(Reading time: 3 - 6 minutes)

சிறுகதை - புதுவரவு – அனுசுயா

newBorn

காலை 6 மணி

"அத்தான்.. போன் ரிங் ஆகுது எடுங்க.."

ம்ம்..எடுக்குறேன்..

ஹலோ...

........

சொல்லுங்க சார்..

........

இதோ நான் உடனே கிளம்பி வரேன்..

அத்தான்...காபி?

"வேணாம் பாரதி..நான் அவசரமா போகணும்..நீ அபிமன்யுவை பார்த்துக்கோ..பை"என்றான் அர்ஜுன்.

ரசு மருத்துவமனையில்...

"ஹலோ டாக்டர்...குழந்தை எப்படி இருக்கு?"

"ஹலோ டிஎஸ்பி சார்..குழந்தைக்கு பரவாயில்லை.. நல்ல வேளை உடனே குழந்தையை கொண்டு வந்ததால காப்பாத்த முடிஞ்சுது.. பட் உடம்புல நிறைய காயங்கள் இருக்கு..2 டேஸ் அப்சர்வெசன்ல வைக்கனும்.."

"ஓ.கே டாக்டர்.. நான் பார்க்கலாமா?"

"Sure..நர்ஸ்.. குழந்தையை காமிங்க.."

Thank you doctor..

காலை 10 மணி

"என்ன அத்தான்.. சீக்கிரம் வந்துருவீங்கன்னு நினைச்சேன்.இவ்வளவு லேட் ஆயிடுச்சு??"என்றபடி கதவை திறந்தாள் பாரதி..

"ஆமாம் மா.. இன்னைக்கு பிறந்த ஆண் குழந்தையை யாரோ குப்பை தொட்டியில் போட்டுட்டு போயிட்டாங்க..தெரு நாய்ங்க கடிக்க ஆரம்பிச்சுட்டு...நல்ல வேளை பக்கத்துல உள்ளவங்க குழந்தையை காப்பாத்தி உடனே போலீஸ் க்கு இன்பார்ம் பண்ணாங்க."என்றான் அர்ஜுன்..

"Thank God... குழந்தை இப்போ எப்படி இருக்கு?நீங்க பார்த்தீங்களா??"என்றாள் பாரதி.    

 " பார்த்தேன்..இப்ப பரவாயில்லை.2 டேஸ் அப்சர்வெசன்ல வைக்கனும்னு சொல்றாங்க.."என்றான் அர்ஜுன்..

கோபத்தின் உச்சியில் இருந்த பாரதி பேச ஆரம்பித்தாள்

"ஐயோ பாவம்.. இப்படி குழந்தையை குப்பை தொட்டியில் போடுறவங்கள சும்மாவே விடக்கூடாது.. குழந்தை இல்லாம எத்தனை பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை எடுத்துக்ராங்க? கோயில்,குளம்,பூஜைன்னு போறாங்க?அருமை தெரிஞ்சவங்களுக்கு கடவுள் குழந்தையை கொடுக்குறது இல்லை.. குப்பை தொட்டியில் குழந்தையை போட்டுட்டு போனவுங்கள கண்டுபிடிச்சு குழந்தையை கொடுப்பிங்களா?"...

"வேணாம்ணு தான் குழந்தையை குப்பை யில்ல போட்டுட்டு போய் இருக்காங்க..திருப்பி கொடுத்தாலும் நாளைக்கு கிணத்துல போட்டு கொன்னுடுவாங்க.. அதைவிட அரசோட காப்பகத்தில் வளரலாம்.."என்றான் பாரதி..

"அதுவும் சரிதான் அத்தான் ....நாம அந்த குழந்தையை தத்து எடுத்து வளர்க்கலாமா??"என்று கேட்டாள் பாரதி..

ஒரு நொடி ஆச்சரியமாக மனைவி யை பார்த்து "நீ நல்லா யோசிச்சு தான் பேசுறீயா?"என்றான்

"இதுல யோசிக்க என்ன இருக்கு?"என்றாள் பாரதி..

"இல்ல.. நமக்கு ஏற்கனவே குழந்தை இருக்கு.."என்றபடி அவளின் மீது பார்வையை செலுத்தினான்..

அவளோ சிறிதும் அசராமல்"இருந்தா என்ன?இன்னொரு குழந்தை  வேணும்னு நினைக்க மாட்டோமா? குழந்தை இல்லாத தம்பதிகள் தான் குழந்தையை தத்து எடுக்கணுமா?

கண் முன்னாடி ஒரு குழந்தை வாழ்க்கை அழியக் கூடாது.இன்னொரு குழந்தை யை பொருளாதார ரீதியாகவும் நம்மால நல்ல வளர்க்க முடியும்.குழந்தையை தத்து எடுத்து வளர்க்க நாமளும் ஆசிரமத்தில் வளரனும்னு அவசியம் இல்லை.. யாரோ செய்த தப்புக்கு இந்த குழந்தை க்கு  தண்டனை கொடுக்க கூடாது..ஆதரவற்ற குழந்தைகள் க்கு உதவி செய்றோம்னு அங்கு போய்ட்டு அந்த குழந்தைங்களை நம்ம அப்பா அம்மா இருந்தா நம்ம பிறந்த நாளும் இப்படி தான் கொண்டாடி இருப்பாங்களானு ஏங்க வைக்க கூடாது."என்றாள்.

மனைவியின் எண்ணத்தை மனதில் பாரட்டியவாறு 

"நீ சொல்றதும் சரிதான்...எனக்கும் அந்த குழந்தையை பார்த்ததும் தோணிச்சு..நாம அந்த குழந்தையை தத்து எடுக்கலாமா னு? ஆனால் உங்கிட்ட பேசிட்டு முடிவு பண்ணலாம்னு நினைச்சேன்.."என்றான் அர்ஜுன்..

"அப்புறம் என்ன யோசனை? குழந்தை யை வீட்டுக்கு கூட்டிட்டு வர்றதுக்கு என்ன செய்யணுமோ அதை செய்ங்க.."என்றாள் பாரதி.

அர்ஜுனோ சிரித்து கொண்டே"உத்தரவு மகாராணி"என்றான்.

இருவரும் தங்களின் புதிய வரவை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்..

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.