Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
சிறுகதை - ஆகஸ்ட்னா தள்ளுபடி – சசிரேகா - 5.0 out of 5 based on 1 vote
Pin It

சிறுகதை - ஆகஸ்ட்னா தள்ளுபடி – சசிரேகா

sareeShop

கார்த்திக்” என கொஞ்சலாக சொல்போனில் அழைத்தாள் மலர்

”சொல்லு கண்மணி” என அவளை விட கொஞ்சலாக செல்போனில் பேசினான் கார்த்திக்

”நாம லவ் பண்ணி எத்தனை நாளாச்சி”

“நாளையோட 1 மாசம் ஆகப்போகுது”

”நம்ம காதலை நினைச்சி எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு கார்த்திக்” என மகிழ்ச்சியாக சொன்னாள் மலர்

”எனக்கும்தான்”

“தினமும் எனக்கு நீ ரோஜா பூவும், கிரீட்டிங் கார்டும் கொடுத்து அசத்தறியே இதெல்லாம் உனக்கு யார் சொல்லிக்கொடுத்தா, இதுக்கு முன்னாடி நீ யாருக்காவது இப்படி பூ கொடுத்திருக்கியா”

“சே சே நானா இல்லை மலர் உன் பேர்லயே மலர்ன்னு இருந்ததாலயே என் வீட்ல நான் ரோஜா செடி வளர்த்தேன். தினமும் முதல்ல பூக்கற பூ உன் தலையிலதான் இருக்கனும்னு ஆசைப்படுவேன். என் ஆசையை அந்த செடியை நிறைவேத்தும். நானும் தினமும் உனக்கு பூ தருவேன்.”

“நான் ரொம்ப லக்கி கார்த்திக்”

“நானும்தான்”

“இந்த 1 மாசம் நாம லவ் பண்ணப்ப நமக்குள்ள எந்த சண்டையும் பிரச்சனையும் வரலை பாரேன், என் ப்ரெண்ட்ஸ்ங்க கூட கேட்டாங்க சின்னதா ஒரு சண்டை கூடவா இல்லைன்னு நான் இல்லன்னு சொல்லவும் அவங்க வாய் அடைச்சி போயிட்டாங்க கார்த்திக்”

“அப்படியா பார்த்து மலர் அவங்க பொறாமை படப்போறாங்க, அவங்க கண் பட்டே நாம பிரிஞ்சிடப் போறோம்” என கார்த்திக் சோகமாகச் சொல்ல அதைக் கேட்டு செல்லமாக வருத்தப்பட்டுக் கத்தினாள் மலர்

”அப்படி சொல்லாத கார்த்திக் எனக்கு கெட்ட கோபம் வரும்” என சொல்ல உடனே சிரித்தான் கார்த்திக்

”சரி சரி சாரி போதுமா மலர் குட்டி என்ன பண்ற தங்கம்”

“வீட்ல டிவி பார்க்கறேன்”

“திடீர்ன்னு போன் பண்ணியிருக்கியே என் ஞாபகம் அதிகமா வந்துச்சா”

“ஆமாம்”

“சூப்பர் வாயேன் அப்படியே வெளிய ஒரு உலாத்து உலாத்திட்டு வரலாம்”

“நோ கார்த்திக் ஈவ்னிங் நான் அம்மாவோட துணிக்கடைக்குப் போறேன்”

“எதுக்கு”

“ஆடித்தள்ளுபடி போட்டிருக்காங்க கார்த்திக் அதான் துணி எடுக்கலாம்னு”

“நானும் வரலாமா பிரச்சனையாகாதுல்ல”

“வேணாம் கார்த்திக் அம்மாவுக்கு தெரிஞ்சா ப்ராப்ளம், இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் நீயும் உன் படிப்பை முடிச்சிடுவ அப்புறம் நீ வேலைக்கு போயிடுவ, நானும் படிப்பு முடிச்சதும் வீட்ல சொல்லிக்கலாம் இப்ப சொன்னா நம்மளை பிரிச்சிடுவாங்க”

“அதுவும் கரெக்ட்தான் சரி சரி நான் வரலை ஆமா யாருக்கு துணி எடுக்கப்போற”

“எனக்குதான் கார்த்திக், நான் போன் வைச்சிடறேன் அம்மா வர்றாங்க பை பை” என அவசரமாக போனை கட் செய்தாள் மலர். கார்த்திக்கும் அமைதியாக தன் பக்கத்தில் இருந்த நண்பன் அசோக்கிடம் பேசினான்

”மலர்கூட லவ் பண்ண ஆரம்பிச்ச நாட்களை நினைச்சாலே மனசுல பசுமையா இருக்கு மச்சான்”

“பார்த்து  மச்சி பசுமையில செடி கொடி வளர்ந்துடப் போகுது”

“டேய் என்ன கிண்டலா”

“பின்ன என்னடா அநியாயமா அந்த பொண்ணுகிட்ட பொய் சொல்றியா, இது அடுக்குமாடா, நெஞ்சை தொட்டுச் சொல்லு நீ இதுவரைக்கும் எந்த பொண்ணுக்கும் பூ தரலை”

“நான் பூ கொடுத்திருக்கேன், பூ கொடுத்த பொண்ணெல்லாம் என்னை லவ்வா பண்ணாங்க? ஏதோ மலர்தான் என் மனசை புரிஞ்சி ஏத்துக்கிட்டா”

“அதான்டா சந்தேகமா இருக்கு இதுக்கு முன்னாடி வந்த பொண்ணுங்க எல்லாம் உன்னை ரிஜக்ட் பண்ணப்ப எப்படி மலர் மட்டும் ஓகே சொல்லிச்சி”

“வேணாம் மச்சான் கண்ணு வைக்காத, நாளையோட நானும் மலரும் லவ் பண்ண ஆரம்பிச்சி 1 மாசம் ஆகப்போகுது”

“ஓ அப்படியா விழா எடுக்கப்போறியா மச்சான்”

“விழாவா?”

“ஆமாம் உன்னையும் ஒருத்தி 1 மாசம் காதலிச்சிருக்காளே, கண்டிப்பா ட்ரீட் வேணும் மச்சான்”

“முடியாது போ கையில 10 பைசா இல்லை”

“பொய் சொல்லாத மச்சி காலையிலதானே உன் அம்மா உனக்கு பணம் கொடுத்ததா சொன்னாங்க”

“அது துணி வாங்கறதுக்காக நான் 4 மாசமா புதுத்துணி வேணும்னு கேட்டேன், அதுக்கு இப்பதான் தந்தாங்க ஆடித்தள்ளுபடியில எடுக்கச் சொன்னாங்க”

 •  Start 
 •  Prev 
 •  1  2  3  4  5 
 •  Next 
 •  End 

About the Author

Sasirekha

Sasirekha

Latest Books published in Chillzee KiMo

 • AndrilAndril
 • I MyselfI Myself
 • Nin thiruvadi saranamNin thiruvadi saranam
 • Pinai vendum panmaaya kalvanPinai vendum panmaaya kalvan
 • Tholaivil Ni Ninaivil NaanTholaivil Ni Ninaivil Naan
 • Thedum Kan Paarvai ThavikkaThedum Kan Paarvai Thavikka
 • Un nesam en suvasamUn nesam en suvasam
 • Unnai kan thedutheUnnai kan theduthe

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: சிறுகதை - ஆகஸ்ட்னா தள்ளுபடி – சசிரேகாvijayalakshmi 2018-07-12 22:48
nice
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - ஆகஸ்ட்னா தள்ளுபடி – சசிரேகாmadhumathi9 2018-07-12 05:51
:clap: nice stiry mam. Jan thodangi aug varai kathai mudinthathu.december varai redi pannivitteergala or inithaan yosikkanuma? Pudhu pudhu ideavaal kalakkureenga mam. (y) :clap: :thnkx: :GL:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - ஆகஸ்ட்னா தள்ளுபடி – சசிரேகாThenmozhi 2018-07-11 21:28
nalla kathai Sasirekha.

Karthik oda marketing skills ethirparatha vithathil veli vanthathu nice (y)
Reply | Reply with quote | Quote
Share your novel

Come join the FUN!

Write @ Chillzee
Go to top