(Reading time: 4 - 8 minutes)

சிறுகதை - கார் – அனுசுயா

Car-Sales

"சில பொருட்கள் முதல் முறையாக வாங்கும் போது நம் குடும்பத்தில் நடக்கும் நிகழ்ச்சி தான் இந்த கதை...கதையா ஏத்துக்க முடியுமானு தெரியவில்லை.. முடியாதுனா சாரி..."

ஆபிஸ்ல கார் லோன் லிமிட் அதிகமாகியுள்ளது ..நாம  கார் ஒன்னு வாங்கலாமா?

இருக்றது இரண்டு பேர்..இதுக்கு ஒரு கார் தேவையா அத்தான்? கொஞ்ச நாள் ஆகட்டும் அத்தான்.. நமக்கு பாப்பா பிறக்கட்டும் அப்புறம் பார்க்கலாம்..

இல்ல.. டிரைவர் சீட்டு பக்கத்து சீட்டுல உன்னை உக்கார வெச்சிட்டு அப்படியே ஏ.ஆர்.ரஹ்மான் சாங்ஸ் போட்டுட்டு அப்படியே கார்ல ஒரு லாங் டிரைவ் போனால் எப்படி இருக்கும்...நினைச்சு பாரேன் செமையா இருக்கும்ல..

நல்லாத்தான் இருக்கும்..இஎம்ஐ னு ஒன்னு வருமே..அதை யார் கேட்டுறது? அந்த பணத்தை நகைச்சீட்டுல போட்டா நான் ஏதாவது நகையாவது வாங்குவேன்..

அடியே..  போன வாரம் தான ஒரு ஜூவல்லரி ஷாப்பிங் முடிச்ச.. அதுக்குள்ள நெக்ஸ்ட்டா?? பட்ஜெட் தாங்காதுமா...தங்கத்துல நிறைய பணம்இன்வெஸ்ட் பண்ணாதிங்கன்னு சொல்றாங்கல்ல?அந்த மாதிரி நல்ல விஷயம் எல்லாம் உன் காதுல விழாதே.. கொஞ்சமாவது நியூஸ் பேப்பர் பார்க்கனும்..அதை விட்டுட்டு நல்ல சீரியலா பார்த்து யார் நகை.சேலை நல்லா இருக்கு ன்னு ஆராய்ச்சி பண்ணி ஏன் பர்ஸ காலி பண்ணுறது.... எல்லாம் என் நேரம் ஒரு கார் வாங்க முடியல..நீ ஒரு மினி ஜுவல்லரி ஷாப்ப வீட்டில ஒபன் பண்ணிடுவ போல இருக்கு?

ரொம்ப பேசாதீங்க... நான் வாங்குன நகையை 4 வருஷம் கழிச்சு விற்றால் நீங்க வாங்குன ரூபாயில் இருந்து கொஞ்சம் முன்ன பின்ன இருக்கும்.. ஆனா உங்க கார் அவ்வளவு ரெட் வருமா?

பக்கி..பக்கி எப்படி பேசுது பாரு..என்னை இவ இப்போதைக்கு கார் வாங்க விட மாட்டா..

ரண்டு வருடங்கள் கழித்து...

குட்டி செல்லம்..அப்பா இன்னைக்கு எங்கே போன தெரியுமா??நம்ம வீட்டுக்கு கார் பார்க்க போனேன்..

உங்களுக்கு எந்த கலர் கார் வேணும்.?

ஆரம்பிச்சிட்டிங்களா?இப்ப எதுக்கு கார்?

யேய் நீதானடி. அன்னைக்கு பாப்பா பிறந்ததுக்கு அப்புறம் கார் வாங்கலாம்னு சொன்ன?இப்ப இப்படி பேசுற?

ஆமா சொன்னேன்.. இப்ப குழந்தை பிறந்தாச்சு... குழந்தைக்கு  வாழ்க்கைல ஏதாவது சேர்த்து வச்சிட்டு அப்புறம் கார் வாங்கனு கொஞ்சம் பொறுப்பா யோசிங்க..அடுத்து ஒரு வீடு வாங்கிட்டு அப்புறம் கார் வாங்கலாம்ல?

அன்னைக்கு நகை.. இன்னைக்கு வீடு? நல்ல டேவலப் ஆயிருக்க.. வாழ்த்துக்கள்..

ஹாஹா..கோபப்படாம முதல்ல வீட்டை பாருங்க. அப்புறம் கார் வாங்கலாம்..சரியா?

செய்றேன்....வேற வழி...

ரு வருஷமா நானும் வீடு தேடுறேன். .. ஒன்னும் அமையல... பேசாம கார் வாங்கிட்டு வீடு வாங்கலாம்னு சொன்னா கேக்கிறியா?உங்களுக்கு தான கார் வாங்குறேன்??இவ்வளவு நாள் யோசிச்சது போதும்..என் பிரெண்ட் எல்லாம் கார் வாங்குறாங்க..நம்மளும் கார் வாங்கலாமே செல்லம் பிளீஸ்...

(3 வருஷங்களா வாங்க விட வில்லை... இன்னும் நோ சொல்ல கூடாது...)சரி.. கார் வாங்குறதுக்கு நம்ம பட்ஜெட் என்ன?

(கார் வாங்கலாம்னு வாய்ல இருந்து வருதா பாரு)ஒரு 9 லட்சம் கிட்ட பார்க்கலாம். 

என்னது??? கிராமத்தில இந்த அமௌண்ட்க்கு ஒரு வீடு கட்டலாம். ..

அப்படியானா பட்ஜெட் என்ன ன்னு நீயே சொல்லு?

3 லட்சம் ..

 second hand கார் தான் கிடைக்கும்.பரவாயில்லையா??

சூப்பர்.. அதுவே பார்க்கலாம்..

இல்லம்மா.. அந்த கார் அதிகமா ரிப்பேர் ஆகி நிறைய செலவு வைக்கும் ... அதுவும் இல்லாமல் கார் வாங்கும் போது safety features லாம் அதிகமா இருக்குதான்னு பார்த்து வாங்கனும்..அப்படி இருந்தால் தான் விபத்து நேரங்களில் நம்மளுக்கு பாதுகாப்பு..

என்ன நீங்க முதல் முறையாக கார் வாங்கும் போது விபத்து அதுஇதுனு அபசகுணமா பேசுறீங்க???

இதுல என்ன இருக்கு? எனக்கு தெரிஞ்சத நான் உனக்கு சொல்றேன்..எந்த விஷயத்திலும் நல்லதையும் கெட்டதையும் தெரிஞ்சு இருக்கணும்.காரோ வீடோ வாங்கும் போது இன்சூரன்ஸ் போடணும்.. அது தான் பல பிரச்சினைல இருந்து நம்மல காப்பாற்றி விடும்..அதை விட்டுட்டு சென்டிமென்ட் பார்க்க கூடாது..புரியுதா??

புரியுது அத்தான்..

ஊர்ல உள்ள எல்லா ஷோரூமும் அலைஞ்சு 4,5 பிடிச்ச கார் செலக்ட் பண்ணி கார் வச்சிருக்க நண்பன் உயிரையும் எடுத்து ஒரு கார் செலக்ட் பண்ணியாச்சு..

அடுத்து அப்பா, அம்மா ட்ட கார் வாங்க போறேன் னு சொன்னதும் ஆரம்பித்தார் அப்பா.."உனக்கு எதுக்கு இப்ப கார்? ஒரு வீடு வாங்கிட்டு அப்புறம் வாங்குனா சரி... ஆடம்பரமாக இருக்க கூடாது என்றார்

ஐயோ.. மறுபடியும் அதே கேள்வியா? என்னால முடியல..

"கார் பிறகு பார்க்கலாம்..வீட்டை வாங்கு முதலில் என்றார்.. சரி என்று தலையை ஆட்டினேன்"

தினமும் ஆபிஸ் போகும் போது ரோட்ல நான் செலக்ட் பண்ண கார் கண் முன்னாடி வந்து நிக்குது...

இரண்டு மாதத்தில் எல்லாரையும் சமாளித்து இன்னைக்கு கார் க்கு பூஜை போட்டு பொண்டாட்டியை பக்கத்துல உக்கார வெச்சி ஏஆர் ரஹ்மான் பாட்டு கேக்கறதுக்குள்ள....நான் பட்ட பாடு எனக்கு தான் தெரியும்..

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.