(Reading time: 9 - 18 minutes)

" அது பக்கத்து வீடுங்க ," என்று கடுப்புடன் கூறினான்.

சரியான சிடுமூஞ்சியா இருப்பான் போல என்று் சலித்துக் கொண்டே வந்தவன் சென்றான்.

மீண்டும் நித்திரை. இம்முறை ,

"மேகம் கருக்குது , மின்னல் சிரிக்குது "

என்று வானம் இடி தாளத்துடன் பாட,அரைகுறையாய்க் காய்ந்த துணிகளை காற்றுடன் போராடி அள்ளிவந்து வீட்டிற்குள் காயப்போட்டு மண்டை காய்ந்து போனான்.

இவ்வாறாய் ராங் நம்பர் அட்டென்ட் செய்து, கேபிள் ஆட்கள் வந்து சரிபார்த்து என்று எல்லாத்தையும் சமாளித்து , இவன் சமைத்த உணவை வேறு சமாளித்து என பொழுது வேகமாய்க் கழிந்தது .அவன் அலுவல் அவனுக்கு மறந்தே போனது !

மாலை மீண்டும் பிள்ளைகளை அழைத்து வந்து,உடை மாற்ற வைத்து ,உண்ண வைத்து ,பால் கொடுத்து , வீட்டுப் பாடம் எழுத வைத்து,அதில் ஏகமாய் பிபி எகிறி,நாலைந்து மொக்கை வாங்கி ஒரு வழியாய் நிமிர்வதற்குள் ஏழு மணி ஆகிவிட்டது . அவளும் வந்துவிட்டாள்.

தாயைக் கண்ட சேயென மாறினான் தலைவன்!!!

" அம்மா, தாயே, நான் ஒத்துக்குறேன் ! நீங்கலாம் கிரேட் தான், என் பொழப்பு எவ்ளவோ மேல். வீட்டு வேலை எதுவுமே கஷ்டம் இல்ல,ஆனா கஷ்டம்.இப்போ புரியுது .ப்ளீஸ் நீ டேக் ஓவர் பண்ணிக்கோ , முடியல, அழுதிருவேன் "

என்று வடிவேல் போல கூறினான்.

அவளும் சிரித்தவாறே கூறினாள்.

" அப்டிலாம் இல்லங்க. இப்போ திடீர்னு நீங்க பார்க்கற வேலை எல்லாம் நான் பார்த்தால் இப்படித்தான் தடுமாறுவேன் .இந்த குடும்பம் சமூகம் எல்லாம்,ஒருத்தருக்கொருத்தர், ஒண்ணை ஒண்ணு சார்ந்ததுதான் . ஒண்ணு இல்லாம இன்னொன்னு இல்ல."

" உங்களோட பங்களிப்போட முக்கியத்துவம் வெளிப்படையா தெரியுது, எங்களுது தெரியறதில்லை .இப்டி புரிய வைக்க வேண்டியதா இருக்கு. நாங்கதான் வேலை செய்றோம்னு நாங்க எப்போவும் நெனைக்கறதில்ல .நாங்களும் வேலை செய்றோம்னு நீங்க எப்போவும் நெனைக்கறதில்லை . இனிமேல் நெனைப்பீங்க "என்று கூறிவிட்டு சமையலறை நோக்கிச் சென்றாள்.

"அன்பான மனைவி, அழகான துணைவி , அமைந்தாலே பேரின்பமே " என்ற வரிகள் டிவியில் ஒலித்தது . எப்போதையும்விட இப்போது இந்தப் பாடல் இன்னும் இதமாகத் தோன்றியது அவனுக்கு.

காதலில் புரிதல் மேலோங்கும்பொழுது எங்கிலும் இன்பமே நிறையும். அங்கும் நிறைந்தது .

நாமும் முடிந்தவரை அனைவரையும் அவர் நிலையிலிருந்தும் எண்ணிப் பார்த்து, புரிதலுடன் வாழ்க்கையைத் தொடர முயல்வோம்....நன்றிகள்......

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.