(Reading time: 11 - 22 minutes)

சிறுகதை - பாட்டும் நானே..... பரதமும் நானே...... - ஜெய்

bharatanatyam

Friends, லாஜிக் எல்லாம் பார்க்காம சும்மா ஜாலியா படிக்க ஒரு கதை.... இது என்ன கதைன்னு காறித்துப்பாம பெரிய மனசு பண்ணி படிச்சுட்டு கமெண்ட்ஸ் சொல்லுங்க... dedicating to Adharvjo... இதை படிச்சுட்டு இனி கதை கேப்ப அப்படின்னு முட்டிக்காதீங்க Adharvjo

ங் தங்கென்று நடந்து வந்து, ஸோஃபாவில் அமர்ந்து புஸ் புஸ் என்று கோவத்தில் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க அமர்ந்திருந்த மனைவியையே பீதியுடன் பார்த்தான் ஷங்கர்.... அருகில் அவர்களின் செல்ல மகள் அஸ்வதி அவனைவிட பீதியுடன் அவள் அன்னையைப் பார்த்தாள்... மது இந்த நிலைமையில் வீட்டிற்கு வந்தால் அது வர்தா புயல் வருவதற்கு அறிகுறி...

“அப்பா.... அம்மா இப்போ பார்க்க லாஸ்ட் நைட் நாம பார்த்த படத்துல வர்ற காளி மாதிரியே இல்லை..... நாக்கு மட்டும்தான் வெளில தொங்கலை.... அண்ட் கைல வெப்பன் இல்லை....”

“என்ன அங்க ரெண்டு பேரும் குசுகுசுன்னு பேசிக்கறீங்க....”

“இல்லடா மது நீ நம்ம வீட்டு காலண்டர்ல இருக்கற மகாலக்ஷ்மி மாதிரியே இருக்கியாம்... அம்மா மட்டும் எப்படி இப்படி அழகா இருக்காங்கன்னு சின்னு கேக்கறாடா....”, மஹாலக்ஷ்மி இல்லைப்பா காளி, என்று சொல்ல வந்த தன் மகளை எதுவும் பேச வேண்டாம் என்று கண்களாலேயே கெஞ்சினான் ஷங்கர்.... மதுவை தன் மகள் காளி ஸ்வரூபம் என்று சொன்னாள் என்று தெரிந்து தாங்கள் அவள் கையால் காலி ஆவதற்கா....

“என்னடா மது.... ரொம்ப tired-ஆ இருக்க.... வெயில் ஒத்துக்கலையா... மூஞ்சி எல்லாம் வேற சிவந்து இருக்கு....”

“ம்ம்ம் மூஞ்சி சிவந்து இருக்கறது வெய்யிலால இல்லை.... கோவத்தால....”

“கோவமா... என்னாச்சு மது... யாராவது ஏதாவது உன்னை சொல்லிட்டாங்களா... இல்லை வர்ற வழில எதாச்சும் பிரச்சனை ஆகிப்போச்சா....”

“ஏங்க நான் யாருங்க....”, மது கேட்க....

“அப்பா நீங்க அடிக்கடி ‘நீர் ஒரு மங்குனி மது’, அப்படின்னு அம்மா காதுக்கு கேக்காத மாதிரி சொல்லுவீங்களே அதை சொல்லவா....”, தன் பெண் கேட்க இந்த முறை மானசீகமாக இல்லாமல் நேராகவே தன் பெண் காலில் விழுந்துவிடலாமா என்று யோசிக்க ஆரம்பித்தான் ஷங்கர்....

“நீ மதுமதி... என்னோட ஒரே ஒரு ஆசை செல்ல பொண்டாட்டி... அப்பறம் இந்த லிட்டில் ஏஞ்சலோட அம்மா...”, தன் மகளை குளிர்விக்கும் வார்த்தைகளைக் கூறி தன் மனைவியிடம் மகள் தன்னை போட்டுக் கொடுப்பதிலிருந்து தப்பித்தான்...

“ப்ச் அதை கேக்கலைங்க.... நான் ஆல் இன் ஆல் மதுன்னு தெரியுமா தெரியாதா.... என்னைப் பார்த்து அந்தக் கமலா, கலைக்கும் எனக்கும் சம்மந்தம் இல்லைன்னு சொல்லிட்டா...”

“அவங்களுக்கு எப்படி கலையும், நீயும் சம்மந்தப்பட்டிருப்பீங்கன்னு தெரியும் மது... கலை எனக்கே ரெண்டு விட்ட தங்கச்சி.... எப்பவோ ஒரு வாட்டிதான் நாமளே அவளை பாக்கறோம்...”, ஷங்கர் பேசிக்கொண்டே போக மதுவின் பல் அறைபடும் சத்தம், மாவு மிஷின் சத்தத்தைவிட அதிகமாகக் கேட்டது....

“அப்பா நீங்க ஏதோ தப்பா சொல்லிட்டீங்கன்னு நினைக்கறேன்... பாருங்க அம்மா முகத்துல ரெட்டிஷ்னஸ் அதிகமாகுது.....”, அஸ்வதி சொல்ல ஷங்கர் தன் பேச்சை பாதியில் நிறுத்தினான்....

“இப்படி ஒரு ஞானசூன்யமா நீங்க இருப்பீங்கன்னு நான் நினைக்கவே இல்லைங்க... நான் சொன்னது உங்க தொங்கச்சி கலை இல்லை.... ஆர்ட் அந்தக் கலையை....”

“அவங்க சரியாத்தானே சொல்லி இருக்காங்க மது... உனக்குத்தான் பாட்டு, டான்ஸ் ரெண்டும் வராதே....”, அப்போ அப்போ தவறுதலாக ஷங்கர் உண்மை பேசிவிடும் சில தருணங்களில் ஒரு தருணமாக அது அமைந்தது....

அவ்வளவுதான் மது ஷங்கரை வச்சு செய்து விட்டாள்... அது எப்படி அவளைப் பார்த்து அப்படி சொல்லலாம்... அவளின் பரம்பரை பற்றி தெரியுமா ஷங்கருக்கு.... என்று கிட்டத்தட்ட அரை மணிநேரம் காதிலிருந்து ரத்தம் வரும் அளவுக்கு பேச...

அஸ்வதி ஏன்ப்பா சும்மா இருக்க முடியாதா என்று ஷங்கரை பரிதாபப்பார்வை பார்க்க...  தெரியாம உண்மை பேசிட்டேண்டா என்று அதைவிட பரிதாபமாக அவளைப் பார்த்தான் ஷங்கர்....

“சரி சரி டென்ஷன் ஆகாத மது.. எதுக்கு அவங்க உன்னை பார்த்து அப்படி சொன்னாங்க.....”

“இன்னைக்கு எங்க லேடீஸ் கிளப்ல நாங்க எல்லாரும், வரப்போற ஆண்டு விழாவைப் பத்தி டிஸ்கஸ் பண்ணிட்டு இருந்தோம்... யார் யார் என்ன வேலை செய்யலாம்ன்னு வரிசையா எங்க ப்ரெசிடென்ட் லலிதா சொல்லிட்டு வந்தாங்க.... என்னை பாட்டு அப்பறம் டான்ஸ் ரெண்டுத்துக்கும் இன்சார்ஜா போட்டாங்க....”, மது கூற, என்னாது நீ இன்சார்ஜா, அதிர்ச்சியில் மறுபடி உண்மை பேச வந்த ஷங்கரை நல்ல வேளையாக அவனின் தவப்புதல்வி கையை அழுத்தி தடுத்து  நிறுத்தினாள்...

ஏற்கனவே காதிலிருந்து வந்த ரத்தம் நிற்காத நிலையில் மறுபடியும் வந்தால் யாரால் தாங்க முடியும்... சரியான சமயத்தில் தன்னை காப்பாற்றிய தன் மகளை சிவாஜியை விட நவரசங்கள் பல முகத்தில் காட்டி நன்றியுடன் பார்த்தான்....

“அப்போதான் அந்தக் கமலா எழுந்து ப்ரெசிடென்ட்ஜி நம்ம மதுக்குத்தான் பாட்டு, டான்ஸ் ரெண்டுமே வராதே அப்பறம் எதுக்கு அவளை அதுக்கு இன்சார்ஜா போடறீங்க.... அப்படின்னு என்னை நக்கலா பார்த்துட்டே கேட்டாங்க... எல்லாருக்கும் நேரா எனக்கு ரொம்ப ஷேமா போச்சு...”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.