Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
×

Warning

JUser: :_load: Unable to load user with ID: 6881
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
சிறுகதை - மனிதம் - நர்மதா சுப்ரமணியம் - 5.0 out of 5 based on 1 vote
Pin It

சிறுகதை - மனிதம் - நர்மதா சுப்ரமணியம்

bike

"ரொம்ப நன்றி அண்ணா... நீங்க மட்டும் உதவலனா இன்னிக்கு என்னோட நாள் சோகத்தோடயும் விரக்தியோடயும் முடிஞ்சிருக்கும்.. இந்த நாள் ஒரு கறுப்பு தினமா  வாழ்நாள் முழுசுக்கும் என் மனசுல பதிஞ்சிருக்கும்"

என அந்த நல்ல மனிதரின் கைக் குலுக்கி தன் நன்றி உணர்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டிருந்தான் பிரபா....

இன்று அவன் வாழ்வில் அப்படி என்ன நிகழ்ந்தது.. எதற்காக இந்த நன்றி நவிழ்தல்.. வாங்க பார்ப்போம்....

பிரபாகரன், 21 வயது இளைஞன்... அவ்வயதிற்கேற்ற துடுக்குதனம் நிறைந்தவன்... அதே சமயம் உழைத்து குடும்பத்தை பொறுப்பாய் வழிநடத்தும் நடுதர வர்கத்தவன்.. தான் உபயோகிக்கும் பொருட்களின் மதிப்பை உணர்ந்தவன்...(பின்ன இருக்காத... EMI போட்டு மாசாமாசம் சம்பளத்துல பாதி பணத்தை கட்டுரவனாச்சே.. அதோட மதிப்பு தெரியாம இருக்குமா என்ன??)

இன்று காலை ஈசிஆர் சாலையில் தன் வண்டியான பஜாஜ் டிஸ்கவரில் தன் காதிலுள்ள ஹெட்செட்டில் 

" Maddy maddy oh ho maddy "

என்ற பாட்டை கேட்டுக்கொண்டே

வேகமாய் பறந்து சென்றுக்கொண்டிருந்தான்...

தன் கைப்பேசியில் வந்த திடீர் அழைப்பில், வண்டியின் வேகத்தை குறைத்து.. ஹெட்செட்டிலேயே அந்த அழைப்பையேற்று மிதமான வேகத்தில் பேசிக்கொண்டே வண்டியை ஓட்டிச்சென்றான்...

ஈசிஆர் சாலையின் கடற்கரை ஊதக்காற்றில் ஹெட்செட்டில் பேச்சு தெளிவாய் கேட்காமல் போக... 

நேரடியாய் கைப்பேசியை காதுக்கு கொடுத்து, அதற்கு தன் தோளை ஸ்டாண்ட் ஆக்கி பேசிக்கொண்டே வண்டியை ஓட்டிச்சென்றான் பிரபா...

தீடிரென்று அவன் கையை யாரோ தட்டுவதுபோல் தோன்ற, 

அவன் தோள் சிறிது அசைய,

கையில் வண்டி சிறிது தடுமாற,

கைப்பேசி நழுவ...

"அய்யோ போன் விழுந்திருச்சே"

என பிரபா யோசித்த நேரம்,

நழுவிய கைக்பேசியை லாவகமாய் கைகளில் கேட்ச் செய்து தன் வண்டியை வேகமெடுத்து முன் சென்றான் அந்த பைக்காரனும், அவனின் பின்னே அமர்ந்திருந்த கள்வனும்....

பிரபா கைப்பேசியில் பேசும் போதே நோட்டமிட்டு அவனை பின்தொடர்ந்து வந்த கள்வர்கள், அவன் கைப்பேசியை தன் காதுக்கு கொடுத்த மறுநிமிடம்...அவனே எதிர்பாரா நேரம் கையை தட்டி கைப்பேசியை பறித்து சென்றனர்....

"டேய் டேய் நில்லுங்கடாஆஆஆஆ"

"இப்ப மட்டும் என் கையில கெடச்சீங்க சட்னி தான்டா நீங்க..."

"அய்யோ, போன் போச்சே... ரொம்ப ஆசப்பட்டு இப்ப தான்டா இ.எம்.ஐ போட்டு ஒரு பெரிய போன் வாங்கினேன்.. அது உங்களுக்கு பொறுக்கலையாடா... எனக்கு மட்டும் ஏன் தான் இப்படி நடக்குதோ.... நான்லாம் ஆசப்படவே கூடாதோ??"

என கோபத்தில் கத்த ஆரம்பித்து தன்மீதான கழிவிறக்கத்தில் மனதுக்குள் பொருமி கொண்டே அந்த பைக்காரனை பின் தொடர்ந்து சென்றானவன்....

இதற்கு தான் மக்களே வாகனம் ஓட்டும் போது போன் பேசக்கூடாது என்று சொல்வது... உடைமை போனால் திரும்ப பெறலாம் உயிர் போனால் திரும்ப வருமா??

சிந்தித்து செயலாற்றுங்கள்...

என்ன தான் பிரபா தன் வண்டியை அழுத்தி மிதித்தாலும் எண்பதை தாண்டி செல்வேனா என்றது அவனுடைய செகண்ட் ஹேண்ட் வண்டி.... ஆகையால் அக்கயவர்களை அடைய முடியாதோ என அவன் அவநம்பிக்கை கொண்ட சமயம்....

" தம்பி, நடந்ததலாம் நான் கவனிச்சிட்டே தான் இருந்தேன்... அதான் உங்க பின்னாடி ஃபாலோ பண்ணிட்டு வந்தேன்... உங்க வண்டில போனா அவனுங்கள பிடிக்க முடியாது.. நீங்க வந்து என் வண்டில ஏறுங்க.."

என பிரபா வண்டியின் அருகில் வந்து வண்டியை ஓட்டிய நிலையிலேயே உரைத்தார் ஓர் மனிதர்...

பிரபாவும் தன் வண்டியை அங்கே ஓரமாய் பார்க் செய்து அம்மனிதருடன் மீண்டும் சேசிங்க் செய்தான் அக்கயவர்களை....

இவரின் அதிவிரைவு இரு சக்கர வண்டி படுவேகமாய் பாய்ந்து செல்ல,

அக்கள்வர்களை எட்டிப்பிடிக்கும் அளவு சென்று... பின் ஒரு கட்டத்தில் அந்த பைக்காரனுக்கு இணையாக இவர்களின் வண்டியும் பயணிக்க...

"டேய் , மாட்டிப்போம் போலடா...

  •  Start 
  •  Prev 
  •  1  2 
  •  Next 
  •  End 

Add comment

Comments  
# RE: சிறுகதை - மனிதம் - நர்மதா சுப்ரமணியம்Thenmozhi 2018-04-05 19:21
interesting story ji. Praba inimel drive seiyum pothu phone pesa maatarnu nambuvom :-)
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - மனிதம் - நர்மதா சுப்ரமணியம்Narmadha Subramaniam 2018-04-06 06:38
Aama sis. .. nambuvom... Thank you sis
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - மனிதம் - நர்மதா சுப்ரமணியம்Shanthi S 2018-04-05 08:33
nalla kathai Narmatha
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - மனிதம் - நர்மதா சுப்ரமணியம்Narmadha Subramaniam 2018-04-06 06:37
Thank you sis :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - மனிதம் - நர்மதா சுப்ரமணியம்madhumathi9 2018-04-04 17:42
Super story.vaaganam ottum pothu kaitholaipesiyil pesaatheergal intha kaalathirkku mukkiya karuthu & thagaval. Vaaltugal. :clap:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - மனிதம் - நர்மதா சுப்ரமணியம்Narmadha Subramaniam 2018-04-04 21:15
Thank you so much sis..
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - மனிதம் - நர்மதா சுப்ரமணியம்mahinagaraj 2018-04-04 14:03
nice.... :clap:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - மனிதம் - நர்மதா சுப்ரமணியம்Narmadha Subramaniam 2018-04-04 14:18
Thank you :thnkx:
Reply | Reply with quote | Quote

Coming Soon...

Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

Come join the FUN!

Write @ Chillzee
Go to top