(Reading time: 5 - 10 minutes)

போனை தூக்கி வீசி எறிடா" என

பின் அமர்ந்திருந்த கயவனுக்கு ஆர்டர் போட்டான் அப்பைக்கை ஓட்டி செல்பவன்...

அவன் கட்டளையை ஏற்று அந்த கள்வனும் கைப்பேசியை புதருக்குள் தூக்கி எறிந்தான்...

கைப்பேசியா?? கள்வர்களா?? என்று வரும் போது... இவர்கள் கைப்பேசியில் தானே கவனம் செலுத்துவார்கள்... அந்த சமயம் பார்த்து இவர்கள் தப்பி சென்று விடலாம் என திட்டமிட்டே புதருக்குள் கைப்பேசியை எறிந்தனர்... அதில் வெற்றியும் கண்டனர்...

பிரபா மற்றும் அந்த மனிதர் புதருக்கள் கைப்பேசியை தேடச்சென்றனர்....

கைப்பேசியின் முகப்பு கண்ணாடி உடைந்த நிலையில் ,முழு இயக்கத்துடன் உயிர்ப்புடன் சிக்கியது கைப்பேசி பிரபாவின் கையில்....

"ரொம்ப நன்றி அண்ணா... நீங்க மட்டும் உதவலனா இன்னிக்கு என்னோட நாள் சோகத்தோடயும் விரக்தியோடயும் முடிஞ்சிருக்கும்.. இந்த நாள் ஒரு கறுப்பு தினமா  வாழ்நாள் முழுசுக்கும் என் மனசுல பதிஞ்சிருக்கும்"

என அந்த நல்ல மனிதரின் கைக் குலுக்கி தன் நன்றி உணர்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டிருந்தான் பிரபா....

" இந்த வண்டியை விற்க போய்ட்டு இருந்தேன் தம்பி.. அப்ப தான் உன் ஃபோன அந்த கேடிப் பசங்க அடிச்சிட்டு போறதை பார்த்தேன்... இந்த வண்டிய விக்கிறதுக்கு முன்னாடி உனக்கு ஹெல்ப் பண்ணணும் இருந்திருக்கு பாரேன்" என வியப்பின் மிகுதியில் உரைத்துக் கொண்டிருந்தார் அவர்....

அந்த பைக்கை பாசமாய் தடவிப்பார்த்தான் பிரபா...

" காசு இருந்தா நானே இந்த பைக்கை வாங்கிடுவேன் அண்ணா. . என் ஆசை போனை மீட்டு தந்த பைக்காச்சே... ம்ப்ச் ஆனா இப்போ வாங்குற நிலமைல இல்லணா"

தன் இயல்நிலையை சலிப்பாய் கூறி முடித்தான்....

"கேட்க மறந்துட்டேன் பாருங்கண்ணா... உங்க பேர் என்னணா"

"மாணிக்கம்" என்றாவர்...

கேட்டதும் சிறு கீற்று புன்முறுவல் பிரபாவின் முகத்தில்...

நிஜமா நீங்க மனதருள் மாணிக்கம் தான்ணா என்று விழி மின்ன உரைத்த நேரம் அடைந்திருந்தனர் பிரபா தன் பைக்கை பார்க் செய்திருந்த இடத்தை...

" இவர போல நல்லவங்க நிறைய பேர் இருக்கிறனால தான் நாட்டுல இப்பலாம் பேய்மழை கொட்டுது போல" என்று எண்ணிக்கொண்டே அவரிடமிருந்து விடைப்பெற்று சென்றான் பிரபா....

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.