூங்காதே, சோம்பேறி என்ற பெயர் வாங்காதே,

இவ்வாறாக அவன் மொபைலில் அலாரம் அலறியது .அவன் எழுந்தபாடில்லை .

அவள், " ஏங்க! அலாரம் அடிக்குது பாருங்க. சேலன்ச் மறந்துபோச்சா ? எழுந்து போய் வேலையப் பாருங்க "

அவன் திடுக்கிட்டு எழுந்தான். கண்ணைத் திறக்க முடியவில்லை அவனால் . "தூக்கம் வருதுடி ,ஒரு அரைமணி நேரம் கழிச்சு செய்றேனே,இந்த அலாரத்தை முதல்ல அடுப்புல போடணும் ,சும்மா கத்திக்கிட்டு"

அவள் சிரித்தவாறே ,

" நீங்க அரைமணிநேரம் கழிச்சு செய்லாம்ங்க , ஆனா பஸ் அரை மணி நேரம் லேட்டா வராதே "

" எல்லாம் என் நேரம், என்னாமா நக்கலடிக்கறா. என்னா குசும்பு இருந்தா இந்த பாட்டை அலாரம்க்கு செட் பண்ணி வச்சிருப்பா "

என்று புலம்பியவாறே கண்ணைத் தேய்த்துக்கொண்டே சமையலறை நோக்கிச் சென்றான்.

அவளுக்கு அவள் கணவன் மீது நம்பிக்கை இல்லை.எப்படியும் குறைந்தது ஒரு ஆயிரம் சந்தேகமாவது வரும் அவனுக்கு என்று எண்ணியவாறே அவனுக்கு உதவவும் ,சற்றே கடுப்பேத்தவும் எண்ணி, அவளது மொபைலைக் குடைந்தவாறே ஹாலில் வந்தமர்ந்தாள் . செய்தித்தாளையும் அருகில் வைத்துக்கொண்டு .

அதில் வெற்றியும் கண்டாள். அவன் காதிலிருந்து வந்த புகையில் ஒரு ரயிலே ஓட்டலாம்.

அவள் எதிர்பார்த்தவாறே நொடிக்கு நூறு சந்தேகம் "கடுகிலிருந்து கத்தரிக்காய் வரை " என்று ஒரு புத்தகம் போடுமளவு வந்தது.அரிசி கழுவும்போது , "இதை வேற மூணு தடவை கழுவனுமாம் ,எவளோ டார்ச்சர் டா சாமீ " என்று நொந்து கொண்டே கழுவினான் .

திடீரென்று அதி முக்கியமான சந்தேகம் எழுந்தது அவனுக்கு.

" குழம்புல உப்பு போட்டோமா இல்லையா " என்று குழம்பையே பார்த்துக் குழம்பிய வண்ணம் இருந்தான்.

அப்போது அவள்,

" ஏங்க! பால் பொங்குது " என்றவாறு ஓடி வந்து அடுப்பை அணைத்தாள்.

" என்னதான் செய்ரீங்கனு பார்க்கலாம்னு வந்தேன். ஆனாலும் பக்கத்துலயே நின்னுகிட்டு , பாலைப் பொங்கவிடற திறமைலாம் யாருக்கும் வராதுங்க. பிண்றீங்க போங்க " என்று பல்பு கொடுத்தாள்.

அதன் பின் அவள் அருகில் இருந்து சிறு உதவிகள் செய்தாலும், குழந்தைக்குப் பால், இவர்களுக்குக் காஃபி, காலை டிபன், இரண்டு ஸ்நேக்ஸ் பாக்ஸ், இரண்டு லன்ச் பாக்ஸ்,இரண்டு வாட்டர் பாட்டிலில் தண்ணீர் என்று அனைத்தையும் தயார் செய்வதற்குள் தாறுமாறாய்த் தடுமாறிப் போனான்.

" அம்மா! ஜடை பின்னிவிடுங்க " என்று வந்து நின்றாள் அனன்யா.

" இன்னைக்கு அப்பா செய்வார் " என்று கூறி அவனைப் பார்த்தவாறு சிரித்தாள்.

அவன் பாவமாய் விழி பிதுங்கி நிற்கவே , அவளே பின்னிவிட்டாள்.

" ஏங்க! டைம் ஆயிடுச்சு.அகிலேஷை குளிப்பாட்டி சாப்பிட வச்சிட்டேன்.டிரஸ் பண்ணி விடுங்க "

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.