(Reading time: 2 - 4 minutes)

சிறுகதை - அழகி – சுமதி K

azhagi

2002 ஜனவரி .

தியேட்டர் வாசலில் ஒரு நண்பர்கள் கூட்டம் நின்று கொண்டிருந்தார்கள். அப்பொழுதான் "அழகி" படம் முடிந்து வெளியே வந்திருந்தார்கள்.

அவர்களின் உரையாடல் கீழே.

பிரேம் : என்னடா இது காதலிச்சுட்டு வேற பொண்ணை கல்யாணம் பண்றதெல்லாம் ரொம்ப கொடுமை டா.

விமல் : டேய் அதைவிட அந்த கல்யாணத்துக்கு அப்புறமா பழைய காதலியை பார்க்கிறது ரொம்ப ரொம்ப கொடுமை டா ..

அரசி : பாவம்பா அதுக்காக எக்ஸ்-லவ்வர் ரொம்ப பீல் பண்றமாதிரி காமிச்சது மனசுக்கு கஷ்ட்டமா இருக்குப்பா ..

திவ்யா : அதெப்படி லவ் பண்ணின பொண்ணை விட்டு விட்டு இன்னொரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்கறது ... சரியே இல்ல ... எனக்கு அதுவே பிடிக்கல ..

தேவி : அடி போடி எனக்கு தேவயானி கேரக்டர் நெனச்சாதான் ரொம்ப கவலையா இருக்கு.... பாவம்ல... எப்படியும் நான்லாம் arranged marriage தான் ... அதனால எனக்கு அந்த கேரக்டர் அ நெனச்சாதான் ரொம்ப பாவமா இருக்கு ...

எப்படி இவ்வளவு மாறுபட்ட எண்ணங்கள் ஒரு நண்பர்கள் கூட்டத்தில் ..

இப்போ அவங்களைப் பற்றி சொல்லுகிறேன் கேளுங்கள் ....

பிரேம் - அழகான காதல் கதை இவருடையது... வீட்டில் இப்பொழுதான் சொல்லி அவர்களின் முடிவுக்கு காத்திருப்பவன் ..

விமல் - காதலை இன்னும் மனதுக்குள் வைத்துக்கொண்டு இன்னும் காதலியிடம் சொல்லாமல் இருப்பவன்...

அரசி - காதல் என்றாலே இவளுக்கு பிடிக்காது.... ஆனால்  பாருங்கள் ..அவளுடைய மிகச்சிறந்த தோழி காதலில் விழுந்துவிட்டாள் ..  so அவளுடைய காதல் ஜெயித்து அவளும் சந்தோசமாக இருக்கவேண்டுமே என்று கவலைப்பட்டு கொண்டிருப்பவள் ...

திவ்யா - பிரேமின் காதலி ... எப்படியும் அவர்களின் காதலை பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று அனுதினமும் வேண்டிக்கொண்டிருப்பவள் ..

தேவி - நண்பர்களின்  காதலுக்கு உற்ற துணையாக இருப்பவள் .. ஊருக்குத்தான் உபதேசம் ... ஆனால் அவளுக்கு அவளுடைய பெற்றோர் பார்த்து வைக்கும் பையனைத்தான் கல்யாணம்  செய்ய வேண்டும் என்ற முடிவில் இருப்பவள் ..

இப்பொழுது திரும்ப அவர்களின் உரையாடலை படியுங்கள் ... அவர்களின் எண்ணங்கள் புரியும்....

ஒரு இரண்டரை மணி நேர படம் ஒரு நண்பர்கள் கூட்டத்தை எத்தனை விதமாக யோசிக்க வைத்துள்ளது பாருங்கள்... மனித மனது அப்படித்தான்.  அப்பொழுது நாம் இருக்கும் சூழ்நிலைக்கேற்ற மாதிரி நம் எண்ணங்களும் அபிப்ராயங்களும் மாறுகிறது ... மாறிக்கொண்டே இருக்கிறது ...  

இதே படத்தை அவர்கள் இன்னும் ஐந்து வருடங்கள் கழித்து பார்த்தால் இதே போல் எண்ணுவார்களா  என்ன ;-)

ஹாஹா ...   

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.