Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (5 Votes)
சிறுகதை - அம்மா கணக்கு – சசிரேகா - 5.0 out of 5 based on 5 votes
Pin It

சிறுகதை - அம்மா கணக்கு – சசிரேகா

amma

திருக்குறள் சொல்லும் கதை

குறள் 51:  
மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை. 

விளக்கம்
இல்வாழ்க்கைக்கு ஏற்ற நற்பண்பு உடையவளாகித் தன்கணவனுடைய பொருள் வளத்துக்குத் தக்க வாழ்க்கை நடத்துகிறவளே வாழ்க்கைத்துணை ஆவாள்.

காலை மணி 9

சென்னை

”காயு என்ன செய்ற, இன்னுமா டிபன் செய்ற, சீக்கிரமா வா ஆபிஸ்க்கு போகனும் லேட்டாகுது” என்றான் வருண்

”இதோ வரேன் எனக்கென்ன 10 கையா இருக்கு, நானே எல்லா வேலையும் செய்யனும்னா லேட்டுதான் ஆகும் பொறுமையா இருங்க வருண்” என்றாள் வருணின் அன்பு மனைவி காயத்ரி

”இருக்கறது நீயும் நானும் மட்டும்தான், காலையில டீ, அப்புறம் டிபன் இது செய்றதுக்கு நீ எவ்ளோ நேரம் எடுத்துக்குவ”

“ஆஹா அவ்ளோதான் உங்க கண்ணுக்கு தெரியுதா, துணி தோய்க்கனும், இஸ்திரி போடனும், கடைக்கு போய் காய்கறி வாங்கனும், பால் பாக்கெட்லிருந்து பேப்பர் வரைக்கும் மளிகை சாமான்கூட நான்தான் வாங்கனும் போதாக்குறைக்கு ஈபி பில் கட்டனும், பேங்குக்கு போகனும் இது கூட நாம கடன் வாங்கினதுக்கு வட்டி வேற கட்டிட்டு வரனும் இவ்ளோ இருக்கு ஒத்தையாளா நானே செய்றேன் அதை நீங்க மறந்துடாதீங்க”

“இதுக்கு ஆளை போட்டுக்கலாமே சமையல் செய்ய சமையல்காரி, வேலைக்காரின்னு போட்டுக்க எதுக்கு நீயே கஷ்டப்படனும்”

“ஓஹோ என்னவோ நீங்க மாசாமாசம் லட்சக்கணக்குல பணம் சம்பாதிக்கற மாதிரி பேசறீங்க, வாங்கறது மாசம் லட்சம் ரூபாய்தான் சம்பளம் வாங்கறீங்க, சென்னை மாதிரியான சிட்டியில வீடு வாடகை எவ்ளோ தெரியும்ல வாடகை, ஈபி பில், பால் பில், மளிகை, காய்கறி, பேங்க் கடன் அப்புறம் இதர செலவுகள்ன்னு நீங்க தர்ற லட்ச ரூபாயை மாசம் முழுக்க இழுத்து பிடிக்க முடியலை. மளிகை கடையில வேற பாக்கி அடுத்த முறை போனாக்கா காசு கேட்பான், எங்க போய் கொண்டு வர்றது நம்ம வீட்டு கொல்லையில என்ன பண மரமா காயுது பிடுங்கி கொடுக்க” என திட்டிக் கொண்டே டிபனுடன் டைனிங் டேபிளுக்கு வந்து வருணுக்கு ஒரு பிளேட்டும் தனக்கு ஒரு பிளேட்டும் வைத்துக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தாள்.

மெதுவாக சாப்பிட்டுக் கொண்டிருந்த வருணிடம்

”ஆமாம் வீடு விக்கறது பத்தி பேச சொன்னேனே என்னாச்சி புரோக்கர் என்ன சொல்றான்” என காயத்திரி கேட்க அதற்கு வருண் அவளிடம்

”காயு அது உன் அம்மா வீடு, பழைய வீடுன்னாலும் 5 தலைமுறையை பார்த்திருக்கு,  ஏதோ உங்கம்மா உன் பேர்ல அந்த வீட்டை எழுதிக் கொடுத்திருக்காங்க நாம ஏன் அதை விக்கனும் சொல்லு”

வருண் சொன்னதும் அவனை ஏற இறங்கப் பார்த்துவிட்டு

“விக்காம என்ன செய்யனும்ங்கறீங்க”

“இல்லைம்மா மெயின் ஏரியாவில இருக்குது அந்த வீடு வித்தா நாப்பது லட்சம் போகுமா அதுக்கு பதிலா வீட்டை கட்டிட்டா என்ன”

”இங்க மாச செலவுக்கே பணம் பத்தலை, இதுல வீட்டை கட்டனுமா அதெல்லாம் வேணாம், நாளைக்கு சண்டே அந்த புரோக்கர் கிட்ட நேர்ல போய் பேசி வீட்டை விக்கற வழியை பாருங்க”

“ஏய் கொஞ்சம் யோசி காயு, கல்யாணத்தப்ப உங்கம்மா அந்த வீட்டு பத்திரத்தை கொடுக்கறப்ப எவ்ளோ சென்டிமென்ட்டா பேசினாங்க தெரியுமா”

“ஆமாம் ஆனா இந்த காலத்தில சென்ட்டிமென்ட் வெச்சிக்கிட்டா பொழைக்க முடியாது வருண், நீங்க சொல்ற அம்மா செண்ட்டிமென்ட் என்ன செய்யும் பால் பில், கரண்ட் பில், வாடகை பணம் கட்டுமா சொல்லுங்க அதுக்கு பதிலா அந்த வீட்டை வித்துட்டா வர்ற பணத்தில பேங்க் கடனை அடைச்சிட்டு மிச்ச பணத்தை பேங்க்ல போட்டா வட்டியாவது கிடைக்கும்”

“இருக்கலாம் ஆனா நமக்குன்னு சொந்தமா ஒரு வீடு இருந்தா நல்லாயிருக்குமே, இப்ப இருக்கற கஷ்டத்தை வைச்சி நீ விக்கனும்கற ஆனா 10 வருஷம் கழிச்சி கூட நாப்பது லட்சத்துக்கு அவ்ளோ பெரிய வீடு நமக்கு கிடைக்காதும்மா”

“வருண் ப்ளீஸ் எனக்கே சென்ட்டிமென்ட் இல்லை, நீங்க ஏன் இப்படி டென்ஷன் பண்றீங்க டைம் ஆச்சி ஆபிசுக்கு கிளம்புங்க சீக்கிரம்”

“இல்லை காயு ஒரு முறை உங்கம்மாவை நினைச்சி பாரு”

“வருண் ப்ளீஸ் உங்களை விட்டா வீட்டை விக்க விட மாட்டீங்க போல இருக்கே ,ஓகே இனி உங்களை நம்பறது தப்பு நானே இன்னிக்கே புரோக்கரை பார்க்கறேன், நீங்க இப்ப கிளம்புங்க ப்ளீஸ்” என சொல்லிவிட்டு அடுத்தடுத்த வேலைகளை செய்ய ஆரம்பித்தாள் காயத்ரி.

காயத்ரியின் பிடிவாதத்திற்கு முன் தன் பேச்சு எடுபடவில்லையே என்ற வருத்தத்தில் வேகமாக ரெடியாகி கம்பெனிக்குச் சென்றான்.

 •  Start 
 •  Prev 
 •  1  2  3  4  5  6  7 
 •  Next 
 •  End 

About the Author

Sasirekha

Sasirekha

Latest Books published in Chillzee KiMo

 • AndrilAndril
 • I MyselfI Myself
 • Nin thiruvadi saranamNin thiruvadi saranam
 • Pinai vendum panmaaya kalvanPinai vendum panmaaya kalvan
 • Tholaivil Ni Ninaivil NaanTholaivil Ni Ninaivil Naan
 • Thedum Kan Paarvai ThavikkaThedum Kan Paarvai Thavikka
 • Un nesam en suvasamUn nesam en suvasam
 • Unnai kan thedutheUnnai kan theduthe

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: சிறுகதை - அம்மா கணக்கு – சசிரேகாKavitha Selvarajan 2018-05-05 15:24
Really Superb..chikkanamna ennane theriyama pochu ipo irukavangaluku..

Nan padichathulaye romba pidicha story..Hats off Sasi.....
Reply | Reply with quote | Quote
+1 # RE: சிறுகதை - அம்மா கணக்கு – சசிரேகாmadhumathi9 2018-04-19 14:19
:clap: (y) super story. :hatsoff: ippo nadakkira kaalakattathirkku avasiyamaana poruntha koodiya kathai. :thnkx: 4 this story.ennaiyu yosikka vaitha kathai.naan ippadi irukkirena ena ennavaitha kathai. :thnkx: :thnkx: alot. :clap: :GL: :clap:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - அம்மா கணக்கு – சசிரேகாsasi 2018-04-19 23:11
Quoting madhumathi9:
:clap: (y) super story. :hatsoff: ippo nadakkira kaalakattathirkku avasiyamaana poruntha koodiya kathai. :thnkx: 4 this story.ennaiyu yosikka vaitha kathai.naan ippadi irukkirena ena ennavaitha kathai. :thnkx: :thnkx: alot. :clap: :GL: :clap:

:thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: சிறுகதை - அம்மா கணக்கு – சசிரேகாvijayalakshmi 2018-04-19 10:37
ஹீரோ சார் எடுத்த முடிவு நல்ல முடிவு :hatsoff: தன் மனைவிக்கு அழகா விளக்கம் சொன்ன விதம் அருமை :clap: வருண் நல்ல மாப்பிள்ளை :hatsoff: nice story :GL:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - அம்மா கணக்கு – சசிரேகாsasi 2018-04-19 10:38
Quoting vijayalakshmi:
ஹீரோ சார் எடுத்த முடிவு நல்ல முடிவு :hatsoff: தன் மனைவிக்கு அழகா விளக்கம் சொன்ன விதம் அருமை :clap: வருண் நல்ல மாப்பிள்ளை :hatsoff: nice story :GL:

:thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: சிறுகதை - அம்மா கணக்கு – சசிரேகாராஜேந்திரன் 2018-04-19 10:35
:cool: திருக்குறளை மையமா வைச்சி எழுதின கதையா இல்லை கதையை எழுதிட்டு அதுக்கேத்த குறளை வைச்சீங்களா மேடம். எதுவோ ஒண்ணு :Q: ஆனா குறளும் கதையும் ரெண்டுமே நல்லாயிருக்கு :clap:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - அம்மா கணக்கு – சசிரேகாsasi 2018-04-19 10:39
Quoting ராஜேந்திரன்:
:cool: திருக்குறளை மையமா வைச்சி எழுதின கதையா இல்லை கதையை எழுதிட்டு அதுக்கேத்த குறளை வைச்சீங்களா மேடம். எதுவோ ஒண்ணு :Q: ஆனா குறளும் கதையும் ரெண்டுமே நல்லாயிருக்கு :clap:

நன்றி
Reply | Reply with quote | Quote
+1 # RE: சிறுகதை - அம்மா கணக்கு – சசிரேகாராணி 2018-04-19 10:30
:clap: அம்மா அவ்ளோ பொறுப்பா குடும்பத்தை நடத்தியிருக்காங்க அதைப்பார்த்து வளர்ந்த பொண்ணு காயத்ரி ஏன் இப்படி செலவாளியா இருந்தா 3:) nice story :hatsoff:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - அம்மா கணக்கு – சசிரேகாsasi 2018-04-19 10:40
Quoting ராணி:
:clap: அம்மா அவ்ளோ பொறுப்பா குடும்பத்தை நடத்தியிருக்காங்க அதைப்பார்த்து வளர்ந்த பொண்ணு காயத்ரி ஏன் இப்படி செலவாளியா இருந்தா 3:) nice story :hatsoff:

:clap:
Reply | Reply with quote | Quote
+1 # RE: சிறுகதை - அம்மா கணக்கு – சசிரேகாSubhasree 2018-04-18 23:23
Story romba Nalla irukku Sasi sis.
Good message .. keep writing.
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - அம்மா கணக்கு – சசிரேகாsasi 2018-04-19 10:41
Quoting Subhasree:
Story romba Nalla irukku Sasi sis.
Good message .. keep writing.

நன்றி :hatsoff:
Reply | Reply with quote | Quote
Share your novel

Come join the FUN!

Write @ Chillzee
Go to top